வேணும்ங்கறதுக்காக ஓடி ஓடி வர்ரீங்க...
அந்த வார்த்தை ஒரு அர்த்தம் பொதிந்ததாய் இருந்தது.
அமைதியான நீரின் தடத்தில் வீசப்பட்ட கல் போல அந்த வார்த்தை மெளனத்தை தின்று செரிக்கும் முரட்டு வன்மத்தை போகிற போக்கில் பேசிய போது அவனால் சும்மாயிருக்க முடியவில்லை.
தேவையை தீர்த்துக் கொள்வதற்காக மட்டுமே தங்களை பயன் படுத்துகிறவர்களை பார்த்து கேட்கிற கேள்வி அது. தேவை தீர்ந்ததும் தூக்கி எறிந்துவிட்டு போனவர்களை பார்த்து துப்புகிற எச்சில் அது. எதற்காக என் காதில் படும்படி... என யோசித்து கிடக்கிற நாழிகை எங்கும் உச்சி நகர்ந்து வெப்பம் மேற்கு நோக்கி சரிந்துவிட்டிருந்தது. இரவின் நேரமெங்கும் அவனோடவே ஒட்டிக்கொண்டிருக்கிறது அந்த வார்த்தை. தூக்கமில்லாமல் புரண்டது இரவு.
ஏன் அப்படி கேட்டாள்......
எங்கள் தேவை என்ன என்றே தெரியாமல் இருக்கும் போது, எங்களுக்குள் தீர்ந்து போக என்ன இருக்க முடியும்?
நெருக்கம் உடைகிற போது வெளிப்படும் வார்த்தை பிரயோகிக்க பட்டதை பார்த்து நடுங்கி கிடக்கிறது உள்ளம் அவனுக்கு.
ஊருக்கு போனவளை விசாரிக்காமல் இருக்கிறேனே.... ஒருவேளை நான் ஏன் அவள் மீது இப்படி அக்கறை இல்லாமல் இருக்கிறேன் என என்னை பார்த்து உரிமையோடு கேட்கிற கேள்வியோ என்றும் ஒரு பக்கம் யோசிக்கிறான்.
ஒருவேலை விலக முயற்சிக்கிறேன் என்று எண்ணுகிறாளோ.... இப்படியாக ஆயிரம் குழப்பங்கள் அவனுக்குள்.
அவர்களுக்குள் காதல் இருப்பதாகவெல்லாம் அவர்கள் கருதவில்லை. அதையும் தாண்டி.... தாலி கட்டாத கணவன் மனைவி அவர்கள்... ஒரு போதும் அவர்கள் தொட்டு கொண்டது கூட இல்லை. மனத்தால் சமீபத்தில் தான் அவர்கள் நெருங்கியிருக்கிறார்கள். அது அவர்களை இறுக்கி கொண்டிருப்பதை இருவரும் அறிவார்கள். ஆதலால் தான் உறுத்துகிறது போலும்.
அவளுக்காகவே காத்திருந்து எடுத்த அவதாரம் போல் அவன். இப்படியான சிறு சிறு வார்த்தைகள் வேறு ஏதேனும் நோக்கத்திற்காக உதிர்க்கப்பட்டதாக இருந்தாலும் தனக்கானதாகவே கருதிக்கொள்கிறார்கள் இவர்கள்.
பிரிவுகள் அதிகரிக்கும் போது கூடல் தேவையாயிருக்கிறது. பிரிவுகள் தான் கூடலை அதிகப்படுத்தும் என வரலாறு கூறுகிறது. அந்த பிரிவு தான் இப்படி பேசவும் செய்யுமென்று கருதுவதால் விரைவில் சுபம் குறித்துபேசலாம் என காத்திருக்கிறார்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக