சிட்டுக்குருவியை காக்கும் சாதனா


ஆண்டு தோறும் மார்ச் 20 ஆம் தேதி ”உலக சிட்டுக் குருவிகள்  தினம்”கடை பிடிக்கப்படுவதன் நோக்கமே, அதி நுட்ப திறன்கொண்ட ஒரு பறவை இனம் மனிதனோடு இணைந்து இன்புற்று வாழ்ந்தது என்பது எதிர்கால சந்ததியினருக்கு தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான்.  தற்போதைய நாகரீகம், பசுமைப் புரட்சியை அழித்து பச்சை வண்ணம் பூசி உருவாக்கப்பட்டது. அதில் எங்கிருந்து இயற்கை விவசாயம் பற்றியும், இயற்கை உணவின் மகத்துவம் பற்றியும் நாம் பேசுவது? என இன்றைய நிலை குறித்து வெடிக்கும்  44 வயது சாதனா, சென்னையை சேர்ந்த சிட்டுக்குருவி ஆர்வலர்.
மழைக் காலங்களில் ஊரெங்கும் தேங்கி நிற்கும் அழுக்கு நீரில் கூட்டம் கூட்டமாய் குளித்து கும்மாளமிடும் சிட்டுக் குருவிகளை நீங்கள் பார்த்திருக்க முடியும். தலையை ஆட்டி இறகுகளை விரித்து வெயில் காய்வதை சிறுவயதில் பார்த்திருப்பீர்கள். மரக்கிளைகளில் கீச் கீச் சத்தத்தோடு தெருவெங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த அந்த கைக்கு அடக்கமான உயிரினம் இப்போதெல்லாம் எங்கே போனதென்றே தெரியவில்லையே ஏன்?  கடந்த 30 ஆண்டுகளில் தான் இந்த பறவையினத்தின் ஒட்டுமொத்த எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிடுகிறார்கள். ஆனால், இது எத்தனை பேருக்கு தெரியும்?
ஒரு நேரத்தில் குருவினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது பெரிய வருத்தத்தை எற்ப்படுத்தியதாம் சாதனாவிற்கு. தன்னால் முயன்றவரை அதை எப்படியாவது தடுக்க முயற்சிக்க வேண்டும் என நினைத்து 2010 ஆம் ஆண்டில் முதன் முறையாக விழிப்புணர்வு பிரசாரத்தில் அடி எடுத்து வைத்த இவரது சிந்தனை இன்றுவரை தொய்வின்றியே செயலாக்கம் பெற்றுவருகிறது.
தொடர்ந்து படிக்க http://sathiyamweekly.com/?p=604

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்