இடுகைகள்

ஏப்ரல், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிராம முன்னேற்றத்துக்காக பாடுபடும் தம்பதி

படம்
சொந்த ஊரின் முன்னேற்றத்துக்காக சிலர் பார்க்கிற வேலையை விட்டுவிட்டு வந்திருப்பது பற்றி கேள்வி பட்டிருப்போம். பார்த்திருப்போமா ? அப்படி தன்னுடைய கிராமத்தை சிறிதளவேனும் மாற்றிவிட வேண்டும் என்கிற லட்சிய பாதையில் பயணிப்பவர்கள்  தான் ”பயிர் அமைப்பை” சேர்ந்தவர்கள். இந்த அமைப்பு 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள தேனூர் கிராமத்தில் 2005 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இது சுற்றியுள்ள கிராமங்களிலும் தன்னுடைய பணியை செவ்வனே ஆற்றி வருகிறது. மக்களுக்கு மிக முக்கிய தேவையான சுகாதாரம், பொருளாதாரம், நல்ல கல்வி, நீர்நிலை ஆதார பாதுகாப்பு, வேலைவாய்ப்பு கிடைக்க வழி செய்வதிலும், வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு கிடைக்க ஏற்ப்பாடு செய்வதிலும் பெரும்பாலும் கவனம் செலுத்துகிறது இந்த அமைப்பு. செந்தில் குமார கோபாலன் என்கிற செந்திலுடைய கனவு திட்டமான கிராம மேம்பாடு திட்டத்தை முன்னெடுத்து செல்லுவதில்  இவருடைய மனைவி ப்ரீத்தி தற்போது இவருக்கு பக்கபலமாய் இருந்து வருகிறார். மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களிலும் அமெரிக்காவிலும் கணினி மற்றும் இயந...

கட்டிட மேஸ்திரியின் கல்வித் தொண்டு

படம்
இந்தியாவை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட  2 லட்சம் மாணவர்கள் மேல் கல்விக்காக வெளிநாடுகள் நோக்கி பயணித்துக் கொண்டிருகிறார்கள். ஆனால், இந்தியாவின் கிராமங்களில் இருந்து ஒரு பட்டதாரி உருவாவதே இன்னும் கடினமாகத்தான் இருக்கிறது. அப்படி ஏழைகள் நிறைந்த தமிழகத்தின் தர்மபுரியில் ஒரு ஏழை மனிதன் தன் கிராமத்து பிள்ளைகளுக்கு இலவச கல்வி தரும் முயற்சியில் முனைப்புகாட்டுகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம், தருமபுரி மாவட்டம், தமிழகத்தில் குறைந்த கல்வியறிவுள்ள மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தில் செக்காரபட்டி என்கிற கிராமம் யார் கண்ணுக்கும் படாமலேயே கிடந்த காலமெல்லாம் மாறி இப்போது செக்காரபட்டி எங்கிருக்கிறது என்று கேட்டால் உடனே அதற்கு பதில் வந்துவிடுகிறது. அந்தளவிற்கு பிரபலமடைந்திருக்கிறது செக்காரபட்டி. இதற்கு காரணம் ராமகிருஷ்ணன். தொடர்ந்து இந்த கட்டுரையை படிக்க  http://sathiyamweekly.com/?p=1790

நான் எதையோ சாதித்திருக்கிறேன்

படம்
திருநங்கை என்றாலே இளக்காரமாய் பார்க்கும் சமூகத்தில் தங்களுடைய செயல்களால் அவ்வபோது சிலர் நம் நினைவுகளில் நின்றுவிடத்தான் செய்கிறார்கள். அப்படி எல்லோராலும் கவனத்தில் கொள்ளப்படும் திருநங்கைகளில் குறிப்பிடத்தக்கவராய் திகழ்பவர் நூரி. சென்னையில் பிறந்திருந்தாலும் இவரது பூர்வீகம் என்பது ராமநாதபுரம். 4 வயதில் தாய், 18 வயதில் தந்தை என இழப்புகள் ஒருபுறம் இவரை பின்தொடர  இளமையில் தடுக்கமுடியாத பாலின உணர்வு மீறல்களால் ஏனைய குடும்பத்தாரால் புறக்கணிக்கப் பட்டு வாழ்க்கையில் முதன் முதலாய் யாருமின்மையை உணர்ந்து வெறுமையை சந்தித்தபோது மரணித்துப் போகலாமா? என்று கூட பல தினங்கள் யோசித்திருக்கிறார். சரி இதுதான் நம் விதியென்றால் இப்படியே மூன்றாம் பாலினத்தாராக  வாழலாம் என முடிவெடுத்தபோது எப்படி வாழப் போகிறோம் என்கிற கேள்வி வேறு கண்முன்னே நிற்கிறது. என்ன செய்வது புரியாமல் விழித்தபோது… வறுமையால் வாழ்க்கையை நடத்த முடியாமல் சிரமப்பட்டு தவறான வழிகாட்டுதலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு தற்போது எச் ஐ வி தொற்றுக்குள்ளாகி வருந்திக் கொண்டிருக்கிறார் நூரி அம்மா. தொடர்ந்து இந்த கட்டுரையை படிக்க...

