கொலைக்காரனாகும் கொசுவத்தி சுருள்கள்..!
தற்போதைய கால கட்டங்களில் நாம்
பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள்களிலும் ரசாயனங்களின்
பங்கு மகத்தான ஒன்றாக
சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அப்படி ரசாயனங்களை மூலபொருலாக்கி உயிர்களின்
பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறோம் என்று சொல்லிகொண்டிருக்கும் மருந்தியல் துறையும் ஒவ்வொரு
நாளும் புதுப் புது மருந்துகளை கண்டறிந்து உயிர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்
கொண்டிருப்பதாக மார்தட்டிக் கொள்கிறது.
அப்படி முழுமையான அளவில் அதன் மகத்துவம்
மனிதர்களுக்கு பயன்படுகிறதா என்றால்,கேள்விக்குறிதான். இயற்கையின் படைப்பில் இயற்கையே ஒரு
மருத்துவமாய் திகழ்வது என்றும் அதிசயம்தான். அப்படியிருக்க, நாம்
கொஞ்சம் கொஞ்சமாய் ரசாயனத்தின் மோகத்தில் மூழ்கியிருப்பது எதனால்?
தண்ணீருக்கு
அடுத்தபடியாக அதிகமான நோய்க் கிருமிகளை பரப்புவது கொசுக்கல்தான்.இதுதவிர பல்வேறு
வைரஸ் தோற்று ஏற்படுத்துவதாலும் உயிர்களுக்கு தீமை விளைவிக்கிறது. இந்த
கொசுக்களால் நாளும் மனித இனம் அனுபவிக்கும் துன்பம்
கொஞ்சம் நஞ்சம் அல்ல.
அப்படியிருக்க, கொசுக்களை விரட்டுகிறேன் பேர்வழி
என்று செயல்படும் சில கம்பெனிகளின் முட்டாள்தனமான செயல்பாடுகள்தான் அறிவியலை
அவ்வபோது அசிங்கபடுத்திவிடுகிறது. கொசு கடிக்கு பயந்து ஒவ்வொரு நாளும் க்ரீம், கொசுவர்த்திசுருள்,மேட், போன்றவற்றை
பயன்படுத்துகிறார்கள் மனிதர்கள்.
இதனால்,அந்த இரவு
சுகமானதாக அமைந்து விட்டாலும் கூட அடுத்தடுத்து தொடரும் இந்த
செயல்களால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று அறிவியலர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படி
என்னதான் இருக்கிறது kosu விரட்டிகளில்?
மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா,மஞ்சள்காமாலை
போன்ற... உயிர்களுக்கு தீமை தரும் நோய்களை பரப்பி மனிதனை மரணத்தின்
அருகே பயணம் செய்யவைக்கும் சாதாரண கொசுவை
விரட்ட இயற்கையில் எத்தனையோ வழிமுறைகளை கையாண்டு பார்த்தாலும்...மனிதர்களின் மனம்
என்னவோ "ஒரே நாளில் அத்தனை கொசுக்களையும் அழித்துவிட
முடியாதா"? என்கிற சிந்தனையில்தான் ஒவ்வொரு நாளும்
ஆழ்ந்திருக்கிறது.
நம்முடைய முன்னோர்கள் வேம்பு, நொச்சி, சாம்பிராணி, துளசி,தும்பை, ஆடாதொடா, போன்று இயற்கையில்
கிடைத்த மூலிகைகளை கொண்டே பல்வேறு நோய்களையும்,வியாதிகளையும்
குனபடுத்தியுள்ளனர். மேலும் பார்வையில் கிடைக்க கூடிய தாவர
வகைகளே மனிதனுக்கு மருந்துகளாய் பயன்பட்டிருக்கிறது.
ஆனால், அறிவியலின்
வளர்ச்சியில் அன்றாட தேவைகளில் அவசியமானதாய் கருதப்பட்ட கொசு பத்தி சுருள்கள்
சமீபகாலமாக எமனாக மாறியிருப்பதுதான் நம்மை
வேதனைகொள்ள வைக்கின்றன.
கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக்
கலவைகள்பயன்படுத்தப்படுகின்றன. கொசுவர்த்திச்
சுருள்களிலும்
மேட்களிலும்செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட அலெத்ரின்,
டாலத்ரின் டி டிரான்ஸாலத்ரின்
போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து
இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
கொசுவை
விரட்டுவதற்காக ஒருவர் தெடர்ந்து கொசுவர்த்திச்சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு, அது முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உண்டான காற்றை செயல்பாட்டிற்கு
எடுத்துக்கெள்ள இயலாமலும் போய்விட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பல ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.
