கீ போர்டு இசைக்கருவி..!




                                                கருப்பு வெள்ளை கட்டைகளின் கூட்டுகலவை இந்த இசைக்கருவி. உலக இசைக்கலைஞர்களை ஒரு சேர கட்டிபோட்டிருக்கும் ஓர் மேற்க்கத்திய இசைகடலின் மிகச்சிறிய வடிவம். இது பார்ப்பதற்கு பியானோவைப் போல தோன்றினாலும் இதற்கென்று சில தனித்துவமான வரலாறும் இருக்கத்தான் செய்கிறது.

                                                 இதன் மூதாதையர்களாக  pipe organ , hurdy gurdy ,clavichord போன்ற இசைவழி பிரமாதமாக அமைக்கப்பட்டுதான் இருக்கிறது. இருப்பினும் ஒருகாலத்தில் இதன் வடிவத்தையும் அல்வீடுகளையுன் வைத்து இந்த கருவி synthesizer  என்று அழைக்கப்பட்டுவந்தது. இதில் pipe organ ,கிட்டத்தட்ட கி.மு. 3  ஆம் நூற்றாண்டுகளில் இருந்தே பயன்பாட்டில் இருந்ததும்  தெரிய வந்துள்ளது.

                                                 ஆனால்,  14  ஆம் நூற்றாண்டுக்கு பிறகு இவை பெரிய அளவில் மாற்றம் பெற்றன.  இதன் மீது அமைக்கப் பட்டிருக்கும் எண்ணற்ற விசை துருத்திகளை மாற்றி மாற்றி அழுத்துவதன் மூலம் நாம் இதிலிருந்து ஒரு தனித்துவமான இசையை பெறுகிறோம். கீ போர்டு இசைப்பது என்பது சாதாரணமாக முடிகிற காரியமல்ல. அது மனம் சார்ந்தது. இசை என்பது அமைதியான தருணத்தில்தான் பிறக்கிறது.

                                                   கைகளால் விசைதுருத்திகளை அழுத்தும்போழுது இசையால் மனதை இன்பமடைய செய்யும்  ஹார்மோனிய கருவிகளை நம் கண்ணிலிருந்து மறைய செய்த வருத்தமான பெருமை இந்த மின்னணு  கி போர்டு இசைகருவிகளுக்கு எப்போதும்  உண்டு. மீண்டும்  ஒருமுறை எப்போது வேண்டுமானாலும் இதை நாம்  நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். இசைகருவி  வரலாற்றில் கி போர்டு கண்டுபிடிக்கப்பட்டது ஒரு மைல் கல்லாகும்.

                                                   எண்பதுகளில் கோலோச்சிய இளையராஜாவையும் , கூடவே பயணித்த சக இசைக்கலைஞர்களின் இசையையும் தங்கள் வாழ்வோடு இணைத்துப் பார்த்த பார்வை இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கிறதா? என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும், அந்த அளவுக்கு இந்த மேற்க்கத்திய இசைக்கருவியின் தாக்கம் உலக இசை ஆர்வலர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

                                                   இந்த வகை இசைக்கருவிகளை நாம் இரண்டு வகையாக பிறக்கலாம். அவை pianos, harpsichords, clavichords, முதலிய தந்தி இசைக்கருவியும்,  organs, harmonia, regals, accordions, முதலான காற்று இசைக்கருவியும் ஆகும்.

                                                    இன்றைய இளம் தலைமுறை இசைக் கலைஞர்களில் கி போர்டு வாசிக்க தெரியாதவர்கள் அனேகமாக யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் அனைத்து இசைக்கருவிகளின் ஸ்வரங்களையும்  சுருட்டி மடக்கி தனக்குள்ளே பதுக்கி வைத்துக்கொண்ட அற்ப்புத கண்டுபிடிப்பு இது. இதில் இருக்கும் வெள்ளை கட்டைகள் பெரும்பாலும் யானை தந்தங்கலாலோ அல்லது பிளாஸ்டிக் போருட்கலாலோ செய்யப்படுகின்றன.

                                                     இதில் ஹார்மோனியமும்  வாசிக்கலாம்..பியானோவும் வாசிக்கலாம்...ஒரு கச்சேரிக்கு தேவையான அனைத்து இசை துணுக்குகளையும் மின்னணு தொழில் நுட்பத்தின் உதவியால் தனக்குள்  பதுக்கி வைத்துக்கொண்டு இருக்கும் இந்த கருவியை ஒரு மனிதனே இயக்கி மக்களுக்கு பல்வேறுபட்ட இசை இன்பத்தை அள்ளி கொடுக்கமுடியும்.

                                                    ஒரு காலத்தில் இசை  என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்கபட்டு வந்தது. அதனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளே இதுபோன்ற கருவிகள் வைத்துகொல்வதை தீர்மானித்தன. ஆனால், இன்றைய நிலைமை அப்படியில்லை. வீட்டுக்கு வீடு ஒரு கீ போர்ட் என்பது போல...எங்கு பார்த்தாலும் வயதுவித்தியாசம் இல்லாமல் இசைப்பயிற்சி செய்ய கிளம்பிவிடுகிறார்கள் நம்மவர்கள்.

                                                     தனி தனியாக நாதஸ்வரமும் புல்லாங்குழலும் படிக்கவேண்டிய அவசியமில்லை...ஒரே கருவியிலேயே படித்து முடித்துவிடலாம்...தனித் தனியாக கிடாரும் வயலினும் கற்றுக் கொள்ளவேண்டிய அவசியமில்லை...ஒரு கருவியிலேயே கற்று முடித்து விடலாம்.

                                                    இசைகோட்பாட்டை நிறுவியவரும் நவீன இசைகுரியீட்டின் தந்தையாகவும் கருதப்படுபவர்தான்  guido of arezzo . சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒரு ஆய்வில் இவர் 9  ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாலி நகரத்தில் ஒரு மடாலயத்தில் வாழ்ந்தார் என்பதை அங்கு  இவர் கைப்பட எழுதியதாக கிடைத்த ஒரு கடிதத்தின் மூலம் அறியமுடிகிறது. 

                                                     அன்றைய காலகட்டத்தில் மடாலயத்தில் பாடல்களை வகைபடுத்தி அவற்றை ஒழுங்கு செய்ததோடு  ஒலிகளின் அளவையும் வரையறுத்தார். இதனால் அவர் புகழ் உலகெங்கு விரிந்தது. பின்னாளில் அவரின் பெயரை சுமந்து பல இசைகோட்ப்பாடுகளும் நிறுவங்களும் புகழ்ப்பெற்றன.

                                                     மிகவும் பழமையான கி போர்டு clavichord  ஆகும். இது நீண்ட செவ்வக வடவத்தில் காணப்பட்டது. இதையடுத்து HARPSICHORD. வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இது 20  ஆம் நூற்றாண்டின் பொது நிகழ்ச்சி இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 60  ஆண்டுகள் இந்தவகை கருவிகள் பயன்பாட்டில் இருந்தன. இந்த கருவிகள்தான் பின்னாளில் பியானோ போன்ற இசை கருவிக்கு முன்னோடியாகவும் அமைந்தது.
   
                    இன்றிய நவீனத்தின் வரவால் கணினியிலேயே கி போர்டை பயன்படுத்தி வாசித்துகொண்டிருக்கிரார்கள் நம் இசையமைப்பாளர்கள். எந்த ஒரு இசை நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் ஒரு கி போர்டு நிச்சயம் இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். ஒரு கருவியில் வாசித்து அதை copy செய்து மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல முடியும்.

                    மின்னணு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று கணினியிலேயே கி போர்ட்களை கற்றுக்கொள்ள முடிகிறது. ஒரு வீடு அளவுக்கு விரிந்திருந்த ஒரு இசைக்கருவி இன்று நாம் வெளியே செல்லும்போது கையில் எடுத்துச்செல்கிற அளவுக்கு சிறிய அளவிலான கருவியாக மிகவும் அழகாக வடிவமைக்கப் பட்டிருகின்றன. விலைகளுக்கு ஏற்ப கி போர்ட்களின் தரங்களும் ஆச்சர்யபடுத்துகின்றன.

                    கி போர்டு இல்லாமல் திரை இசை இயங்கமுடியாது என்னும் அளவுக்கு சினிமாக்களின் வளர்ச்சியை இன்றைய காலகட்டத்தில் கி போர்ட்களும் தீர்மானிக்கின்றன என்பது உண்மைதான். சிலர் ஆத்மார்த்தமாக இந்த கருவியை வாசிக்கும் பொழுது தங்களின் சுய நிலையை மறக்கும்படி செய்துவிடுகிறது இந்த கருவியிலிருந்து எழும் இசை.

                    ஒரே நேரத்தில் பல்வேறு கருவிகளின் இசையை கேட்க்கமுடிவதால் எல்லோருக்கும் பிடித்த ஒரு இசைக்கருவியாக கி போர்டு வளர்ந்து வருகிறதை யாராலும் தடுக்க முடிவதில்லை என்னும் உண்மையை நாம் உணரத்தான் வேண்டியிருகிறது.


வேக சுகுமாரன். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்