ஆத்திரம் தீர அடித்தும்
அப்பனுக்கு முடியல...
ஆத்தாளுக்கு சொகமில்ல...
தம்பிய பாம்பு கடிச்சிருச்சாம்...
அண்ணனுக்கு மாரடைப்பு ...
புருசன்காரன் போயிட்டானே...
புள்ளைக்கு என்னாச்சோ...
ஆத்தாளுக்கு சொகமில்ல...
தம்பிய பாம்பு கடிச்சிருச்சாம்...
அண்ணனுக்கு மாரடைப்பு ...
புருசன்காரன் போயிட்டானே...
புள்ளைக்கு என்னாச்சோ...
இப்படி, பதறி தவித்து வரும் ஆயிரம் அழுகைகளை ஒவ்வொரு நாளும் பேருந்தில் பார்த்திருக்கிறோம் பெண்களிடம். யாரென்றே தெரியாதவர்களிடம் எல்லாம் சொல்லி அழுவதில் ஒரு
ஆறுதல் கிடைத்து விடுகிறது அவர்களுக்கு. ஆனால் இப்போதெல்லாம் அப்படியல்ல என தோன்றுகிறது.
பேருந்து பயணமே பெண்களை பொருத்தவரை ஒரு தனித்துவமான புரிதலோடுதான் இருக்கும் போல, அவர்களை பொருத்தவரை அது நம்பிக்கை அற்றது. நம்மை சுற்றி யார் இருக்கிறார்கள் என்கிற தெளிவற்றது. நல்லவனா, கெட்டவனா, திருடனா, கொலைகாரனா.. இப்படி நிறைய. டிக்கெட்டின் சாக்கில் உரசலை தந்து காமுற செய்கிறவர்கள் அருகிலிருக்கிறார்கள் என்கிற சந்தேகத்தோடே எப்போதும் பயணிக்கிறார்கள் போலும் பெண்கள்.
உண்மைதான், எவனோ ஒருவனின் கை செய்த வேலையால் பேருந்து பயணத்தில் கூட்டத்தின் நடுவே ஒற்றை பெண் அழுததை பார்த்தபோது வெட்கம் பிடுங்கி தின்றது எங்களை.
பயணங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணத்தை வைத்திருக்கிறது. பெண்கள் மீது உரசிக்கொண்டு நிற்பது உள்பட...
சரியாக யாரென்றே எங்களால் பார்க்க முடியாத நெரிசலில் முன் பகுதியில் நின்றிருந்த அவனை ஆத்திரம் தீர அடித்தும், அழுகை நிற்கவில்லை அந்த பெண்ணுக்கு. பயத்தாலும், பதற்றத்தாலும் உதறலெடுத்த அவள் கண்கள் சிவந்து எங்கள் ஆண் வர்க்கத்தை பார்த்து கேள்வி கேட்பது தெரிகிறது. பதில் சொல்லமுடியாத ஊமையாயிருக்கிறோம் நாங்கள்.
உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா, உங்க கூட அக்கா தங்கச்சி பிறக்கல... பின்ன ஏண்டா இப்படி பன்றீங்க...என தேம்பும் நெஞ்சம்... வெடித்து எழுகிறது.
பயணிகளிடமிருந்து ஒரே கூச்சல்... அந்த கெட்ட குடும்பத்துல பிறந்த நாய கீழ எறக்குயா... திருட்டுப்பய... ச்சீ வந்துற்றானுங்க... பெண்கள் கோபத்தை கொப்புளித்து துப்பினார்கள். யார் யாரோ அவனை அடித்து இறக்கி விட்டார்கள் போலும்,
அனைத்தும் எங்கள் காதுகளில் வெறும் சத்தமாக மட்டுமே பதிவாகி கொண்டிருந்தது. இந்த களேபரத்துக்கு மத்தியில் அடுத்த பேருந்து நிறுத்தம் வந்து கொஞ்சம் பேர் இறங்கிவிட்டார்கள். அப்பொழுதுதான் அந்த சகோதரியை பார்க்க முடிந்தது.
எல்லோரையும் விலக்கி விட்டு அழுதுகொண்டே படியிரங்கி அடுத்த பேருத்துக்காக போனாள் அந்த சகோதரி. அந்த பேருந்திலாவது பயணம் தொந்தரவு இல்லாமல் அமைந்திருக்குமா என யோசித்தபடி பயணித்தேன் ?

கருத்துகள்
கருத்துரையிடுக