கிடார் இசைக்கருவி..!


கிடார் இசைக்கருவி..!
 


                                     இன்று பெரும்பாலும் இசை உலகினரால் விரும்பப்படும் ஒரு நரம்பிசைக் கருவி.  ஏழு அல்லது எட்டு தந்திகளை கொண்டதாக இருந்தாலும் இதிலிருந்து எழும்பும் சப்தங்கள் சில மணித்துளிகளில் கேட்பவரை கிறங்க செய்துவிடுகிறது. சில கிட்டார்கள் 18  தந்திகள் வரை பயன்படுத்தபட்டிருக்கிறது.

                                    இன்றைய இளைஞர்களின் கனவில் வந்துவிட்டு செல்கிற ஒரு இசைக்கருவி எதுவாக இருக்கும் என்றால் அது கிடாராகதான் நிச்சயம் இருக்கும். அந்த வகையில் எல்லோர் மனதிலும் நங்கூரம் பாய்ச்சியிருக்கிற இசைக்கருவி இன்றைய நவீன உலகில் கிடார் என்றால் அது மிகையில்லை.

                                    கிடாரில் இரண்டு வகை உண்டு ஒன்று aquastic  மற்றொன்று எலெக்ட்ரிக். சில நவீன கிடார்கள் பாலிகார்பனேட் பொருள்களை கொண்டும்  தயார் செய்யப்படுகிறது. German Spruce, Western Red Cedar, East Indian Rosewood, Spanish Cypress, African or Madagascar Rosewood போன்ற மரங்களின் பலகைகளை பயன்படுத்தியே கிடார் தயாரிக்கப்படுகிறது.

                                    கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் கிட்டார்கள் முறையான வடிவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றாலும் இதன் ஆரம்பகாலகட்டம்  ஒன்பது நூற்றாண்டுகளை கடந்து நிற்பதாகவும் சில வரலாற்று பக்கங்கள் நமக்கு துணை நிற்கின்றன.

                                   இப்படி பல நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கிடார் இசைக்கருவிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை  aquastic கிடார்  எனப்படும் உள்ளீடற்ற வகையும், மின்னணு தொழில்நுடபத்தால் உருவாக்கப்பட்டவையும் ஆகும். பாரம்பர்ய  கிடார்களில் நைலான் அல்லது பாலிமர் தந்திகள் பயன்படுத்தபடுகின்றன.

                                    பன்னிரண்டு சரம் கிதார்கள் மற்றும் தட்டையான மேற்பூசிய வில்வளைவுகளையுடைய கித்தார் நாட்டுப்புற கிடார் உள்ளிட்ட எஃகு சரம் கித்தார்; பாரம்பரிய மற்றும் ஃபிளெமெங்கோ கித்தார்: ஒலி கிட்டார் போன்றவையடங்கும். ஒலி கிட்டார் குழுவில் உள்ள பல குறிப்பிடத்தக்க துணைப்பிரிவுகளாக உள்ளன.

                                   1930  ஆண்டுக்கு பிறகே மின்னணு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மின்னணு கிடார்கள் பயன்பாட்டுக்கு வந்தன. மின்னணு கிடார்களின் தாக்கத்தால் இன்று இசை உலகில் ஒரு தொடர்ச்சியான ஆழமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.
                                                              
                                     இன்று எந்த ஒரு மேடை நிகழ்சிகளிலும் கிடார் இல்லாமல் இருப்பதேயில்லை. அந்தளவிற்கு இதன் வளர்ச்சி நிகழ்ந்திருக்கிறது.  இது பெரும்பாலும் மெட்டல் இசைகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. ப்ளுஸ், ராக், பாப், ஜாஸ், ஆன்மா, ப்லமின்கோ போன்ற இசைவடிவங்களின் மூல இசைக்கருவியாக கிடார் தொடர்ந்து இசைக்கப்பட்டு வருவதே அதற்க்கு சான்று.

                                    20 ஆம் நூற்றாண்டுவாக்கில் ஒருபுறம் நாட்டுப்புற கலைகள் வளர்ச்சியடைந்து வந்தாலும் மறுபக்கம் ப்ளூஸ் மற்றும் ஜாஸ் இசையுருவின் வளர்ச்சியால் கிடார் போன்ற மேற்கத்திய இசைகருவிகளின் வளர்ச்சியும் ஒவ்வொருநாளும்  நிகழ்ந்தபடிதான் இருக்கிறது. இதனால் இசைக்கருவி தயாரிப்பாளர்கள் சிறிது திருப்தியுடன் காணபட்டார்கள்.
                                    ஆரம்பத்தில் கிடார் இசைக்கருவி வயலினை ஒத்து காணப்பட்டது. அதிகபட்சமாக நான்கு தந்திக்கம்பிகள் காணப்பட்டன. நீண்ட கழுத்தை உடையதாகவும் தட்டையான மர சவுண்ட்போர்டு, விலா, மற்றும் ஒரு தட்டையான பின்பக்கம்  என வரையறுக்க பட்டிருந்தது.


                                     12 ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு ஐரோப்பாவிலிருந்து இது அமெரிக்காவிற்கு பரவியது. கிடார் என்றழைக்கப்படும் இன்றைய நவீன இசைக்கருவி சிதார் எனப்படும் இந்திய இசைக்கருவியிலிருந்து வந்திருக்கலாம் என ஆய்வறிஞர்கள் கருதுகிறார்கள்.


                                     12  ஆம் நூற்றாண்டுவாக்கில் இரண்டுவகையான கருவிகள் பயன்பாட்டில் இருந்தன அவை guitarra moresca (Moorish guitar) மற்றும்  guitarra latina (Latin guitar) எனப்படுபவை ஆகும். ஆனால், 15  ஆம் நூற்றாண்டுக்கு பிறகு சிறப்பான மாற்றத்தை கண்டதாக இசை அறிஞர்கள் கூறுவார்.
                                     1939 ஆம் ஆண்டு மின்னணு கிடாரை இசை உலகுக்கு அறிமுக படுத்திய லெஸ் பால் அவர்களை போல் அவருடைய மிக பெரிய போட்டியாக லியோ பெண்டர் இருந்தார்.
                                      19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிடார் இசை செல்வாக்கிழந்து காணப்பட்டது. ஆனால், பிரான்சிஸ்கோ terrega போன்றோரின் முயற்சியாலும் "Receurdos டி லா ஆலம்பரா" போன்ற அவரின் புகழ்பெற்ற இசைபடைப்பு மீண்டும் கிடார் இசையை உலகறிய செய்தது என்றும்கூட சொல்லலாம்.  
                                      எது எப்படியோ பெரும்பாலான திரைப்பாடல்கள் கிடார் இசையை நம்பியே பொருளாதார கணக்குபோடும் அளவுக்கு கிடாரின் மோகம் இன்றைய இளைஞர்களை மனதளவில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நம்மால் மறுத்துவிடமுடியாது.

 வேக சுகுமாரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்