சுதந்திரம் வாழ்க!
ஜாதிகளும்
ஜாதிய வாதிகளும்
ஜாதி போட்டு செல்ல...
வாதிகளும்
வாத பிரதிகளும்
வரிசையாய் இருக்கை கொள்ள...
நாளைய தேசம்
நமதில்லைஎன்றால்...
அது,
நம் பங்காளியுடையதாகும்.
அதையும் தாண்டி,
நம் பகையாளியுடையதும் ஆகும்.
சுதந்திரம் வாழ்க!
ஜாதிய வாதிகளும்
ஜாதி போட்டு செல்ல...
வாதிகளும்
வாத பிரதிகளும்
வரிசையாய் இருக்கை கொள்ள...
நீதியும்
நிம்மதியும்
பறிபோய் விட்டன.
ஆம்,
நாளொரு பக்கமாய் பறிக்கப்படும்
நம்மக்களின் வாழ்க்கை
நசுக்கப்பட்டு
நடைபாதையில் கிடக்கிறது.
நாளைய தேசம்
நமதில்லைஎன்றால்...
அது,
நம் பங்காளியுடையதாகும்.
அதையும் தாண்டி,
நம் பகையாளியுடையதும் ஆகும்.
சுதந்திரம் வாழ்க!
வேக சுகுமாரன்.
கருத்துகள்
கருத்துரையிடுக