புருவகாலம்..!
புருவகாலம்..1
எந்த தருணம் என்று எனக்கு தெரியவில்லை. அனால், அது ஏதோ ஒரு பகல் பொழுதாகத்தான் இருக்கும் என்று மட்டும் நினைக்கிறேன்.
இருப்பினும், என் தாய் தந்தையரை நான் நினைத்துக் கொள்கிறேன் இந்த சமயத்தில். மதிய உணவுக்காக பள்ளிக்கூடவாசல் மிதித்த காலம் கடந்து புத்தக மூட்டையை சுமக்க வைத்ததர்க்காய் அவர்களுக்கு இன்னும் ஓர் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

முப்போகம் விளையும் விவசாய பூமியல்ல என் கிராமம். காவிரியின் வருகைக்காய் காத்துகிடக்கும் கானலின் உறவுக்கார பூமி. என்னதான் பசுமையின் நிறத்துக்கு பக்கத்தே சற்று விலகி நின்றாலும் என் கிராமம்தான் எனக்கு எப்போதும் அழகு .
தென்றலின் வார்த்தைக்கு அர்த்தம் கற்றுகொண்டது அங்குதான். நட்பின் புத்தகத்தில் நான் இலக்கணம் படித்தது அங்குதான். ஞாபகம் தெரிந்த நாள் முதல் நான் சுற்றாத தெருவில்லை என் கிராமத்தில்.
அத்தனை தெருக்களிலும் நண்பர்களை அப்போதே சம்பாதித்து விட்டேன் நான். இருப்பினும் ஒரு உண்மையை சொன்னால் அதிகமாய் என் கிராமத்தில் இருப்பதே ஐந்து அல்லது ஆறு தெருக்கள்தான்.
எல்லோரையும் போலத்தான் இனிமையின் சிறகுகட்டி நானும் அப்போது சுற்றித்திரிந்தேன்......பின்னொரு காலம் வாழ்க்கையின் யதார்த்தத்தை வரி பிசகாமல் புரியவைத்த பூமி அது.
புருவகாலம் தொடரும்...
வேக சுகுமாரன்.
உங்கள் கிராமத்து நினைவுகளையும், அங்கு வாழும் எளிய மனிதர்களையும், உங்கள் இளமைப் பருவ நினைவுகளையும் வாசிக்க ஆவலோடு காத்திருக்கிறோம். புருவகாலம் தலைப்பே அழகாய் இருக்கிறது. தொடருங்கள்.
பதிலளிநீக்குஉங்கள் ஆதரவு இருக்கும்வரை நன்றி நண்பரே.
பதிலளிநீக்கு