மாசுபட்ட நாடுகளின் வரிசையில்!

     



                      
 
                       இறைவனின் படைப்பில் யாராலும் மறுக்கமுடியாத ஓர் அதிசயமாய் திகழ்வதுதான் இந்த உலகமும் இதில் உள்ள உயிரினங்களும். அப்படி, அதிசய கோலமாய் பார்க்கப்படும் பூமியில் மட்டும்தான் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

                       எனினும், மனித இனம் செய்யும் தவறுகளால் எதிர்காலத்தில் இந்த உலகத்தில் மனித இனம் வாழ முடியாமலும் போகலாம் என்கிற சந்தேகத்தை வரவழைத்திருக்கிறது சுற்றுப்புற கேடு.

                       உலக மக்கள் தொகையில் சரிபாதி இந்தியாவிலும் சீனாவிலுமே இருக்கின்றன. மக்கள் தொகை பெருக்கத்தில் மட்டும் தான் இந்த நாடுகள் முன்னணியில் இருக்கின்றனவா என்றால் இல்லை என்பதுதான் சரி.

                       ஒவ்வொரு நாளும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியங்களால் தேவையற்ற பொருட்கள் சேர்ந்து குப்பையாகவும் உயிர்களுக்கு தீமை விளைவிக்கும் நோய் கிருமிகளை ஏற்படுத்தும் பகுதிகளாகவும் மாறி எதிர்கால சந்ததியை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது இந்த கேள்வி.

                       உலகில் மிக மோசமாக மாசுபட்ட நாடுகளின் வரிசையில் சாம்பியா, உக்ரைன், ரஷ்யா, பெரு, பங்களாதேஷ், இந்தியா, சீனா போன்ற நாடுகள் வரிசை படுத்தபட்டிருக்கின்றன. வளரும் நாடுகளிலேயே குப்பைகளால் இவ்வளவு சிக்கல்கள் என்றால் வளர்ச்சியின் பாதையில் பயணம் செய்கிற மற்ற சிறிய நாடுகளின் நிலை என்ன?

                      சாதாரணமாக குப்பைகள் தாமாக வருவதில்லை. நாம் தான் உருவாக்குகிறோம். நமக்கு தேவையற்ற ஒன்றை சேர்த்து வைப்பதன் மூலமாக நாம்தான் கழிவுகளின் கிடங்காய் இந்த உலகை மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

                      சாதாரண மக்களில் பலர் குப்பைகள் நிறைந்த இடங்களில் தான் தங்களின் வசிப்பிடத்தையே அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு கேள்விகளுக்கும் அவர்களிடமிருந்து பதில்கள் பிரப்பதேயில்லை. காரணம் அவர்கள் வறுமைகோட்டின் பிரதிநிதிகள். 

                       தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிக் கூட அவர்களால் யோசிக்க முடிவதில்லை என்பதுதான் உலக பொருளாதாரத்தின் கேலி சித்திரமாய் நம் கண் முன்னே விரிகிறது.

                        நாம் பொறுப்பின்றி செய்யும் பல காரியங்கள் பின்பு, நமக்கே பாதகமாய் மாறிவிடுவதுதான் வேதனையான ஒன்று. நம் கௌரவத்தின் ஒரு பகுதியாக நாம் பிளாஸ்டிக் எனும் அரக்கனை நமக்கு தெரியாமலேயே வளர்த்துவிட்டிருகிறோம்.

                      ஒவ்வொரு நாளும் நாம் பருக கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்கப்படும் நீரைத்தான் நாம் பயன்படுத்துகிறோம்.  இப்படியாக, உலகில் அதிகமான ஒரு குப்பையாக சேர்ந்து உயிர்களுக்கு தீமையை ஏற்படுத்தி வருபவை water packetகளே.  
               
                      இந்துக்களின் புனித நதியாய் கருதப்படும் கங்கை அசுத்தங்களால் நிரம்பி வழிவதை பார்த்துக் கொண்டு நம்மால் எதுவும் செய்யமுடிவதில்லை. அந்தளவிற்கு கழிவுகள் நீரில் கலந்துவிட்டிருக்கின்றன. இறந்துபோன பின்பு பிணத்தை வீசியெறியும் கலாச்சாரம் இங்குதான் நடக்கிறது. பின்பு எப்படி அதை சுத்தமான நதியாக நாம் கருதமுடியும்?
                     
                      சென்னையில் மட்டும் ஒவ்வொரு நாளும் 3200 டன்கள் குப்பைகள் வெளியேற்றப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில்தான் சேமிக்கப்படுகின்றன. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 100 000 மக்கள் வசிப்பதாக கணக்கிடப்பட்டிருக்கின்றன.

                      மலை போன்று நிமிர்ந்து நிற்கும் இந்த குப்பைகளால் சுற்று புறத்தில் உள்ளவர்களுக்கு நோய்க்கிருமிகள் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விட்டிருக்கின்றன சில சூழியல் நிறுவனங்கள். 

                      இதே போல் தேவையற்ற பொருள்களின் தேக்கத்தால் குப்பைகளும் கழிவுகளும் சேர்ந்து காற்றையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி விடுகின்றன. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் எளிதில் பரவ வழி வகுத்து விடுகின்றன. 

                       அடையாரை சுற்றியுள்ள நதி முகத்துவாரத்தில் குப்பைகள் சேர்ந்து நீர்வளம் கெட்டு போயிருப்பதை நம்மால் உணரமுடிகிறது.

                       வெளி மாநிலத்தவர்களும் தனியார் நிறுவனக்களில் AC அறைகளில் வேலை பார்ப்பவர்களும்  கூட இது போன்ற பகுதிகளில் குறைவான வாடகைக்கு வீடு எடுத்து தங்கி விடுகிறார்கள்.

                       இப்படி தங்குபவர்களின் கழிவுகள் ஒவ்வொருநாளும் இந்த ஆற்றில் தான் திறந்து விடப்படுகிறது. இருப்பினும் இங்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறதே ஒழிய குறைந்த பாடில்லை.

                      இதோ இந்த குறுகிய கால்வாய் வழியாகத்தான் இவர்கள் தினமும் கடந்து போகிறார்கள். இங்குள்ள குழந்தைகளின் உடல்நலம் கேள்வி குறியாகவே இருக்கிறது.
                     
                      சில நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் அவ்வபோது அந்த பகுதியில் வசிக்கும் மக்களால் எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது.

                      சென்னையில் அடையார் பகுதியில் உள்ள நதி முகத்துவாரத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு பரவலான அளவில் புன்னைவனங்கள் இருந்ததாகவும் சுற்றுப்புற சீர்கேட்டால் அவை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன என்றும்....

                       மேலும் அரியவகை உயிரினங்களான mud crab , sand fish , போன்றவை உலகிலேயே இரண்டாவதாக இங்குதான காணப்படுகின்றன எனவும் நமக்கு சென்னை யூத் எக்ச்னோரா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி நிஷா தொட்டே அவர்கள் விளக்கியபடி இருந்தார்.

                        அவரின் வார்த்தைகள் ஒன்றைத்தான் நமக்கு சொல்லியபடி இருந்தன அவை நம்முடைய சுய சிந்தனையில்லாமல் இது போன்ற கழிவுகளை நாம் ஒரு காலும் அகற்ற முடியாது என்பது.

                       சரியான விழிப்புணர்வும் அரசு உதவியும் இருந்தால் மட்டுமே இது போன்ற மக்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை நம்மால் கொண்டுவரமுடியும்.



வேக சுகுமாரன். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்