இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கனவிடுக்கின் வழியாக வருபவள்

படம்
கதவிடுக்கின் வழியாக... வருகிறது காற்று கனவிடுக்கின் வழியாக... வந்துவிடுகிறாள் அவள் பிணந்தின்னிகள் நிறைந்த காடு... என் வாழ்க்கை பிறக்கவும் இல்லாது..., இறக்கவும் இயலாது..., எண்ணிய தூரம் வரை... இறைந்தே கிடக்கிறது.

சந்தோஷங்களை பறித்துக்கொள்ளும் கொண்டாட்டம் வேண்டாம் நண்பர்களே

படம்
தீபாவளி கொண்டாடுவதை விட ... அதன் பாதுகாப்பு இப்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஒரு புறம் பட்டாசு... மற்றொரு புறம் புத்தாடை களேபரங்கள். இரண்டும் செலவு செய்வதில் தான் முடிகிறது என்றாலும் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி குழந்தைகளின் முகத்தை பாருங்கள் - அது அளவிட முடியாதது. ஆனால், பல நேரங்களில் கொண்டாட்டம் பொறுப்பற்றதாக கடந்துவிடுவதால் கொண்டாட்டம் பல கவலைகளை சந்திக்கும் சூழலை ஏற்படுத்தி விடுகிறது. ஒருபுறம் புத்தாடைகளோடு பட்டாசு வெடித்தபடி இருக்கும்...மற்றொரு புறத்தில் வெடித்து சிதறிய நெருப்பால் ஒரு வீடு எரிந்து கொண்டிருக்கும்... ஒருபுறம் கணவன், பிள்ளைகளுக்காக விடிய விடிய பலகாரம், சமையல் என தாயார் தவித்துக்கொண்டிருப்பார்... மற்றொரு புறம் குடித்துவிட்டு கொண்டாட்டத்தை கவலையாக்கி விட்டு எங்கேனும் ஒரு மரத்தடியிலோ, சாலையோரத்திலோ கணவன் படுத்திருப்பார். ஒருபுறம் தந்தை வீட்டுக்கு செல்வதற்காக மனைவி புத்தாடை அணிந்து காத்திருப்பார்... மற்றொரு புறம் யாரிடமோ கணவன் சண்டை நடத்தி ரத்தக்காயங்களோடு வீடு வந்து சேர்வான். எத்தனை வேறுபாடுகள் நிறைந்ததாயிருக்கிறது வாழ்க்கை. ஆசையாசையாய் குடும்பத்தோ...

பழங்குடி மக்கள் அகராதி

படம்
ஒரு மொழியை புரிந்துகொள்ள, ஒரு உணர்வை வெளிப்படுத்த, நமக்குள்ள சிக்கல்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நம்முடைய பூர்வீக மக்களின் மொழியை, அழித்துவிடாமல் காக்கும் அதே நேரத்தில், நவீனம் குறித்த புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய அவசியம் நம் எல்லோருக்குமே ஏற்பட்டுள்ளது.  நம்முடைய சமகாலத்தில் தாய் மொழி என பெருமை அடித்துக்கொள்ளும் நம் ஊரில் தான் நமக்கு வெகு அருகில், நம்முடைய் பூர்வீக, ஆதிவாசி, பழங்குடி மக்களும் தங்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு மொழியை காலம் காலமாக, தனித்தன்மையுடன் பேசி வருகிறார்கள். அந்த மொழி குறித்த புரிதல்கள் நமக்கும், நாம் பேசும் தமிழ் அவர்களுக்கும் இன்னும் புரியவேயில்லை. சமூக ஆர்வலர்கள், இயக்கங்கள், அமைப்புகள் என பலரின் போராட்டங்களால் தான் ஆதிவாசி மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து வெளி உலகுக்கு தெரிய வருகிறது. அப்படி எங்கேனும் ஒரு புத்தகத்தில் நாம் படிக்கும் போதுதான் இத்தனை கஷ்டமா என வாய்பிளக்கிறோம். நாம் புறந்தள்ளி வைத்திருக்கிற நமது சகோதரர்களுக்கு மொழியை எளிமை படுத்தும் வகையில், அவர்களின் உரையாடலை பதிவு செய்ய வேண்...

அந்திமல்லி. 3

படம்
அந்திமல்லியுடனான உரையாடல் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஒருபக்கம் அது ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அவள் குறித்த பின்னணியை தெரிந்துகொள்ள தயாராகவே இருந்தேன். ஆகையால் அந்த சம்பவம் குறித்து முகநூல் பதிவிலும் தெரியப்படுத்தியிருந்தேன். சொல்வதென்றால் அந்த ஒரு நாளுக்கு பின்னர் நானே கொஞ்சம் கொஞ்சமாய் மாறி கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை. எப்படியாகிலும் அந்திமல்லி கதையை எழுதவேண்டும் என்கிற ஆசை இருந்ததே ஒழிய, அதனால் வரப்போகும் பின் விளைவுகளை நான் யோசிக்கவேயில்லை. டேய் என்ன பீலா வுடுற....அப்படித்தானே உங்களுக்கு தோன்றுகிறது. ஆனால், கதையோ வேறு. அந்த  ஒரு நாள் நிகழ்வை எழுதிய உடனேயே ஆரம்பித்துவிட்டது எனக்கு சங்கு. அதை பின்னர் சொல்கிறேன். நீங்களும் நானும் மனிதர்களை சந்திப்பதற்கும், அந்திமல்லி சந்திப்பதற்கும் ஆயிரம் வித்தியாசம் இருக்கிறதில்லையா..? கதைக்களம் அமைவது இயற்கையானது. அதை எந்த இடைஞ்சலும் இல்லாமல் எடுத்துக்கொள்வதுதானே முறை. அதைத்தான் செய்ய முயற்சித்தேன். அதற்காகவே அந்திமல்லியை ஆய்வு கட்டுரையாக்கியிருக்கிறேன் ஆய்வகத்தில்....... சொல்லப்போனால், கற்பனைகளை எழுதுவதால் என்...

அந்திமல்லி.2

படம்
சாலையில் மிதமான நெரிசல் இருந்ததால் மெதுவாகவே சென்று கொண்டிருந்தது பேருந்து.  வெப்ப காற்றில் புகையை கக்கியபடி  கோடம்பாக்கம் பாலத்தின் மீது தடதடத்துக் கொண்டிருந்த 26 எண் கொண்ட பச்சைநிற பேருந்தில் அந்திமல்லியுடன்  ரத்தம் கக்கி கொண்டிருந்தது என் நிமிடங்கள். எங்களுக்கு முன்னாலிருந்த சீட்டில் இரண்டு மாமிக்கள் அமர்ந்திருந்தார்கள்... அதில் ஒருவர் என்ன நினைத்தாரோ... என்னை பார்த்து முகம் சுளிக்கும் படியாய் முகத்தை கோனளாக்கி காட்டிவிட்டு வெடுக்கென்று திரும்பி முனுமுனுத்தார் . ”கலிகாலம், இதையெல்லாம் நான் பாக்கனும்னு என் தலையில எழுதியிருக்குன்னு”  அவர் நினைத்திருக்கலாம். தினமும் இந்த வழியாய்தான் வருகிறேன் இதுபோல் ஒருநாளும் நடந்ததில்லையே என தோன்றியது எனக்கு. ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். அந்திமல்லியும் நானும் பேசிக்கொண்டு வந்ததில் நான் பேசியது மட்டும் தான் அந்திமல்லி காதில் விழுந்தது. அப்பறம் என்னன்னனு கேக்கறீங்களா..?  அந்திமல்லி பேசியது அங்கிருந்த அத்தனை பேர் காதுகளிலும் விழுந்தது. அந்த சூழலை கற்பனை செய்ய முடிகிறதா உங்களால்...? தொழில் ரீதியாக பலரிடம் பே...

