வயலின்..!

வயலின்..!


                         மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற குறிப்பிட்ட ஒளி அலைகளையே நாம் இசை என்கிறோம். இசை என்பது மனதை கவரும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒளியாகும்.

                         அந்த இசையை சில இசைக்கருவிகள்தான் இன்றுவரை பாதுகாத்து வருகின்றன என்றால் நம்ப முடிகிறதா? 

                         ஆம், அதில் ஒன்று தான் ஆண்டோனியா ஸ்ட்ராடிவேரியஸ் ( Antonio Stradivari )  எனும் இத்தாலி தேசத்தை சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட வயலின் இசைக்கருவியாகும்.  

                        ஆண்ட்டோனியா ஸ்ட்ராடிவரிஸ் 1644  ஆண்டு இத்தாலி தேசத்தில் பிறந்த ஒரு நரம்பிசை கருவிகளை மேற்கொண்ட இசைக்கலைஞர். 

                          இவரால் வுருவாக்கபட்டதுதான் உலகின் முதல் வயலின் இசைக்கருவியாகும்.  குறிப்பிட்ட காலத்துக்குள்ளாகவே உலகெங்கும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு இசைக்கருவி இது.

                         உலகில் இன்றளவில் அரங்கிசைக்கு ஒரு சிறந்த இசைக்கருவியாக திகழ்வது பிடில் என்று அழைக்கப்பட்ட வயலின் இசைக்கருவி. 

                         இந்திய கலாசார இசையாக கருதப்படும் இந்துஸ்தானியிலும்  கர்நாடக சங்கீதத்திலும் ஆணி வேறாய் பதிந்து நிற்கும் இந்த இசைக்கருவி பிறந்தது இந்தியாவில் அல்ல, ஐரோப்பாவில்.

                        இந்தியாவின் இசை வடிவங்களுள் பல தொன்மையான வரலாற்றைக் கொண்டவை. நூற்றாண்டுகளினூடாக சீர்செய்யப்பட்டு வளமான முதிர்ந்த நிலையிலுள்ளவை.

                          உலகம் முழுவதிலும் அறியப்பட்டவை. இவற்றைவிட ஏராளமான கிராமிய, உள்ளூர் இசைமரபுகள், அந்தந்தப் பிரதேசத்துச் சமூக, பொருளாதார, ஆன்மீகத் தேவைகளோடு இணைந்து பயிலப்பட்டு வருபவை.

                         15 ஆம் நூற்றாண்டிலேயே இதுபோன்ற வயலின்கள் இத்தாலியில் பயன்படுத்தபட்டிருக்கின்றன.  இருப்பினும் வயலின் இசைக்கருவி ஒரு அடையாலத்துக்குல்லாக வந்தது 16  ஆம் நூற்றாண்டுக்கு பிறகுதான்.  

                        இசைப்பதற்கு இலகுவாக இருந்தமையால் 1800  களுக்கு பின்பு இது உலகளவில் விரும்பப்படும் ஒரு இசைக்கருவியாக ஆனது. அதே சமயத்தில் Gasparo da Salò மற்றும்  Giovanni Maggini, போன்றவர்களும் வயலின் தயாரிப்பில் பெயரேடுத்தனர்.

                         பெரும்பாலும் வயலின் இசைக்கருவி உருவாக்கப்படுவது Spruce, Ebony, Boxwood, Willow மற்றும்  Rosewood போன்ற 60 க்கும் மேற்பட்ட மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. pegbox , schroll , nut , strings , bridge , fingerboard , soundingpost , f hole , tailpiese ,chinrest  போன்ற பல பாகங்களை கொண்டது வயலின்.

                         இதில் பயன்படுத்தப்படும் bow இல் உள்ள இழைகளால் அதிர்வுகள் தூண்டப்பட்டு இசை உருவாகிறது.  ஆரம்பத்தில் குதிரை முடிகள் இதுபோன்ற இழைகளாக பயன்படுத்தபட்டு வந்தது. 

                         பின்னாளில் நைலான் இழைகளால் உருவாக்கப்பட்ட இழைகளும் பயன்படுத்தபட்டன. இவை குறைந்த தரமுள்ளதாகவே மதிக்கப்பட்டது. 19  ஆம் நூற்றாண்டுக்கு பிறகு புதிய புதிய கண்டுபிடிப்பாளர்கள் bows களை தயாரிப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். 

                          அதில் குறிப்பாக பிரெஞ்சு தேசத்தை சேர்ந்த bows  தயாரிப்பாளர் Giovanni Bottesini  மக்களிடம் வரவேற்ப்பு கிடைத்தது.

                          வயலின் இசைக்கருவி 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் பாலஸ்வமி தீட்சிதர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் 1824  ஆம் ஆண்டுவாக்கில் எட்டயபுரம் அரண்மனையில் சமஸ்தான வித்துவானாக இவர் பணியாற்றிக் கொண்டிருந்ததாகவும்  நம்பப்படுகிறது.  

                         ஒரு வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வயலின் இன்று இந்திய சங்கீதத்திலிருந்து பிரிக்கமுடியாத ஒரு இசைக்கருவியாக மாரிபோயவிட்டது.

                          பெரிய சமஸ்தானங்களில் வித்துவான்களாக இருந்தவர்கள் மட்டும் அப்போது இந்த கருவியை பயன்படுத்திவந்தனர். பின்னர் வழி வழியாக தங்களின் பிள்ளைகளுக்கு முறைப்படி கருநாடக இசையையும் இந்துஸ்தானியையும் கற்றுக் கொடுத்தனர். 

                          இப்படித்தான் ஒரு மேற்க்கத்திய இசைக்கருவி கொஞ்சம் கொஞ்சமாய் கிழக்காசிய பிராந்தியத்தின் இசைகருவியாகிப் போனது.
                         
                           எம் எஸ் கோபாலகிருஷ்ணன், குன்னக்குடி வைத்தியநாதன், நாகை முரளிதரன், லால்குடி ஜெயராமன், வி வி ரவி போன்ற பல்வேறுபட்ட கணக்கிலடங்காத இசைக்கலைஞர்களை இந்த கருவி பின்னாளில் உலகுக்கு அளித்தது தமது இசையால்.


வேக சுகுமாரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்