மக்கள் கொசுக்களுக்குப் பயந்து மாலை ஆறுமணிக்கே ஜன்னல் கதவுகளை எல்லாம்அடைத்துவிட்டு புதிய காற்று வீட்டுக்குள் வருவதை தடைசெய்து விடுகின்றனர். இவ்வாறு அடைபட்டக் காற்றுக்குள்ளேயே விளக்கு எரிப்பது, சமைப்பது, குடும்பத்தார்அனைவரும் சுவாசிப்பது போன்ற செயல்களாலேயேபிராண வாயு மிகவும்
குறைந்துவிடுகிறது.
இதோடு புகையும், கேடு விளைவிக்கும் வாயுக்களும்வீட்டினுள் நிறைந்து விடுகின்றன. போதாக்குறைக்கு இருட்டியதுமே கொசுவிரட்டிகளையும் பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். இதனால் வீட்டில் இருந்த சிறிதானபிராணவாயுவும் கெட்டு விடுகிறது. ஆக, இரவு முழுவதையும் மாசுக்காற்று உள்ள சூழ்நிலையிலேயே கழிக்கிறார்கள்.
கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை அப்போது
பிறந்த அல்லது பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக
கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.
சமீபத்தில், மும்பையில்
நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்,
கொசு விரட்டிகளில்
பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் இதுதவிர,
கொசு விரட்டியில் உள்ள
டயேக்சின் புற்று நோயையும் அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல
இழக்கச் செய்யும் தன்மை கொண்டது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் அதிகரித்து வரும் வாகனங்களால்
சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கும், சர்க்கரை நோயாளிகளின்
எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுஎப்படி சாத்தியமாகும்? தற்போது கொசுக்களை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருள்கள் சர்க்கரை நோயை
ஏற்படுத்துவதாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கொசுவர்த்தி சுருள்கள் ஆஸ்துமா, புற்றுநோய், இதய நோய்கள், வாதங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு இன்சுலின் அளவை குறைத்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.எனவே,
கொசுவர்த்தி சுருள்
புகையை சுவாசிப்பதற்கும், வானங்களின் புகையை சுவாசிப்பதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்று
கூறலாம்.
அறிவியல் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment), மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழு
(Indian Council for Medical Research), இந்திய மருத்துவர் சங்கம் (Indian Medical Association) ஆகிய அமைப்புகள் இணைந்து “காற்று மாசுபடுதலும், நமது உடல்நலமும்” (Air
Pollution and Our Health) என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடத்தியது.
அந்த மாநாட்டில் நெஞ்சக ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் (Chest
Research Foundation) சந்தீப் சால்விபேசும்பொழுது “நிறைய மக்களுக்கு இது தெரிவதில்லை.
ஆனால், ஒரு கொசுவர்த்திச் சுருள் உங்கள் நுரையீரலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு 100 சிகரெட்டுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு ஈடானது என்று கூறினார்.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு
சராசரியாக 5 வயதுக்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகள் சுவாச கோளாறு காரணமாக
உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. கொசுக்களை விரட்டுவதற்காக ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தும் 80 முதல் 85 சதவீதம் பேர் தான் மலேரியாவால்
அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று
கொசுக்களிலிருந்து
உருவாகும் நோய்கள் பற்றிய ஆராய்ச்சி செய்து வரும் கோல்கட்டா மாநகராட்சியின் தலைமை 'என்ட்டோமாலஜிஸ்ட்' தேபாசிஷ் பிஸ்வாஸ் கூறியிருக்கிறார்.
இவை ஒருபுறமிருக்க, கொசுக்களை விரட்டுவதற்காக வீடுகளில் பயன்படுத்தப்படும் கொசுவத்திச் சுருள், கொசு விரட்டித் திரவம் ஆகியவற்றையும்
மீறி கொசுக்களின் பெருக்கம் அதிகரிப்பதாகவும் இவர்
தெரிவித்திருக்கிறார்.
என்னதான் ரசாயன மூல பொருட்கள் நம்மை
பாதுகாப்பதாக நினைத்துக் கொண்டாலும்...என்றாவது ஒரு நாள் இதன்
ஒட்டுமொத்த தாக்குதலும் நம்மை மரணம்
நோக்கி நகர்த்தும் என்கிற பயத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன இந்த கொசுவத்தி சுருள்கள்.
வேக சுகுமாரன்.
கருத்துகள்
கருத்துரையிடுக