சாதிவாடை







பழமைக்கும் புதுமைக்குமான போராட்டத்தில்

      மனிதன் என்பதை மறந்து...

ஒவ்வொரு நொடிகளிலும் - எங்கள்

      உதிரத்தின் சொட்டுகளை

      தடவி தடவி பார்த்தபடி 

சிவப்பணுக்குள்ளே...

      நீந்தி சிரிக்கிறது எங்களின் நாட்கள்.

வாழும் வெறிபிடித்து ஆட்டுவதால் நாங்கள்

      மரணித்து கிடப்பதாய் நடிக்கிறோம்.

வண்ணங்கள் குழைத்து காதல் செய்தாலும்

      கத்திமுனை பார்க்காமல் உறக்கமில்லை

 எங்களுக்கு.

ஆம், 

துரத்தியபடியே இருக்கிறது சாதிவாடை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்