அந்திமல்லி.1

படம்
வடபழனியில் இருந்து வள்ளுவர் கோட்டம் வருவதற்கே பெரும்பாடு என்பது போல....நீண்ட நேரமாய் நிற்க முடியாமல் கிடைத்த சீட்டில் அமர்ந்து கொண்டேன் நான். அந்த இருக்கை அந்திமல்லியின் இருக்கைக்கு அடுத்த இருக்கை என்பதுதான் கதையின் கதை. அந்த இருக்கையும் பேருந்தின் கடைசி இருக்கை என்பது மையக்கரு.... அந்திமல்லி யார் என்கிறீர்களா...? ஒரு மாலை வேலையில், வியர்த்து ஒழுகும் பயணத்திற்கிடையே எனக்கு அறிமுகமான உடல் விற்கும் தொழிலாளி.  நிமிடத்துக்கு நிமிடம் மனதை விற்றுக்கொண்டிருக்கும் நமக்கு உடல் விற்பது கேவலமானதாகத்தான் தோன்றுகிறது... இங்குதான் எனக்குள் கதை ஆரம்பமானது.  நான் அந்திமல்லியை அப்பொழுதுதான் உற்று கவனித்தேன். பழுப்பு நிறத்தில் ஒரு பட்டுப்புடவை அவ்வபோது காற்றில் அலைந்து கொண்டிருந்தது. காலையில் இருக்கி கட்டிய தலைமயிர் கட்டு தளர்ந்து காற்றில் அவள் கண்களையும் கன்னத்தையும் மறைத்தபடி இருந்தது. இடது கையால் தலைமயிரை ஒதுக்கியபடி யாரிடமோ அலைபேசியில் பேசி முடித்துவிட்டு என் பக்கம் திரும்பி நிதானமாக புன்னகைத்தாள்.  கூடவே என்கையை பிடித்து ஏதோ ஒரு அழுத்தத்தை எனக்குள் திணித்தாள். அவள் கண்கள்...

கட்டுடைக்கும் கபாலி

படம்
பா.ரஞ்சித் இயக்கத்துல தாணு தயாரிச்சு இந்தியாவின் மிகப்பெரிய வசூல் சாதனையை செஞ்சிருக்கிற படம் கபாலி. எப்போதும் ரஜினி சுற்றி இருக்கும் சர்ச்சை, இந்த படத்துல இயக்குனர சுத்தி வட்டமடிக்குது. கபாலி ஒரு தலித் படம் என்று. ஒரு தலித் படத்தை ஏன் ரஜினியை வைத்து எடுத்தார் என்று? இதை விட கீழ்த்தரமான விமர்சனங்களை இனி காணவேண்டிய அவசியமில்லை. ரஞ்சித் இயக்குனர் இயக்கினார்... ரஜினி நடிகர் நடித்திருக்கிறார்...  பார்க்க முடிந்தால், பிடித்தால் பார்க்கலாம்... இல்லையேல் அடுத்த வேலையை பார்த்திருக்கலாம்... முடியவில்லை போலும், எங்கேனும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம்... ஆம் அதைத்தானே பலருக்கு செய்திருக்கிறது கபாலி. கபாலியை பார்த்தால் எங்கும் சாதிக்கான அடையாளங்களை காண முடிவதில்லை.. கதையோ மலேசியாவில் நடக்கிறது. எப்போதும் முதலாளிக்கு பயந்தவர்களாகவும், அடிமைகளாகவும், நோயாளிகளாகவும் மட்டுமே படைக்கப்பட்ட கபாலிகள். சுதந்திரமானவர்களாக படைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதென்பது ஒன்றும் அதிசயமில்லை. எரிச்சலை வெளிப்படுத்த, எங்கே அதிகாரம் குறித்த பிரக்ஜை மக்களுக்கு ஏற்பட்டு விடுமோ என எண்ணுவதில் ஆச்ச...

ராஜீவ்காந்தியை விட பெரிய மனிதர்

படம்
தரங்கம்பாடியில் இருந்து பொறையார் செல்லும் சாலையில் ராஜீவ்காந்தி சிலையருகே ஒரு மனிதரை சந்தித்தேன். பெரும்பாலும் அங்கேயே தான் இருக்கிறார். மனிதர் சிறிய பெட்டிக்கடை வைத்திருக்கிறார். இலேசான வெந்நிற தாடியில் வறுமை மறைக்கும் வயோதிகம். பெயர் என்னவென்று தெரியவில்லை என்றாலும், பார்த்த உடனே சிரித்து பேசும் முகம். பற்கள் உள்ளடங்கியிருந்ததால் சிரிக்கும் போது கண்ணத்தில் குழிவிழுந்தது. ரஜினியை நிறைய பிடிக்கும் என்றார். கபாலியை போல் போஸ் போட்டோவுக்கு போஸ் வேறு கொடுத்தார். ஒரு 3 ஆயிரம் ரூபாய்க்கு பெட்டிக்கடை வைத்துவிட்டார் போலும். மரசட்டங்களால் தைக்கப்பட்ட அந்த பெட்டிக்கடையில் ஒரு மனிதனுக்கு தேவையான கடைசி வாழ்க்கையை எளிதாக கடந்துவிடலாம் என்கிற நம்பிக்கையை தந்தது பார்வைக்கு. வெயிலும், மழையும் எப்போதும் கடையின் உள்ளே வந்து செல்லும் உப்பு காற்றி எளிய வாழ்க்கை. வாழ்ந்துதானே ஆகவேண்டும்..... இரண்டு மூன்று பிளாஸ்டிக் போத்தல்களில் முறுக்கு, தேன் மிட்டாய், கமருக்கட்டு இன்னபிற தின்பண்டங்கள்...அப்புறம் அவர். பெரும்பாலும் தொங்கிகொண்டிருக்கும் தின்பண்டங்களோடு அவரும் தொங்கியபடியே இருந்திருப்பதாக...

