இடுகைகள்

மது - பழங்குடிகளின் எடுத்துக்காட்டு

படம்
மக்களின் வரிப்பணத்தில் பல கோடி ரூபாயை கடனாக பெற்றவர்கள் எல்லாம், அதனை கட்ட முடியாமல் வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தேசத்தில் தான், பசிக்காக ஒரு மனிதன் அரிசி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு கிராம மக்களால் அடித்து படுகொலை செய்யப்படுகிறார். உணவுக்காக ஒரு மனிதன் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் இணையதளங்களில் வெளியாகி தேசத்தையே உலுக்கி எடுத்ததென்றால் அதனை வெகு சாதாரண ஒன்றாக நாம் கருதிவிட முடியாது. கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கடுகுமன்னா வனப்பகுதியில் நடைபெற்ற, இந்த சம்பவம், தொடர்பான தகவல்கள் உலகின் கண்களுக்கு தெரிய வர மேலும் இரண்டு தினங்கள் ஆனது என்றால் அங்குதான் நம் மனங்களில் வீற்றிருக்கும் ஏகாதிபத்திய சிந்தனையின் ஆணவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சக மனிதனுக்காக துரோகத்தை, சக மனிதன் பட்ட வேதனையை பகிர்ந்துகொள்ளும் நம்முடைய அக்கறையில் விழுந்திருக்கும் ஓட்டையை எந்தவகையில் நாம் சரி செய்வது என்கிற கேள்வி நமக்கு முன்னே எழுந்திருக்கிறது. கேரள மாநிலம் அட்டப்பாடியை அடுத்த முக்காலி கிராமத்தைச் சேர்ந்த மல்ல...

ஆட்டோ சங்கர்

தமிழகத்தை உலுக்கிய எத்தனையோ கொலை, கொள்ளை, கடத்தல் , பாலியல் வன்கொடுமை  சம்பவங்களை கேட்டிருக்கிறோம்... சமீப காலங்களில் அதனை பார்க்கவும் செய்கிறோம்... நாகரீகம் நம்மை வாழ வைக்கும் என்கிற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு கணமும்  கண்டு பிடிப்புகளோடும்,  ஆக்கங்களோடும் புதிய உலகை நோக்கி  பயணித்து கொண்டிருக்கிறது மனிதர்களின் வாழ்க்கை. ஆனால், நம்முடைய  நல்மனதுக்குள் ஆசைகளும் வஞ்சமும் நுழைந்து... போட்டியும் பொறாமையும் வளர்ந்து சமூகத்தில் நம்முடைய நிலையை மோசமான ஒரு பதிவாகவே   விட்டு செல்கிறது. அதற்கெல்லாம் காரணமாக அமைந்து விடுகிறது பேராசை.  இந்த சம்பவங்களின் பின்னணியில் ஒரு எடுத்து காடடாக 20ம் நூற்றாண்டில் ஒரு நபரை குறிப்பிட்டு சொல்ல முடியும் என்றால் ... சொகுசு வாழ்க்கைக்கும் சுகபோகத்துக்கும் ஆசைப்பட்டு கொலை கொள்ளை என களத்தில் இறங்கி அடித்து, சிறை கம்பிகளுக்கு  முன்னே தூக்கிலிட்டு கொல்லப்படட  ஆட்டோ சங்கரை தவிர வேறு யாரும் அத்தனை  பொருத்தமாய் இருக்க மாடடார்கள்....   தமிழகத்தின் தலைநகரத்தில் தொடங்கி தேசத்தை உலுக்கிய ஆட்டோ சங்கரின் வாழ்க்க...

ஹாசினி ஒரு உதாரணம்

படம்
குழந்தைகள் நம்முடைய செல்வம்.... குழந்தைகள் நம்முடைய எதிர்காலம்... குழந்தைகள் நம்முடைய அடையாளம்... குழந்தைகள் நம்முடைய அங்கீகாரம்... குழந்தைகள் நம்முடைய திருப்தி... குழந்தைகள் நம்முடைய பெருமை... குழந்தைகள் நம்முடைய பேரன்பு... குழந்தைகள் நம்முடைய பேரருள்... குழந்தைகள் நம்முடைய திசை... குழந்தைகள் நம்முடைய வழி... குழந்தைகளே நம்முடைய வாழ்க்கை... குழந்தைகளை நேசிப்போம் நண்பர்களே... பாலியல் சிந்தனைகளை குழந்தைகள் மீது திணிக்க முயலுவது மூடத்தனம். குழந்தைகளோடு நேரத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அப்பழுக்கற்ற.., கள்ளம் கபடமற்ற குழந்தை செல்வங்களை நல்ல எண்ணங்கள் நிறைந்த மனதோடு பாருங்கள்... அவர்களிடம் நல்லவிதமாக பேசுங்கள்.... தீய சிந்தனைகளோடு குழந்தைகளிடம் பழகுகிறவர்களுக்கு ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு கிடைத்த தண்டனைதான் பொருத்தமானது. அது இனி நடக்க வேண்டாமே குழந்தைகளை நேசிப்போம்....

