கவிதை..உறைந்திருக்கும் உடலை சூடாக்க வேண்டும்..!


                              

                                கவிதை ஒரு மனிதனை  எப்படி வைத்திருக்க வேண்டும் என்று எனக்கு சொல்லித் தந்தவர் இந்த தாய். இவர் எழுதிய புத்தகத்தைத்தான் நான் என் கல்லூரி நாட்களில் தமிழ் பாடமாய் படித்திருக்கிறேன். 

                              

                              அந்த தாயை நான் எனது தொழில் நிமித்தமாக சந்தித்தபோதுதான் எனக்கே தெரிந்தது அவர்தான் என் தமிழின் ஆதி என்று. அந்த தாயை நான் சந்தித்தபோது அடைந்த  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். 

                              

                              பெண்களின் விடுதலையை விரும்புகிற வெற்றி பெண்மணி . இவர் கழிவுகளின் அடையாளமாய் சாதிய கோட்பாடுகளை குறிப்பிடுகிறார். தலித்தியம் பற்றி பேசும் போது ஏனோ அவர் கண்களில் கண்ணீர் வருவதை நம்மால் மறக்க முடியவில்லை. 

                                

                              சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் இவர் தலித் என்கிற ஒரே காரணத்துக்காக ஆசிரிய பணியில் செர்த்துக்கொள்ளபடாமல் வெளியேற்றபட்டார். 

                              

                              ஆம், அவர் பிறப்பால் ஒரு தலித் என்பதால் அனுபவித்த அவஸ்த்தைகள் கொஞ்சம் அல்ல ஏராளம். அந்த வலிகளின் குறியீடாய்  என்னுடைய புத்தகத்தின் ஒரு பக்கத்தில் இப்படித்தான் எழுதியிருந்தார்....


"கவிதை..உறைந்திருக்கும் உடலை
சூடாக்க வேண்டும்...
வாழ்வின் ஒவ்வொரு நொடியும்...

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
என்பதை மகிழ்வோடு அனுபவிக்க வேண்டும்...

சோர்வும் துக்கமும் நம்மை
தூங்கவிடாமலிருந்தால்தான்...
வெற்றிக்குப் பாடுபடமுடியும்.

நதியின் வாழ்வும்
பணியும் இருப்பும்
வாழ்க்கைக்கானது".

அரங்க மல்லிகா 



உங்களுக்காக உங்களோடு பகிர்ந்துகொண்ட திருப்தியோடு ...

வேக சுகுமாரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்