கடவுள் ஃபோன் பேசினார்
அதிசயம் நடக்குமென்று படித்திருக்கிறேன். அது நடந்து உணர்ந்து அநுபவிப்பதுஇப்போதுதான் முதல் முறை என நினைக்கிறேன்.
அவரை சந்தித்து 2 மாதம் கடந்து விட்டது. புதிய நிறுவனத்துக்கு மாறி, புதிய வீட்டுக்கு வந்த பிறகு, இந்த 2 மாதத்தில் பணத்தேவை 10 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கிறது. எனவே, கடனில் நகர ஆரம்பித்து விட்டது என் வாழ்க்கை என புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.
20,000 சம்பளத்தை கடந்த பிறகும் அம்மாவிடம் இதுவரை ஒரு 10,000 ரூபாயை முழுமையாக கொடுத்ததில்லை நான். இதுகுறித்து தூக்கம் களைந்து எழுந்து நேற்றெல்லாம் பல விதமாக கணக்கு போட்டு பார்த்து விட்டேன். இந்த மாதம் வரவு 18,500 என்றால் செலவு 19,540 ஆக இருக்கிறது. கண்களை மறைக்க ஆரம்பித்து விடுகிறது பசி. கடையில் சாப்பிட்டு கட்டுப்படி ஆகவில்லை.
மாதத் தவனையில் போன் வாங்கியது தோழிக்கு பிடிக்கவில்லை என பலமுறை என்னிடம் சொல்லி விட்டாள். 48,000 ரூபாய்க்கு போன் வாங்கினால் எவள் தான் சும்மா இருப்பாள். நம்மீது தனிப்பட்ட அக்கறையுள்ளவள் ஏதோ கோபப்படுகிறாள் என நினைத்து கொள்ளலாம். ஆனால், அப்பா...
ஆம், அப்பாவுக்கு தெரிந்தால் பாவம் நொந்து விடுவார். இதெல்லாம் இப்ப தேவையா ... ? என கேள்வியால் நம்மை துளைத்து விடுவார் என்று நினைத்தால் அதுதான் இல்லை. நம்முடைய பொறுப்பற்ற தனம் என்று அவர் நொந்து கொள்வதை தவிர வேறு தண்டனை தேவையில்லை நமக்கு.
இந்த மாதம் வீட்டுக்கு இன்னும் பணம் அனுப்பவில்லை. நமக்கு நன்கு பரிச்சயமான நண்பர்களிடமும் 200 அ 300 கடன் வாங்கி தான் நாட்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அக்கா வேறு தொடர்பு கொண்டு புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் வேலை பாதியிலேயே பணம் இல்லாமல் நிற்பது பற்றி வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறாள்.
அறையில் 2 பேர் மட்டும் இருப்பதால் வாடகை ஒருவருக்கு மட்டும் 3500 க்கு மேல் ஆகிறது. எனக்கு இது அதிகம்தான். இந்தவாரம் புதிதாக ஒருவர் வருவதாக சொன்னார்கள். அவர் வந்தாளாவது கொஞ்சம் பண சுமை குறையும் என்று நினைத்தேன்.. பாவம் நண்பன் ஒருவன் என்னிடம் பணம் இருப்பதாக நினைத்துக்கொண்டு கடன் வேறு கேட்டு கொண்டிருக்கிறான். என்னை மாதிரி தான் அவனும் என நினைத்து கொள்கிறேன்.
நடக்கும் நிலைமை இப்படி இருக்க இதில் திருமணம் குறித்த சிந்தனை வேறு வந்து கேள்வி கேட்டு கண்ணத்தில் அறைகிறது.
உறவு காரர்களிடம் வீடு கட்டிவிட்டு பார்த்து கொள்ளலாம் என திருமணத்தில் அக்கறையே இல்லாதவன் போல பதில் சொல்லியிருக்கிறேன். எல்லோரும் போல இருந்துவிட்டால் பரவாயில்லை., கிடைக்கும் வேலை ஏதேனும் செய்து கழித்துவிடுவேன். இந்த உடம்பு வேற நமக்கு பெரிய தொந்தரவாக இருப்பதால் கொஞ்சம் சிக்கல் போல் தெரிகிறது.
சேமிப்பு என்பது என்னவென்று தெரியாமல் கடந்து கொண்டிருப்பது பற்றி நினைக்கும் போது பக்குன்னு இருக்கும் மனசுக்கு. எப்படியாவது துர்கா மேடத்தை தொடர்பு கொண்டு ஏதாவது எழுத்து வேலை கேட்க்கலாம் அல்லது ஏற்கனவே எழுதிக்கொடுத்த கட்டுரைக்கு பணம் அனுப்புவதாக சொன்னார்களே அது குறித்தேனும் தெரிந்து கொள்ளலாம் என ஒரு சிந்தனை.
அவர்களை விட்டால் வேறு யாரும் இல்லை என முடிவு செய்துவிட்டேன்... இன்று எப்படியாவது அவரை சந்திக்க வேண்டும்.. இருப்பினும், தொலை பேசி எண் என்னிடம் இல்லையே.. சரி பார்த்து கொள்ளலாம் என முடிவு செய்திருந்தேன்.
அலுவலக பணியில் திளைத்திருந்த மதிய வேளை... மேலதிகாரிகள் சொன்ன வேலையில் கவனம். அதிகாரிகள் மீது ஒரு வித பயம் எப்போதும் உண்டு. அதனால் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தது கால்கள். பதற்றத்தோடிருந்த அந்த நாழிகையில் ஏதோ ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு, எடுத்து ஹலோ என்றேன்... மறுமுனையில் துர்கா மேடம்.
ஏம்பா ஒன்ன எங்கெல்லாம் தேடறது. நாளைக்கு 3 ஸ்க்ரிப்ட் வேணும் எழுதி அனுப்பு என சொன்னது தான் தாமதம் அந்த தருணம் அவரை கடவுளாக கண்டேன்.

கருத்துகள்
கருத்துரையிடுக