பழங்குடி மக்கள் அகராதி


ஒரு மொழியை புரிந்துகொள்ள, ஒரு உணர்வை வெளிப்படுத்த, நமக்குள்ள சிக்கல்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நம்முடைய பூர்வீக மக்களின் மொழியை, அழித்துவிடாமல் காக்கும் அதே நேரத்தில், நவீனம் குறித்த புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய அவசியம் நம் எல்லோருக்குமே ஏற்பட்டுள்ளது.



 நம்முடைய சமகாலத்தில் தாய் மொழி என பெருமை அடித்துக்கொள்ளும் நம் ஊரில் தான் நமக்கு வெகு அருகில், நம்முடைய் பூர்வீக, ஆதிவாசி, பழங்குடி மக்களும் தங்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு மொழியை காலம் காலமாக, தனித்தன்மையுடன் பேசி வருகிறார்கள். அந்த மொழி குறித்த புரிதல்கள் நமக்கும், நாம் பேசும் தமிழ் அவர்களுக்கும் இன்னும் புரியவேயில்லை.


சமூக ஆர்வலர்கள், இயக்கங்கள், அமைப்புகள் என பலரின் போராட்டங்களால் தான் ஆதிவாசி மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து வெளி உலகுக்கு தெரிய வருகிறது. அப்படி எங்கேனும் ஒரு புத்தகத்தில் நாம் படிக்கும் போதுதான் இத்தனை கஷ்டமா என வாய்பிளக்கிறோம். நாம் புறந்தள்ளி வைத்திருக்கிற நமது சகோதரர்களுக்கு மொழியை எளிமை படுத்தும் வகையில், அவர்களின் உரையாடலை பதிவு செய்ய வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. அப்படி செய்யும் போதுதான் கல்வி சாலைகள் பக்கம் ஒதுங்க ஆரம்பித்திருக்கும் ஒரு சமூகம் உயர்வடையும் என நம்புகிறேன்.



அதை புரிந்து நீலகிரி ஆதிவாசி நலச்சங்கத்தினர் எடுத்துள்ள ஆதிவாசி மக்களுக்கான அகராதியை ஏற்படுத்த எடுத்துக்கொண்டுள்ள முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதுமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்