தங்கமும்..வெள்ளியும்..!
தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு
வீரர் சாந்தி சவுந்திரராஜனுக்கு உதவிகள் கிடைக்கவில்லை என்று வந்துள்ள
செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு உதவிகள்
கிடைக்கவில்லை என்று கூறுவது சரியல்ல என்கிறார் இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத்தலைவர் வால்டர் தேவாரம்.
ஒரு கிரிக்கெட் வீரரோ...ஒரு கைபந்து ஆட்டக்காரரோ... ஆசிய போட்டியில்
கலந்துகொண்டு வெள்ளி பதக்கத்தோடு திரும்புகிறார் எனில் இந்தியா அவர்களை
சிவப்பு கம்பள மரியாதையோடு வரவேற்று இருக்கும். அவர்களால் ஏற்படும்
சிக்கல்களை தானே முன்னின்று தீர்த்துவைக்க முயன்றிருக்கும்.
அவர்களின்
வாழ்க்கைக்கு தேவையான பொருளாதார சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும்.
இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பின்னால் வரப்போகும் அவர்களின் சந்ததிக்கு
இப்போதே வேலைக்கான உத்திரவாதம் கிடைத்திருக்கும்.
ஆனால், 2006 ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய
விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்
பதக்கம் வென்ற சாந்தி சவுந்திரராஜன் அத்தனை பெரும் சாதனை செய்யவில்லையே.
800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிபதக்கம் வென்றார் அவ்வளவுதானே.
ஆசிய அளவில்
இந்தியாவிற்காக ஓடி அவர் என்ன அப்படி செய்துவிட்டார்?
அதுவும் சில மணித்துளிகளிலேயே அவரது பாலினம் குறித்து எழுந்த
சர்ச்சையால் பறிக்கப்பட்டுவிட்டது. அவரால் கிடைத்தது வெறும் அவமானம்
மட்டுமே...அதனால், அவருக்கு 15 லட்ச ரூபாய்
பரிசுத் தொகை போதும் என தமிழக அரசு நினைத்துவிட்டதோ என என்ன தோன்றுகிறது.
சாந்தியைவிட ஒருமடங்கு அதிகமான சம்பளத்தில் பணியாற்றுகிரவர்களுக்கே
ஒவ்வொரு மாத வாழ்க்கையையும் நகர்த்த இத்தனை சிரமம் இருக்கும் பொழுது ஒரு
தேசிய விளையாட்டுவீரர் வெறும் 4000 ரூபாய் மாத ஊதியத்தில் அரசு பணியில்
இருந்ததாக சொல்லப்படுவதை எப்படி ஏற்றுகொள்வது? அந்த மாத ஊதியம் எப்படி
அவர்களை ஊக்கபடுத்துவதாய் அமையும் என இவர்கள் நம்புகிறார்கள்?
இதேபோலத்தான்... தற்போது ஆசிய போட்டியில் 4x 400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் மகளிர் பிரிவில் தங்க பதக்கம் வென்ற பிங்கி பிராமணிக் எனும் பெண்மணி பாலியல்
குற்றச்சாட்டு காரணமாக ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்.
ஒரு மனித பிரஜை என்கிற பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ளும்
உரிமையை அவரை கைதுசெய்த காவலர்களுக்கும்..அவரை கட்டாயபடுத்தி நிர்வாண
கோலத்தில் பரிசோதனைக்கு தயார் செய்த மருத்துவ அதிகாரிகளுக்கும் யார்
தந்தது? இவர்கள்தானே இந்தியாவுக்காக பிங்கி தங்கபதக்கம் பெறும்போது கைதட்டி
பல்லிளித்தது.
இவர்களுக்கெல்லாம் வெற்றி மட்டும்தான் வேண்டும்...ஆனால், வியர்வையின் வாசம் வரும் போது தூர போகும் புத்திசாலிகள் இந்தியர்கள். சதா சர்வ காலமும்
பெண்ணியத்தை பேசுகிறவர்கள் முடிந்தால்.... இவர்களுக்காக வாதாடி பாருங்கள்.
அப்போது தெரியும் இந்தியாவின் உண்மை. முகம் என்னவென்று.
-வேக சுகுமாரன்.
கருத்துகள்
கருத்துரையிடுக