உலக மக்கள் தொகை நாள்

படம்
உண்ண உணவும், உடுத்த உடையும் பற்றாக்குறை... உழலும் வாழ்க்கையில் உருப்படியாய் இருந்த எல்லாம் கெட்டு   நீர், நிலம், காற்று, ஆகாயம் என மாசு... சுகாதாரம் சீர்கேடு, சுற்றிலும் இயற்கை சிதைப்பு... செயற்கையை நம்பி சூழலை கெடுக்கும் புதிய சமுகம்... இடப்பற்றாக்குறை, வேலையின்மை, இன்னபிற பிரச்னைகள்... பசியும் பட்டிணியும் பிரசவிக்கும் திருட்டு, கொலை, கொள்ளை என; நினைவில் கொள்க.......... இது எல்லாமே உலகில் மக்கள் பெருக்கத்தால் நிகழும். நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன..... இல்லையா?

யாருக்கும் தெரியாமலா நடக்கிறது கொலை?

படம்
எதற்காகவென்றெல்லாம் காரணம் சொல்ல தேவையில்லை  சமூகத்துக்கு ....... ஏதேனும் ஒருவகையில் சொட்டிக் கொண்டுதானிருக்கிறது  களத்தில் ரத்தம் ....... காதலா, சாதியா, மதமா, கடனா, சொத்து தகராறா என்பதை தேடுவதிலேயே பெரும்பாலும் கழிந்து விடுகிறது  காவல் தெய்வங்களின் பணி. கேள்வி எழுப்புகிற போதெல்லாம் கிழிந்த சட்டையை தைத்தே தப்பித்து கொள்கிறது கரிசன அரசு யாருக்கும் தெரியாமலா நடக்கிறது கொலை?

தவறென்று தெரிந்தும் செய்கிறோம்

படம்
தவறென்று தெரிந்தும் செய்கிறோம்... தவறை தவறாக  பார்க்காமல் பார்ப்பதால்... தவறென்று தெரிந்தும் செய்கிறோம்... சரியென்று சரியென்று சொல்லி சமாதானம் செய்யும் மனத்தை  செய்துவிடுகிறது செயல். ..  அதனால் தவறென்று தெரிந்தும் செய்கிறோம்...

சாதிவாடை

படம்
பழமைக்கும் புதுமைக்குமான போராட்டத்தில்       மனிதன் என்பதை மறந்து... ஒவ்வொரு நொடிகளிலும் - எங்கள்       உதிரத்தின் சொட்டுகளை       தடவி தடவி பார்த்தபடி  சிவப்பணுக்குள்ளே...       நீந்தி சிரிக்கிறது எங்களின் நாட்கள். வாழும் வெறிபிடித்து ஆட்டுவதால் நாங்கள்       மரணித்து கிடப்பதாய் நடிக்கிறோம். வண்ணங்கள் குழைத்து காதல் செய்தாலும்       கத்திமுனை பார்க்காமல் உறக்கமில்லை  எங்களுக்கு. ஆம்,  துரத்தியபடியே இருக்கிறது சாதிவாடை

வெறிகொண்டெழுந்திருக்கும் வாழ்க்கை

படம்
இரவுகளை உடைத்து பகல் செய்வதாயில்லை... இரவும் அழகு பகலும் அழகு என்பதாய்... பொய்மை உதறி உண்மை செய்வதாயில்லை... சமயத்தில் பொய்மையும் அழகு உண்மையும் அழகு என்பதாய்... வெறிகொண்டெழுந்திருக்கும் வாழ்க்கை... சில நேரங்களில் மட்டும் சில நேரங்களில் மட்டும் தான் விடிந்த பின்பும் எரியும் விளக்குபோல...

