வாலிபத்தில் ஆயிரம் காதல்









































சில கையேந்தி பவன் பரோட்டா

சில சரவணபவன் சாப்பாடு
சில ஆயா கடை இட்டிலி
சில பழைய சோறுதேன்..

உப்பு காரம் கூடலாம்
உள்ளே தண்ணீரும் கூடலாம்
கேட்பதற்கு நாதியல்ல
கேட்காமலே வந்ததாச்சே..

சிலருக்கு பிரமாதம்
சிலருக்கோ சூப்பர்பா
சிலருக்கு செம
சிலருக்கு என்ன சொல்ல...

 

பேச்சு சத்தம் கேட்டபடி
பேசாமலே மெளனித்து
கேட்டமனம் கிறக்கத்திலும்
கேட்காத இசையினிலும்....

வசந்தம் வீச நெருப்பு சுடும்
சுடச்சுடவும் வசந்தம் வரும்
சுத்தமாக துடைத்தெறியும்
சுடுகாடும் பக்கம் வரும்...

கூட்டு பொறியல் வைக்கவே
குளசாமிய கூப்பிடறவங்க
வேட்டு வச்சோம்னு தெரிஞ்சா
சும்மாவா விடுவாங்க...


பாட்டு சந்தம் கேட்கலாம்
பாட்டில் சத்தம் கேக்குதுடோய்
குறும்புக்காரன் குசும்பன் இவன்
குத்தவச்சிட்டு போய்டுவானோ....

காசுக்கு சாப்பிட்டதுண்டு
கடனுக்கும் சாப்பிட்டதுண்டு
கை நீட்டியும் சாப்பிடலாம்
அட,
கனவுல எப்படிப்பா சாப்பிடறாங்க...

வாலிபத்தில் ஆயிரம் காதல்
ஆயிரம் காதல் வாலிபத்தில்
காதல் வாலிபத்தில் ஆயிரம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்