நான் எதையோ சாதித்திருக்கிறேன்


திருநங்கை என்றாலே இளக்காரமாய் பார்க்கும் சமூகத்தில் தங்களுடைய செயல்களால் அவ்வபோது சிலர் நம் நினைவுகளில் நின்றுவிடத்தான் செய்கிறார்கள். அப்படி எல்லோராலும் கவனத்தில் கொள்ளப்படும் திருநங்கைகளில் குறிப்பிடத்தக்கவராய் திகழ்பவர் நூரி.
சென்னையில் பிறந்திருந்தாலும் இவரது பூர்வீகம் என்பது ராமநாதபுரம். 4 வயதில் தாய், 18 வயதில் தந்தை என இழப்புகள் ஒருபுறம் இவரை பின்தொடர  இளமையில் தடுக்கமுடியாத பாலின உணர்வு மீறல்களால் ஏனைய குடும்பத்தாரால் புறக்கணிக்கப் பட்டு வாழ்க்கையில் முதன் முதலாய் யாருமின்மையை உணர்ந்து வெறுமையை சந்தித்தபோது மரணித்துப் போகலாமா? என்று கூட பல தினங்கள் யோசித்திருக்கிறார்.
சரி இதுதான் நம் விதியென்றால் இப்படியே மூன்றாம் பாலினத்தாராக  வாழலாம் என முடிவெடுத்தபோது எப்படி வாழப் போகிறோம் என்கிற கேள்வி வேறு கண்முன்னே நிற்கிறது. என்ன செய்வது புரியாமல் விழித்தபோது… வறுமையால் வாழ்க்கையை நடத்த முடியாமல் சிரமப்பட்டு தவறான வழிகாட்டுதலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு தற்போது எச் ஐ வி தொற்றுக்குள்ளாகி வருந்திக் கொண்டிருக்கிறார் நூரி அம்மா.
தொடர்ந்து இந்த கட்டுரையை படிக்க http://sathiyamweekly.com/?p=1283

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்