இடுகைகள்

ஆகஸ்ட், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாசுபட்ட நாடுகளின் வரிசையில்!

படம்
                                                      இறைவனின் படைப்பில் யாராலும் மறுக்கமுடியாத ஓர் அதிசயமாய் திகழ்வதுதான் இந்த உலகமும் இதில் உள்ள உயிரினங்களும். அப்படி, அதிசய கோலமாய் பார்க்கப்படும் பூமியில் மட்டும்தான் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.                        எனினும், மனித இனம் செய்யும் தவறுகளால் எதிர்காலத்தில் இந்த உலகத்தில் மனித இனம் வாழ முடியாமலும் போகலாம் என்கிற சந்தேகத்தை வரவழைத்திருக்கிறது சுற்றுப்புற கேடு.                        உலக மக்கள் தொகையில் சரிபாதி இந்தியாவிலும் சீனாவிலுமே இருக்கின்றன. மக்கள் தொகை பெருக்கத்தில் மட்டும் ...

உனக்கும் எனக்குமாக

                    வெற்று வார்த்தைகளுக்காக பலரது உழைப்பை கொச்சை படுத்துகிறவர்களை நாம் என்னவென்று சொல்வது? பேச்சில் மட்டும் சாணக்கியத்தனம் காட்டுகிறவர்கள் ஏன் அதை வாழ்ந்து காட்டுவதில்லை?                     உனக்கும் எனக்குமாக ஒரு தேசத்தின் பாதுகாப்பு அரணாய் இரவும் பகலும்...ஏன் என்று கணக்கு போட்டு பார்த்திராத ராணுவ வீரர்களின் வாழ்க்கை ஒவ்வொருநாளும் போற்றுதற்குரியதே.                                                                 ஜெய் ஹிந்த்      வேக சுகுமாரன்.

பூங்காக்கள்..!

படம்
                             பூங்காக்கள்                                                                      பூங்காக்கள்... நம்மை சில நேரம் நமக்கே அடையாளம் காட்டும் உலகின் அற்ப்புத பிரதேசமாய் திகழும் ஒரு நவீன இயற்க்கை.  நவீனத்தை தாங்கி நிற்கும் சென்னை போன்ற பெரு நகரங்களில் பூங்காக்கள்தான் இயற்கையின் அனுபவத்தை ஒவ்வொருநாளும் சொல்லி தந்தபடி இருக்கின்றன.                           ...
படம்
சுதந்திரம் வாழ்க!   ஜாதிகளும் ஜாதிய வாதிகளும் ஜாதி போட்டு செல்ல... வாதிகளும் வாத பிரதிகளும் வரிசையாய் இருக்கை கொள்ள... நீதியும் நிம்மதியும் பறிபோய் விட்டன. ஆம், நாளொரு பக்கமாய் பறிக்கப்படும் நம்மக்களின்  வாழ்க்கை நசுக்கப்பட்டு நடைபாதையில் கிடக்கிறது. நாளைய தேசம் நமதில்லைஎன்றால்... அது, நம் பங்காளியுடையதாகும். அதையும் தாண்டி, நம் பகையாளியுடையதும் ஆகும். சுதந்திரம் வாழ்க! வேக சுகுமாரன்.
படம்
தூளி மகவுக்கு மார்பை கொடுத்த தாய், தூளியிட்டு தாலாட்டுவதைப் போலத்தான்... ஒவ்வொரு நாளும் குடும்பத்தை மறந்த குடிகாரர்களுக்கு போதை வஸ்துகள் தூளியாகின்றன.  வேக சுகுமாரன்.

பூக்காம்பிலிருந்து வழியும் பால்போல்!

