ஊசியிலைக் காடுகள்

                                                                                            




தமிழில் வனம், கானகம், அடவி, புறவு, பொதும்பு  என  பல சொற்களால் அழைக்கப்படுவது காடு. சுருக்கமாக சொன்னால் மரங்களின் அடர்த்தி அதிகம் உள்ள நிலப் பரப்பே காடு என்றால் அது மிகையில்லை .


உயிர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்பவை காடுகள் தான். அந்த வகையில் ஒவ்வொரு மனிதனாலும் கவனிக்க படவேண்டிய ஒன்றாக இருக்கின்றன  காடுகள். முற்காலத்தில் புவியின் மேற்பரப்பில் 50%  சூழப்பட்டிருந்த காடுகள் தற்போது  வெறும்  30% மட்டுமே மிச்சமிருப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. 

உலகில் மரங்களின் வகையையும் காடுகளின் அமைப்பையும்  அதன் உயிர்சூழளையும் பொறுத்து மழைக் காடுகள், துருவக் காடுகள்,வரல் நிலக் காடுகள், கலப்புக் காடுகள், புதர்க் காடுகள், இலையுதிர்க் காடுகள், ஊசியிலைக் காடுகள் என வகைப் படுத்துகிறார்கள். அந்தவகையில், காடுகள் பற்றிய நம் பரந்த பார்வையை  ஊசியிலைக் காடுகளின் பக்கம் கொஞ்சம் திருப்புவோம்.

                              
மலைப்  பிரதேசங்களில் ஓங்கி உயர்ந்து நிற்கும்  ஊசியிலைக் காடுகள் மிதமான மழைப் பொழிவையும், மிதமான குளிரையும் அதே வேளையில் தேவையான வெப்பத்தையும் கொண்டிருக்கும் பகுதிகளிலேயே தம்முடைய வளர்ச்சியை அதிகப் படுத்திக் கொள்கின்றன. பெரும்பாலான மிதவெப்ப ஊசியிலைக் காடுகளில் பசுமைமாறா ஊசியிலைத் தாவரங்களே முதன்மையாகக் காணப்படுகின்றன. 
உலகில் உள்ளக் காடுகளில்  ஊசியிலைக் காடுகள் 15% இருப்பதாக கணக்கிடப் பட்டிருக்கிறது. எனினும் இத்தகைய காடுகள் சிலவற்றில், கலப்பு ஊசியிலைத் தாவரங்களும் , பசுமைமாறா அகன்ற இலைத் தாவரங்களும் அதோடு  இலையுதிர் தாவரங்களும் காணப்படுகின்றன.
                              
ஊசியிலைக் காடுகள் பூமியில் ஒரு பெரும் வாழ்க்கையை நடத்துகின்றன. பெரும்பாலும் Cedar, Cypress, Douglas - Fir, Balsam- Fir, Juniper, Kauri, Pine, Podocarpus, Block Spruce, White Spruce, Tamarack Redwood மற்றும்  Yew போன்றவற்றை உள்ளடக்கிய  மரங்களே  மிதவெப்ப ஊசியிலைக் காடுகளில் காணப்படுகின்றன. இந்த வகை மரங்கள் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் வரை  வாழ்வதாக  கணக்கிடப்பட்டுள்ளது. 
குறுக்கு கிளைகள் அதிகம் இல்லாத நிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்க் குள்ளாகவே அதிகமான மரங்களை  நாம் பார்க்க முடிகிறது. பைன் காடுகளை பொறுத்தவரை கிட்டத்தட்ட 1000 கணக்கான ஆண்டுகள் வரை உயிர்வாழும்  தன்மை கொண்டது. மேலும் 150 க்கும் மேற்பட்ட இனங்களை கொடிருக்கிறது.
                            
வட அமெரிக்காவின் கலிபோர்னியா காடுகளில் இந்த வகை மரங்கள் அதிகம் காணப் படுவதாக தெரிகிறது. இந்தியாவை பொறுத்தவரை இமயமலை, உதகை போன்ற பகுதிகளிலும்  அதிகம்  காணப்படுகிறது. 
இந்த காடுகளின்  கீழ்த்தளங்களில் பல வகையான செடிகளும், புள் பூண்டு  வகைகளும் இருக்கும். மலை பாங்கான பகுதிகளில் இந்த காடுகள் அமைவதால் ஆங்காகே ஏரிகளும், குளம் குட்டைகளும் நீரோடைகளும் இயல்பாகவே காணப் படுகின்றன. இதனால் இந்தவகை காடுகளில் மேல்தளம் கீழ்த்தளம் என இரண்டு அடுக்குகளே காணப்படும்.

