விவசாயத்தை காக்கும் ராதாகிருஷ்ணன்


ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தால் மட்டும்தான் விவசாயம் செய்ய முடியுமா? இல்லை, விவசாயம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலே போதும் என்கிறார் சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர். வீட்டு மேல் தளத்தில் காய்கறி தோட்டம் அமைத்து அதன் மூலம் தனக்கு தேவையான ரசாயன கலப்பில்லாத ஆரோக்கியமான காய்கறிகளை உற்பத்தி செய்துகொண்டு உச்சி வெயிலில் மொட்டை மாடி தோட்டத்தின் குளுமையான  நிழலில் கண்களை மூடி சொர்கத்தை அனுபவித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த மனிதர்.
காலையிலும் மாலையிலும் தவறாமல் தண்ணீர் ஊற்றுகிறார். பூச்சிகளின் தாக்கத்திலிருந்து செடிகளை காக்க வேப்பெண்ணையை தண்ணீரில் கலந்து தெளிக்கிறார். இங்கு சேகரிக்கும் தாவர கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறார். வீட்டுக்கு பின்புறம் அமைத்திருக்கிற கழிவுநீர் சேகரிக்கும் கலனிலிருந்து இயற்கை வாயு மூலம் மின்சாரம் தயாரிக்கிறார். அலுவலக வேலையாக அவர் வெளியில் செல்லும்போது தூரத்தில் இருந்து பார்த்தால் இவரா இதையெல்லாம் செய்கிறார் என்றுதான் நமக்கு தோன்றும். மொட்டைமாடிக்கு சென்றுவிட்டால் அவ்வளவுதான் மனிதர், முழு விவசாயியாக மாறிவிடுகிறார்.

தொடர்ந்து இந்த கட்டுரையை படிக்க  http://sathiyamweekly.com/?p=115

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்