படம்
     என் நினைவு பகுதியில் நிறைந்திருப்பவை நிற்க முடியாமல் திணறுகிறது. ஓர் ஆயிரம் ஆண்டுகளாயினும் உனக்கு நான் உடன்படமாட்டேன்... எதற்க்காக நீ உறங்குகிறாயோ.. உயில் எழுதி வைத்துவிடு வரப்போகும் வாழ்க்கைக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை என்று. புலம் பெயர்ந்து விழுந்திருப்பவை புல்வெளிகள் என நினைத்தேன்... அவை, புதை குழிகளாய் இருக்க இன்னும்... நீ உறங்குவது அயற்சியாலா? அல்லது தளர்ச்சியாலா? தயவு செய்து தவற விடு உன் உறக்கத்தை. ஒரு சமுதாயம் சத்தமில்லாமல் சிதையிடப் பட்டிருக்கிறது. உன் காதுகளுக்கு இன்னும் வராத அந்த அவலங்களை நான் சபிக்கிறேன். உண்மையில்.. மனிதர்களால்... முலாம் பூசப்பட்டிருக்கிறது உலகு. பாத்திரங்களுக்கு பூசப்படுவதை போல. அடக்கு முறைகள், அடிமைத்தனங்கள், ஆதிக்கசிந்தனைகள்... போதும் போதும் என சொல்லும்படி வாழ்வு. ஆனாலும், எதையோ தேடும் அவசரத்திலும் மனது துக்கப்படும்போது... நீ இன்னும் உறங்கி கழிப்பது நியாயமா?  செத்தமரத்தின் சிசுக்களில் கூட - இனிய ராகம் சிறகு விரிகிறது. பூக்காம்பிலிருந்து வழியும் பா...

கடவுளே..!

படம்
  கடவுளே..! காயும் மீன்களுக்கு உப்பிடுவது எங்கள் தொழில்தான்  இங்கு வந்து பார்  அழுதுவடித்த கண்ணீரில் கூட உப்பில்லாமல் திரிகிறோம் நங்கள். வேக சுகுமாரன் 
படம்
காலம் போய்விட்டால் கிடைக்காதே..!                             தன்னிச்சையாக எந்த மாறுதலும் இல்லாமல் மனிதர்களின் கண்டுபிடிப்புகளாலும் அபரிமிதமான வளர்ச்சியினாலும் பாதிக்க்கபட்டு செயலிழந்து கிடப்பது பண்பாடும் கலாச்சாரமும் மட்டும் அல்ல. இளமை காலத்தின் இனிய ஞாபகத்தை இழந்து தவிக்கிற மனங்களும்தான்.                              ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அவன் வாழ்ந்த மண்ணோடும் காலத்தோடும் பின்னி பினைந்தல்லவா கிடக்கிறது.  என் இன்பத்தின் இன்னொரு கரையில் சிறு வயது ஞாபகம்தான் வந்து வந்து அலையடிக்கிறது.                              ஒவ்வொரு நாளின் பொழுதிலும் பள்ள...

அலையாத்திகாடுகள்

படம்
                                                                     நீரும் நிலமும் சேர்ந்ததே நாம் வாழும் உலகம் .இதில் எந்த கோணத்தில் பார்த்தாலும் நீரின் ஆதிக்கமே அதிகம் காணப் படுகிறது. நிலபரப்பும் ,    நீர்பரப்பும் சேர்ந்ததுதான் இந்த உலகம் என்று அறிவியலும் சொல்கிறது. நீர் பரப்பில்தான் அதிக உயிரினங்கள்   காணப்படுகின்றனவாம். அப்படியிருக்க , உயிர்களின் ஆதாரமாய் திகழும் நீரே சில சமயங்களில் உயிரினங்களுக்கு ஆபத்தானவையாக மாறி போவது விந்தைதான்.  ஆம் , கடலால்   ஒட்டுமொத்த மனித சமூகத்தை அழிக்க இயலும் என்பதை அவ்வபோது தாண்டவமாடும் "ஆழிப் பேரலைகள்" நிருபித்துவிடுகின்றன.  இயற்க்கைக்கு பொதுவாகவே அழிக்கும் மனப்பாங்கு   இ...

மெரினா கடற்கரை

படம்
                                   (இதில் குறிப்பிடப்படாத எத்தனையோ சிறப்புகள் மெரினாவை சுற்றி இருக்கத்தான் செய்கின்றன விவேகானந்தர் மண்டபம், செம்மொழி தமிழாய்வு மையத்தைப் போல...இருப்பினும் நிகழ்ச்சியை தொகுக்கவேண்டிய அவசரத்திலும்  நண்பன் ஆம்ஸ்ட்ராங் எழுதி கொடுத்ததற்கு நன்றிகள்.)                                  வங்காள விரிகுடா கடலின் சென்னை கரை பகுதி தான் மெரினா கடற்கரையானது. இக் கடற்கரை கிட்டத்தட்ட 12 கி.மீ நீளம் உடையது.  இதே போன்று நீளமான கடற்கரைகள் உலகில் பல இருந்தாலும்,   உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற பெருமை நமது மெரினாவுக்கு மட்டும் தான். சென்னைக்கு சுற்றுலா வருபவர்கள் இக்கடலில் கால்கள் நனைக்காமல் செல்வதென்பது இதுவரையில் இருந்ததில்லை என்று தைரியமாக கூற...