நம்பிக்கையின் குத்தகைக்காரி

படம்
விடிய விடிய விஷமருந்தியும் உயிரிழக்காதவள்.  விரக்தியாய் ஒரு வார்த்தை பேசினாலும் பிடிக்காது அவளுக்கு. ஆகவே தான், அந்த ஈரத்திலேயே என்னையும் வளர்க்கிறாள் போலும் என் தாய்,   என் மகனை பெற்றதால்..  என்னையும் பெற்றவள். 

‪‎வரதட்சணையாய்‬...

படம்
உறவுகள் கேட்டார்கள்... பெண் வீட்டில் என்ன கேட்டிருக்கிறாய் என்று ..? ஒரு தாம்பூலத்தில்...  கொஞ்சம்  அன்பை அள்ளி வர சொல்லியிருக்கிறேன் என்றேன்....!

இதற்கா மனிதனுக்கு ஆறாம் அறிவு

இருபது வருசமா சோறு போட்டு, பாசங்காட்டி.. பாதுகாத்து, நல்லது கெட்டது செஞ்சி, ஆசப்பட்டத வாங்கி குடுத்து புள்ளைய பெத்தவன் பத்தரமா வளப்பான். எங்கிருந்தோ வாரவன் காதல் பண்ணி தூக்கிட்டு போய்டுவாரா? ஒன் வீட்டுப் பொண்ணு காதலிச்சா ஏத்துக்க முடியுமா? உன்னால முடியுமா? எனக்கு அழுகைதான் உண்மையில் வந்தது. ஆனால், சிரித்தேன் அப்போது... அவர்கள் தொடர்ந்தார்கள். எவ்ளோ திமிரு இருக்கனும். பெத்தவங்கள நெனச்சி பாருங்க. எவ்ளோ கஷ்ட பட்டுருப்பாங்க. அதான், ரோட்ல ஓட ஓட வுட்டு போட்டானுங்க. எங்கள பொருத்த வரைக்கும் கொலை செஞ்சது சரிதான். கட்டுப்பாடு கெளரவம்லாம் என்னாறது? பெத்தவங்கள கஷ்ட படுத்திட்டு திருமணம் செய்யக்கூடாதுங்றதுல ஞாயம் இருக்கு, அதுக்காக கொலை செய்யறது சரியா?  ன்னு கேட்டேன். என்னங்க புரியாம பேசிட்ருக்கீங்க. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்டுப்பாடு இருக்கு. சரி நீங்க சொல்றபடியே வச்சுப்போம். எல்லோரும் பொது கம்யூனிட்டிக்கு வாங்க. நீங்க சொல்ற மாதிரி காதல ஏத்துப்போம். அரசாங்க ஒதவி வாங்க ஒங்களுக்கு சாதி வேணும். கல்யாணம்னா கசக்குதா?  இப்பவும் சொல்றோம், நாங்க காதல எதுக்குல. அவங்கவுங்க அவங்க சாதிக்குள்ளய...

சாதி இல்லாத வானம்

ஆசை ஆசையாய்... வாழுகிற எண்ணத்தோடு காதல் திருமணமாகி மனதுக்கு பிடித்தவனோடு வாழ்க்கையை அனுபவிக்கும் தருணத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளம் பதை பதைக்கும் கொடூரத்தை நிகழ்த்தி விடுகிறார்கள் ஆணவக்காரர்கள். காதல் பறவைகள் இனிமை ததும்ப புண்ணகைக்கும் வெளிகளில் எங்கிருந்தோ விரியன்கள் வெளிப்பட்டு விஷம் கக்கிவிடுகின்ற மனசாட்சியற்ற மனிதர்களை சுமந்து கொண்டிருக்கும் பூமி அழியத்தான் வேண்டுமென தோன்றுகிறது.                     முருகேசன், இளவரசன், கோகுள்ராஜ், சங்கர் இதெல்லாம் வாழும் ஆசையில் அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களின் உடல்கள். வாழ வேண்டிய வயதில் வரலாற்றின் எடுத்துக்காட்டுகளுக்காக உரமிடப்பட்ட விதைகள். வாழ்வதற்கே உரிமையில்லாத போது எப்படி காதலித்து திருமணம் புரிந்து, பெற்றவர்களின் முன்பு சந்தோஷமாக வாழலாம்? அது எத்தனை பெரிய தவறு. அதற்கு என்ன செய்யலாம்..? கொலையை தவிர. ஆணவக் கொலை செய்வது புனிதம் அதனால் அதையே செய்யலாம். அண்ணனே தங்கையை வெட்டலாம். தந்தையே மகளை நிர்வாணம் ஆக்கி ஓடவிட்டு பழி தீர்க்கலாம். உறவுக்காரர்களே விஷம் கொடுக்கும் பாக்கியத்தை ஏற...

