புருவகாலம்

குருவிகளின் எச்சத்திலிருந்து முளைத்த ஆலஞ்ச்செடிகளின் விழுதுகள் அந்த காரைபடிந்த பழைய காலத்து செங்கல் சுவற்றோரமாய் படர்ந்து படுத்திருக்க கருவறை வெடித்து விகாரமாய் வெளியே பார்த்து சிரிக்கிற,... முருகன் கோயிலின் நான்கு பக்க சுவற்றையும் எப்படியாவது கட்டி எழுப்பி முடித்துவிடவேண்டும் என கனவு கண்ட என் கிராமத்து தாத்தாக்களின் கனவையெல்லாம் இன்னமும் பூசி மெழுகியபடிதான் பயணிக்கிறது என் கிராமம். ஆண்டுதோறும் பங்குனியில் தலைக்கு மொட்டையடித்து குடும்பத்தோடு விருந்தினரை உபசரித்து சொந்தம்பந்தங்களை கூப்பிட்டு சந்தோஷத்தை பகிர்ந்துகொண்ட அந்த இனிய தருணத்தை வழங்கிய பஞ்சாங்க பக்கம் ஒன்று சொல்லும் ஓவ்வொ...