மனிதனை மதிப்போம்..!

படம்
                                ஒரு மனிதனை வாழ்க்கை எப்படியெல்லாம் சிந்திக்க செய்துவிடுகிறது. அவன் சார்ந்திருக்கும் சூழலும் மனிதர்களும் தான் அவனை ஒரு இழிவான பிரஜையாக மாற்றிவிடுகிறார்கள்.                                 இந்த உலகில் அவன் வாழ வேண்டும் என எத்தனை கனவு கண்டிருப்பான். அவனுடைய வாழ்க்கை எத்தனை சுவாரஸ்யமாக இருக்கவேண்டும் என அவன் நினைத்திருப்பான். ஆனால், அவனுடைய வாழ்க்கையின் நீர்மத்தில் கல்லெறிந்து கலைத்துவிடுகிறார்கள் மற்ற மனிதர்கள்.                                அவர்கள் ஒருபோதும் தவறுகளை பற்றி நினைப்பதே...

தூங்காதே, எழுந்தென்னைப் பார்.

படம்
 இரவுகளை கட்டியணைக்க நான் - காதலிக்கவும் இல்லை... இமைகளை  மூடிவைக்க எனக்கு - உறக்கமும் இல்லை... ரத்த பக்கங்களில் உணர்சிகளும், உரிமைகளும்... இறந்து போகும் சமயத்தில்  அழுதுவிடுகிறேன். யுத்தத்தின் பின்புலத்தில் எமது சிறுவர்கள் கத்திபிடிக்க கற்றுக்கொண்டிருப்பதை கண்கெட்டா தூரத்திலிருந்து காணும் நான்... எழுதுவிட்டேன்... இனி நான் எங்கே தூங்க? கடவுளுக்காய்... கை கூப்பி வணங்கும் முன் பாக்கெட்டை பார்த்து சரி செய்துகொள்கிறார்கள்... சரியா இருக்கிறதா சயனைடு குப்பி என. சமுத்திரத்தின் நடுவே சுறாக்களுக்கு முன்பு கிடக்கிறது இவர்களின் வாழ்க்கை. அங்கே... அக்கிரமங்களுக்கு சிம்மாசனம்... அநியாயங்களுக்கு மரியாதை... நியாயங்கள் என்ன தீங்கிழைத்தன? கை கட்டி நிற்கிறதைய்யா வீதியில். கண்ணிவெடி தேசத்தில் வேர்களின் போராட்டத்தில் வெட்டுபட்டவைகளில் இன்னொன்றும் உண்டு... அது  தமிழ். இந்த கொடுமைகளையெல்லாம் இம்மியும் பிசகாமல் பார்த்துகொண்டிருகிறேன்... நீங்களும் தான். பொய்கள் பிழைத்துக் கொள்ளும...

ராயபுரம் வந்துடுச்சு..!

படம்
                   வெளிச்சத்தின் விளிம்புகளில் என்னை தேடிக் கொண்டிருந்த ஒரு நாள்...மனம் வெறுத்து ஒதுக்கி தள்ளிவிடுகிற செயற்கை இரவுகளை சிதறிவிட  எத்தனித்த ஒரு தருணத்தில்...                    சாலை போடுவதாய் சொல்லிவிட்டு வடவாரில் இருந்து மேற்கு நோக்கி காணாமல் போயிருந்த எங்கள் ஊர் புளிய மரங்களை  எல்லாம் தேடி கண்டடைந்து அதன் பின்புறம் அமைதியாய் படுத்துக்கிடந்த பிள்ளையார் குளத்தை அடுத்த தென்னந்தோப்பின் வழியே நான் நடக்க ஆரம்பித்த போது.,                     தம்பி எழுந்திருங்க..பொழுது விடிஞ்சுருச்சு. ராயபுரம் ஸ்டாப் வந்துடுச்சு. கண்டக்டர் அண்ணன் என் தோலை தட்டி எழுப்பி விட்டபோது...அப்போது தான் என் நினைவுக்கு வருகிறது. என் கிராமத்தின் நினைவுகளில் நான் ஒரு பயணத்தின் பகுதியில் நீந்தி க...