ஆத்திரம் தீர அடித்தும்

படம்
அப்பனுக்கு முடியல... ஆத்தாளுக்கு சொகமில்ல... தம்பிய பாம்பு கடிச்சிருச்சாம்... அண்ணனுக்கு மாரடைப்பு ... புருசன்காரன் போயிட்டானே... புள்ளைக்கு என்னாச்சோ... இப்படி, பதறி தவித்து வரும் ஆயிரம் அழுகைகளை ஒவ்வொரு நாளும் பேருந்தில் பார்த்திருக்கிறோம் பெண்களிடம். யாரென்றே தெரியாதவர்களிடம் எல்லாம் சொல்லி அழுவதில் ஒரு ஆறுதல் கிடைத்து விடுகிறது அவர்களுக்கு.  ஆனால் இப்போதெல்லாம் அப்படியல்ல என தோன்றுகிறது. பேருந்து பயணமே பெண்களை பொருத்தவரை ஒரு தனித்துவமான புரிதலோடுதான் இருக்கும் போல, அவர்களை பொருத்தவரை அது நம்பிக்கை அற்றது. நம்மை சுற்றி யார் இருக்கிறார்கள் என்கிற தெளிவற்றது. நல்லவனா, கெட்டவனா, திருடனா, கொலைகாரனா.. இப்படி நிறைய. டிக்கெட்டின் சாக்கில் உரசலை தந்து காமுற செய்கிறவர்கள் அருகிலிருக்கிறார்கள் என்கிற சந்தேகத்தோடே எப்போதும் பயணிக்கிறார்கள் போலும் பெண்கள். உண்மைதான், எவனோ ஒருவனின் கை செய்த வேலையால் பேருந்து பயணத்தில் கூட்டத்தின் நடுவே ஒற்றை பெண் அழுததை பார்த்தபோது வெட்கம் பிடுங்கி தின்றது எங்களை. பயணங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணத்தை வைத்திருக்கிறது. பெண்கள்...

வேணும்ங்கறதுக்காக ஓடி ஓடி வர்ரீங்க...

படம்
அந்த வார்த்தை ஒரு அர்த்தம் பொதிந்ததாய் இருந்தது. அமைதியான நீரின் தடத்தில் வீசப்பட்ட கல் போல அந்த வார்த்தை மெளனத்தை தின்று செரிக்கும் முரட்டு வன்மத்தை போகிற போக்கில் பேசிய போது அவனால் சும்மாயிருக்க முடியவில்லை. தேவையை தீர்த்துக் கொள்வதற்காக மட்டுமே தங்களை பயன் படுத்துகிறவர்களை பார்த்து கேட்கிற கேள்வி அது. தேவை தீர்ந்ததும் தூக்கி எறிந்துவிட்டு போனவர்களை பார்த்து துப்புகிற எச்சில் அது. எதற்காக என் காதில் படும்படி... என யோசித்து கிடக்கிற நாழிகை எங்கும் உச்சி நகர்ந்து வெப்பம் மேற்கு நோக்கி சரிந்துவிட்டிருந்தது. இரவின் நேரமெங்கும் அவனோடவே ஒட்டிக்கொண்டிருக்கிறது அந்த வார்த்தை. தூக்கமில்லாமல் புரண்டது இரவு. ஏன் அப்படி கேட்டாள்...... எங்கள் தேவை என்ன என்றே தெரியாமல் இருக்கும் போது, எங்களுக்குள் தீர்ந்து போக என்ன இருக்க முடியும்? நெருக்கம் உடைகிற போது வெளிப்படும் வார்த்தை பிரயோகிக்க பட்டதை பார்த்து நடுங்கி கிடக்கிறது உள்ளம் அவனுக்கு. ஊருக்கு போனவளை விசாரிக்காமல் இருக்கிறேனே.... ஒருவேளை நான் ஏன் அவள் மீது இப்படி அக்கறை இல்லாமல் இருக்கிறேன் என என்னை பார்த்து உரிமையோடு கேட்கிற கேள்வ...

