மனிதனை மதிப்போம்..!





                                ஒரு மனிதனை வாழ்க்கை எப்படியெல்லாம் சிந்திக்க செய்துவிடுகிறது. அவன் சார்ந்திருக்கும் சூழலும் மனிதர்களும் தான் அவனை ஒரு இழிவான பிரஜையாக மாற்றிவிடுகிறார்கள். 

                               இந்த உலகில் அவன் வாழ வேண்டும் என எத்தனை கனவு கண்டிருப்பான். அவனுடைய வாழ்க்கை எத்தனை சுவாரஸ்யமாக இருக்கவேண்டும் என அவன் நினைத்திருப்பான். ஆனால், அவனுடைய வாழ்க்கையின் நீர்மத்தில் கல்லெறிந்து கலைத்துவிடுகிறார்கள் மற்ற மனிதர்கள். 

                              அவர்கள் ஒருபோதும் தவறுகளை பற்றி நினைப்பதேயில்லை. அதனால் எத்தனை மனிதர்களின் வாழ்க்கை இடிந்துபோகிறது என்று கூட யோசிப்பதேயில்லை. 

                              இப்படி எந்த மனிதனைப் பற்றியும் யோசிக்காமல் இருப்பவர்களை நாம்  எந்த ஜென்மத்தில் கொண்டு சேர்ப்பது? நல்ல மனிதர்கள் தங்களின் சக மனிதனையும் ஒவ்வொரு நிமிடத்திலும் மதித்து நடக்க முயற்சிக்க வேண்டும். 

                             அவர்களின் நடத்தைதான் மற்ற மனிதனை அன்புடன் வாழ வகை செய்யும். ஆனால், யார் இப்படி செய்கிறார்கள்?  யாரும் மற்றவர்களை மதித்து நடக்க கூட ஒரு நிமிடம் யோசிக்கத்தான் செய்கிறார்கள். 

                             மனிதனே மனிதனை மதிக்காதபோதுதான் மனிதனின் மனம் வாழ்க்கையை வெறுத்து வெறுமையாகி விடுகிறது. அந்த சூழல்தான் அவனை யோசிக்க விடாமல் செய்து உயிரையும் மாய்த்துக் கொள்ளசெய்கிறது. 

                            அப்படி ஒரு நிலைமையில் நான் ஒருவனை கண்டேன் இன்று. அவனுக்கு என்ன நடந்ததோ...அவன் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க கூடும். மனிதனை மதிப்போம்.உலகில்  மனிதத்தை மலர வைப்போம்.


வேக சுகுமாரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்