மரணத்தின் வாசலில்

சூரிய கிரணங்கள் இல்லை விடியலுக்கான நேரம் போல, அந்த மாலை அகண்டு விரிந்த வெளிகளுக்கு அப்பால்... நான் மட்டும் நடக்கிறேன் தனியாக என்னுடல் - நான் படுத்த இடத்திலேயே கிடக்கிறது. அறையின் மத்தியில் பாய்களின் பந்தியில் நான் கிடக்கிற கோலம்... எனக்கும் சில நேரம் கேள்வியை தரும். மேகக் கூட்டங்கள் மெல்லக் கரைந்துக் கொண்டிருக்கும் வான்வெளியில்... இன்னும் இன்னும் என் மனக் கண்ணிலேயே கிடக்கிறது... அந்த அந்திமக்காலங்கள். மரணத்தின் வாசலில் வாழ்க்கையோடு போரிட்டுக் கொண்டிருக்கிறேன்... வாழ்க்கையின் வாசலில் மரணத்தொடுப் போரிட. எனக்கு நானே புறமுதுகு... எனக்கு நானே எதிரி... எனக்கு நானே தீவைக்கிறேன்... என்னுடல் எரிகிறது... அது எரியும் வரை அருகிலிருந்து பார்க்கிறேன் அமைதியாக. பின்பு, நான் மட்டும் நடக்கிறேன் தனியாக... என்னுடல் - நான் படுத்த இடத்திலேயே கிடக்கிறது. வேக சுகுமாரன்