கடவுள் ஃபோன் பேசினார்

படம்
அதிசயம் நடக்குமென்று படித்திருக்கிறேன். அது நடந்து உணர்ந்து அநுபவிப்பதுஇப்போதுதான் முதல் முறை என நினைக்கிறேன்.  அவரை சந்தித்து 2 மாதம் கடந்து விட்டது. புதிய நிறுவனத்துக்கு மாறி, புதிய வீட்டுக்கு வந்த பிறகு, இந்த 2 மாதத்தில் பணத்தேவை 10 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கிறது. எனவே, கடனில் நகர ஆரம்பித்து விட்டது என் வாழ்க்கை என புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். 20,000 சம்பளத்தை கடந்த பிறகும் அம்மாவிடம் இதுவரை  ஒரு 10,000 ரூபாயை முழுமையாக  கொடுத்ததில்லை நான். இதுகுறித்து தூக்கம் களைந்து எழுந்து நேற்றெல்லாம் பல விதமாக கணக்கு போட்டு பார்த்து விட்டேன். இந்த மாதம் வரவு 18,500 என்றால் செலவு 19,540 ஆக இருக்கிறது. கண்களை மறைக்க ஆரம்பித்து விடுகிறது பசி. கடையில் சாப்பிட்டு கட்டுப்படி ஆகவில்லை. மாதத்  தவனையில் போன் வாங்கியது தோழிக்கு பிடிக்கவில்லை என பலமுறை என்னிடம் சொல்லி விட்டாள்.  48,000 ரூபாய்க்கு போன் வாங்கினால் எவள் தான் சும்மா இருப்பாள். நம்மீது தனிப்பட்ட அக்கறையுள்ளவள் ஏதோ கோபப்படுகிறாள் என நினைத்து கொள்ளலாம். ஆனால், அப்பா... ஆம், அப்பாவுக்கு தெரிந்தால் பாவம...

வாலிபத்தில் ஆயிரம் காதல்

படம்
சில கையேந்தி பவன் பரோட்டா சில சரவணபவன் சாப்பாடு சில ஆயா கடை இட்டிலி சில பழைய சோறுதேன்.. உப்பு காரம் கூடலாம் உள்ளே தண்ணீரும் கூடலாம் கேட்பதற்கு நாதியல்ல கேட்காமலே வந்ததாச்சே.. சிலருக்கு பிரமாதம் சிலருக்கோ சூப்பர்பா சிலருக்கு செம சிலருக்கு என்ன சொல்ல...   பேச்சு சத்தம் கேட்டபடி பேசாமலே மெளனித்து கேட்டமனம் கிறக்கத்திலும் கேட்காத இசையினிலும்.... வசந்தம் வீச நெருப்பு சுடும் சுடச்சுடவும் வசந்தம் வரும் சுத்தமாக துடைத்தெறியும் சுடுகாடும் பக்கம் வரும்... கூட்டு பொறியல் வைக்கவே குளசாமிய கூப்பிடறவங்க வேட்டு வச்சோம்னு தெரிஞ்சா சும்மாவா விடுவாங்க... பாட்டு சந்தம் கேட்கலாம் பாட்டில் சத்தம் கேக்குதுடோய் குறும்புக்காரன் குசும்பன் இவன் குத்தவச்சிட்டு போய்டுவானோ.... காசுக்கு சாப்பிட்டதுண்டு கடனுக்கும் சாப்பிட்டதுண்டு கை நீட்டியும் சாப்பிடலாம் அட, கனவுல எப்படிப்பா சாப்பிடறாங்க... வாலிபத்தில் ஆயிரம் காதல் ஆயிரம் காதல் வாலிபத்தில் ...

KAADHAL ILLAI SONG MUSIC RAJARISHI

படம்