விவசாயத்தை காக்கும் ராதாகிருஷ்ணன்

படம்
ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தால் மட்டும்தான் விவசாயம் செய்ய முடியுமா? இல்லை, விவசாயம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலே போதும் என்கிறார் சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர். வீட்டு மேல் தளத்தில் காய்கறி தோட்டம் அமைத்து அதன் மூலம் தனக்கு தேவையான ரசாயன கலப்பில்லாத ஆரோக்கியமான காய்கறிகளை உற்பத்தி செய்துகொண்டு உச்சி வெயிலில் மொட்டை மாடி தோட்டத்தின் குளுமையான  நிழலில் கண்களை மூடி சொர்கத்தை அனுபவித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த மனிதர். காலையிலும் மாலையிலும் தவறாமல் தண்ணீர் ஊற்றுகிறார். பூச்சிகளின் தாக்கத்திலிருந்து செடிகளை காக்க வேப்பெண்ணையை தண்ணீரில் கலந்து தெளிக்கிறார். இங்கு சேகரிக்கும் தாவர கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறார். வீட்டுக்கு பின்புறம் அமைத்திருக்கிற கழிவுநீர் சேகரிக்கும் கலனிலிருந்து இயற்கை வாயு மூலம் மின்சாரம் தயாரிக்கிறார். அலுவலக வேலையாக அவர் வெளியில் செல்லும்போது தூரத்தில் இருந்து பார்த்தால் இவரா இதையெல்லாம் செய்கிறார் என்றுதான் நமக்கு தோன்றும். மொட்டைமாடிக்கு சென்றுவிட்டால் அவ்வளவுதான் மனிதர், முழு விவசாயியாக மாறிவிடுகிறார். தொட...

நூற்றாண்டின் சிறந்த மனிதர்

படம்
எதைச் செய்தாலும் கணக்கு பார்த்து செய்வதே நம்முடைய மிகப் பெரிய பழக்கமாய் இருக்கிறது. அப்படிச் செய்தாலும், யாருக்காக உதவி செய்தோமோ, அவர்களிடமே அதை சொல்லிக் காட்டி அவர்களை துயரப் படுத்திவிடுகிறோம். எல்லா மனிதர்களும் ஒரு வகையில் இப்படித்தான் இருக்கிறார்கள். இவற்றிலிருந்தெல்லாம் வேறுபட்டு தனக்கு கிடைத்த வருமானத்தை எல்லாம் ஆதரவற்ற, ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக கொடுத்துவிட்டு ”பாலம்” என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக சேவையாற்றி வருகிறார், 65 வயது மதிக்கத்தக்க இந்த மாமனிதர் கல்யாண சுந்தரம். இவர் படித்துப் பெற்ற பட்டங்களை எழுதினால், அதுவே ஒரு தனி வரியாக அமைந்து இவரின் மேன்மையை நமக்கு உணர்த்தும். தொடர்ந்து படிக்க http://sathiyamweekly.com/?p=363

சிட்டுக்குருவியை காக்கும் சாதனா

படம்
ஆண்டு தோறும் மார்ச் 20 ஆம் தேதி ”உலக சிட்டுக் குருவிகள்  தினம்”கடை பிடிக்கப்படுவதன் நோக்கமே, அதி நுட்ப திறன்கொண்ட ஒரு பறவை இனம் மனிதனோடு இணைந்து இன்புற்று வாழ்ந்தது என்பது எதிர்கால சந்ததியினருக்கு தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான்.  தற்போதைய நாகரீகம், பசுமைப் புரட்சியை அழித்து பச்சை வண்ணம் பூசி உருவாக்கப்பட்டது. அதில் எங்கிருந்து இயற்கை விவசாயம் பற்றியும், இயற்கை உணவின் மகத்துவம் பற்றியும் நாம் பேசுவது? என இன்றைய நிலை குறித்து வெடிக்கும்  44 வயது சாதனா, சென்னையை சேர்ந்த சிட்டுக்குருவி ஆர்வலர். மழைக் காலங்களில் ஊரெங்கும் தேங்கி நிற்கும் அழுக்கு நீரில் கூட்டம் கூட்டமாய் குளித்து கும்மாளமிடும் சிட்டுக் குருவிகளை நீங்கள் பார்த்திருக்க முடியும். தலையை ஆட்டி இறகுகளை விரித்து வெயில் காய்வதை சிறுவயதில் பார்த்திருப்பீர்கள். மரக்கிளைகளில் கீச் கீச் சத்தத்தோடு தெருவெங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த அந்த கைக்கு அடக்கமான உயிரினம் இப்போதெல்லாம் எங்கே போனதென்றே தெரியவில்லையே ஏன்?  கடந்த 30 ஆண்டுகளில் தான் இந்த பறவையினத்தின் ஒட்டுமொத்த எண்ணிக்கை வெகுவாக குறைந்திர...

ஒதுங்கியவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிவரும் மாமனிதர்

படம்
பயணத்தின் அவசரத்தில் ஒவ்வொருநாளும் சாலையோரத்தில் நாம் சந்திக்கும் அழுக்கு மனிதர்களுக்கும் மனம்  என்கிற ஒன்று இருக்கிறது என்பதை பெரும்பாலும் நாம் உணர்வதேயில்லை. அவர்கள் நம் பார்வையில் வெறும் பிச்சைக்காரர்களாகவும், தீண்டத்தகாதவர் களாகவும் தான் தோன்றுகிறார்கள். ஆனால், வெங்கடேஷ் போன்றவர்களுக்கு அப்படி அல்ல. முகவரி தெரியாத மனிதர்களுக்கு முகவரி தந்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைப்பதை குறிக்கோளாய் கொண்டு செயல்படுகிறார்.  மன நலம் பாதிக்கப் பட்டவர்களையும், ஆதரவற்றவர்களையும் காவல்துறை உதவியோடு பத்திரமாக அன்பு இல்லங்களிலும், ஆதரவு இல்லங்களிலும் கொண்டு சேர்த்து அவர்களின் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தத்தை ஏற்ப்படுத்தி வருகிறார். தொடர்ந்து படிக்க http://sathiyamweekly.com/?p=258