சிந்தனையிலேயே கழிகிறது சில நிமிடங்கள்...


ஒரு மாலை வேளையில்
மரணத்தின் மறு கரையில்
நின்றிருந்த என்னை பார்த்து

சிரிக்கவும் முடியாமல்,
அழவும் முடியாமல்,
சிந்தனையிலேயே கழிகிறது
சில நிமிடங்கள்...

அழுக்கு வானத்தின்
அடிப் பகுதியில் இருந்து
யாரோ எச்சில் துப்பியதைப் போல
தூரல்கள்...

மரணத்தை

கையில் வைத்து
அழகு பார்த்தேன்...

மரணம் என் கையை
அரித்துக் கொண்டிருப்பது 

தெரியாமலே...

மரணத்துக்கு எங்கே
தெரியப் போகிறது?

நான்

மரணத்தையும்..
நேசிக்கிறேன் என்று.

காதல் 

எத்தனை  அர்ப்புதமானது தெரியுமா?
அதுதான் எனக்கு கற்று தந்தது
மரணத்தை காதலிக்க. 


-வேக சுகுமாரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்