கிராம முன்னேற்றத்துக்காக பாடுபடும் தம்பதி
சொந்த ஊரின் முன்னேற்றத்துக்காக சிலர் பார்க்கிற வேலையை விட்டுவிட்டு வந்திருப்பது பற்றி கேள்வி பட்டிருப்போம். பார்த்திருப்போமா ?
அப்படி தன்னுடைய கிராமத்தை சிறிதளவேனும் மாற்றிவிட வேண்டும் என்கிற லட்சிய பாதையில் பயணிப்பவர்கள் தான் ”பயிர் அமைப்பை” சேர்ந்தவர்கள். இந்த அமைப்பு 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள தேனூர் கிராமத்தில் 2005 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இது சுற்றியுள்ள கிராமங்களிலும் தன்னுடைய பணியை செவ்வனே ஆற்றி வருகிறது.
மக்களுக்கு மிக முக்கிய தேவையான சுகாதாரம், பொருளாதாரம், நல்ல கல்வி, நீர்நிலை ஆதார பாதுகாப்பு, வேலைவாய்ப்பு கிடைக்க வழி செய்வதிலும், வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு கிடைக்க ஏற்ப்பாடு செய்வதிலும் பெரும்பாலும் கவனம் செலுத்துகிறது இந்த அமைப்பு.
செந்தில் குமார கோபாலன் என்கிற செந்திலுடைய கனவு திட்டமான கிராம மேம்பாடு திட்டத்தை முன்னெடுத்து செல்லுவதில் இவருடைய மனைவி ப்ரீத்தி தற்போது இவருக்கு பக்கபலமாய் இருந்து வருகிறார்.
மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களிலும் அமெரிக்காவிலும் கணினி மற்றும் இயந்திர பொறியியல் துறையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் பணியாற்றிய பணி அனுபவத்தை துணையாக கொண்டு தன்னுடைய கிராம முன்னேற்றத்துக்காக சொகுசு வேலையை உதறிவிட்டு மக்களோடு மக்களாக வியர்வை சிந்திகொண்டிருக்கிறார் செந்தில்.
தொடர்ந்து இந்த கட்டுரையை படிக்க http://sathiyamweekly.com/?p=2047
கருத்துகள்
கருத்துரையிடுக