மரங்களின் அடர்த்தியை பொறுத்து இவை இரண்டு வகையாக பிரிக்க படுகின்றன. (i) open lichen wood land (ii) closed forest ஆகும். இருப்பினும் மரங்களின் வளர்ச்சியை எந்த ஒரு சூழலாலும் கட்ட்படுத்த முடிவதில்லை.
 இந்தவகை காடுகளின் இலைகள் ஊசிப் போன்று சிறியதாக காணப் படுவதால் அதிகளவிலான நீர் ஆவியாகாமல் தடுக்கப் படுவதை உறுதி செய்கிறது. இந்த காடுகள் குளிர் காலங்களையும், வெப்ப காலங்களையும் சமாளிக்கும் திறன் பெற்று இருப்பதால் குளிர் காலத்தில் உறைபனி ஏற்ப்படும் நேரங்களிலும் சமாளித்துக் கொள்ளும் தகவமைப்பை இயற்கையாகவே பெற்றிருக்கிறது.

ஆசியா, அப்பிரிக்கா,வட அமெரிக்கா போன்ற நாடுகளின் குளிர் பிரதேசத்திலும்  சீனா ஜப்பான் போன்ற நாடுகளின் சில பகுதிகளிலும் ஆர்க்டிக் பகுதியிலும்  taiga,  white spruce,  block spruce,  balsam fir  போன்ற மரங்கள்  காணப்படுகிறது. இப்படியாக உயர்ந்து நிற்கும் ஊசியிலைக் காடுகளின்   இலைகள் உதிர்ந்து கிடக்கும் போது அந்த வனாந்திரம் முழுவதும் இலைகள்  ஒரு போர்வையாய் விரிந்து கிடப்பது அழகுற செய்கிறது. 
இந்த இலைகள் நீண்ட நாட்களாய் மண்ணில் கிடந்துமட்க்கி சில வகை பாக்டீரியன்களால் மருசுழற்சிக்குட்படுத்தபட்டு மீண்டும் உரமாக அமைக்கப்ப்ட்டுவிடுகிறது. இதனால் பைன் மரங்களின் வளர்ச்சிக்கு தேவையான உரங்களை இயற்கையே  தயார் செய்துவிடுகிறது.

பறந்து விரிந்திருக்கும் பைன் மரக் காடுகளில் மற்றக் காடுகளைப் போல அதிகமான விலங்குகள் இல்லையென்றாலும் கூட இங்கிருக்கும் விலங்குகள் பல்வேறுபட்ட வகையினதாக காணப் படுகின்றன.

குறிப்பாக ஊசியிலைக் காடுகளில் Bald Eagle,Tanage, Common Loon, பறவையினங்களும் Grey Owl,  போன்ற ஆந்தையிநங்களும்   காணப்படுகின்றன.  Kermode Bear,போன்ற கரடியினமும்  Eastern Milk Snake,போன்ற பாம்புகளின் வகைகள்  Moose, போன்ற மான் வகைகள்  Rockey Mountain Big Horn Sheep, போன்ற ஆடுகள்  Monarch butterfly, என்று அழைக்கப்படும் வண்ணத்து பூச்சியினங்களும்,  siberia  டைகர்  எனப்படும் புலியினமும்,  Wood Frog  எனப்படும் தவளையினங்களும் காணப்படுகின்றன.

இருப்பினும் பல நாடுகளில் வீடு கட்டுவதற்கும், விவசாயங்களுக்கும், ஏனைய தேவைகளுக்காகவும் காடுகளை அழித்து நிலப் பரப்பாக்கும் முயற்சியில்  அதிகமான  காடுகள் அழிக்கப் பட்டுவருகின்றன என்பது  வருந்தசெய்யும் உண்மையாகும்.

இதனால் காடுகளில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.   மேலும் ஒட்டு மொத்தமாக உலக காடுகளில் ஏற்பட்ட்ட தீயினாலும் எரிக்கப்பட்ட பொருட்களாலும் வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின் அளவு 25% அதிகரித்திருப்பதாக அறிவியலர்கள் கருதுகிறார்கள்.  இதனால், உலகில் வெப்பம் அதிகரித்து சூழியல் மாற்றம் ஏற்ப்பட காரணமாகிறது.


-வேகசுகுமரன்  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்