பொங்கல் பண்டிகை அல்ல

படம்
பொங்கல் என்பது பண்டிகை அல்ல நண்பர்களே. அது நம்முடைய பாரம்பரியத்தை வெளிப்படுத்த மிச்சமிருக்கும் ஒரே திருவிழா. உழவின் தலைசிறந்த மக்களாகிய நாம் பொங்கல் விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்கிறோம். அதனை கொண்டாட வேண்டியது நம் கடமை. இந்து இஸ்லாம் கிருத்துவம் பெளத்தம் சீக்கியம் என மதம் கடந்து உலகின் மூத்த மொழியான தமிழின் தொன்மையை, உழவர்களின் மரபை உலகுக்கு வெளிக்காட்டும் ஒரே விழா பொங்கல் மட்டும் தான். இதனை உழவர்களின் வாரிசான நாம் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது? எல்லா ஆண்டுகளும் ஒரே மாதிரி அமைவதில்லை. ஓராண்டில் விவசாயம் தழைக்கலாம். ஓராண்டில் மழையால் அல்லது வெயிலால் பாதிப்படையலாம். ஆனால் விவசாயம் யார் கைகளில் இருக்கிறது? ... நம்முடைய கைகளில் தான் இருக்கிறது. அதை முன்னெடுக்கும் வேலையை செய்வது நம்முடைய கடமை.  உழவு குறித்து பேசாத தமிழ் இலக்கியங்கள் இல்லை. உழவு குறித்து பாடாத புலவர்களும் இல்லை. நம் பிள்ளைகளுக்கும் எதிர்கால சந்ததிக்கும் உழவின் அவசியத்தை உணர்த்த நாம் பொங்கல் விழா எடுக்க வேண்டும் நண்பர்களே. இயற்கையின் உன்னதத்தை அதன் மகத்துவத்தை ஒரு விழா மூலம் நம்முடைய பிள்ளைகளுக்கு கற்றுத்தர ப...

கிழக்கின் மகள்

படம்
  காலம் சிலரைத்தான் நமக்கு அடையாளம் காட்டுகிறது. காலம் சிலரைத்தான் வரலாற்றில் பதித்துச் செல்கிறது. அந்த வகையில், பயங்கரவாதத்தின் கோர கரங்களால் சிதைக்கப்பட்ட பாகிஸ்தானில்,  மரணத்தறுவாயிலும் மக்களுக்கு ஜனநாயகத்தை போதித்த  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், பெனாசிர் பூட்டோவை நினைவு கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல... அவசியமும் கூட.... பெனாசிர், பாகிஸ்தான் மக்கள் கட்சியின்  தலைவர் மட்டுமல்ல... சர்வதேச அளவில் ஒரு இசுலாமிய தேசத்தை ஆட்சி செய்த முதல் பெண் தலைவரும் ஆனவர் .... பழமைவாதம் பேசிய  தேசத்தில் ஜனநாயக பாடம் எடுத்தவர்களில் ஒருவர்.....  ஜனநாயகத்தை மலரச்செய்யும் முயற்சியில் தன் உயிரை துச்சமென கருதியவர் ... சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ராவல்பிண்டியில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்றும் மனிதத்தை நம்பும் யாராலும் அத்தனை எளிதில் மறக்க கூடியதல்ல... தன்னுடைய வாழ்க்கையின் அத்தனை பக்கங்களிலும் துரோகத்தையும், எதிரிகளையும் பார்த்து பார்த்து... பழுக்க காய்ச்சி வடிக்கப்பட்ட வாளாய் மிளிர்ந்தவர் பெனாசிர். மலாலாவை தெரிந்...

எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லி

படம்
உலகில் யாரும் நோயுடன் பிறக்க நினைப்பதில்லை. ஆனால், உயிரியல் கூறுகளின் அடிப்படையில் நோய் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஒரு செல் உயிரி முதல் ஒப்பற்ற மனித இனம் வரை நோய்க்கான காரணிகள் அளவிட முடியாத விகிதத்தில் பரவியிருக்கின்றன. யார் நோயாளி,💉 என்ன விதமான நோய் பரவியிருக்கிறது, எவ்வாறு குணப்படுத்த முடியும்💊 என்பதே நவீனத்துவம் பெற்ற பரிணாமம். அந்த வகையில் எலும்புருக்கி என்று ஏதோ கிராமத்து வைத்தியர்களால் கடந்த காலங்களில் சொல்லப்பட்ட #எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லி மனித இனத்தை அழிக்கும் அத்தனை வேலைகளையும் அழகாக செய்து கொண்டிருக்கிறது. கடந்த 2016 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி📃 உலகில் சுமார் 4 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச மருத்துவ கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2030 க்குள் அனைவருக்கும் அடிப்படை மருத்துவ சேவை💯💊 கிடைப்பதை உறுதி செய்ய அந்த அமைப்பு திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறது. நாட்டுக்கு நாடு என இருந்த எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் வீதிக்கு வீதி என சுருங்கியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. மருத்துவத்தின்💊 எந்த கூறுகளாலும் கு...

கருகும் பிஞ்சுகள்

படம்
பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வதும், தற்கொலை செய்து கொள்வதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பரவலாக பேசப்படுவதும் வருத்தத்திற்குரியதாகவே உள்ள நிலையில், தற்கொலைக்கு தள்ளப்படும் காரணம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் இருக்கிறது. கோவையில் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை. வேலூரில் அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை. தஞ்சையில் +2 மாணவர்தூக்கிட்டு தற்கொலை. மதுரையில் தனியார் பள்ளி மேல்தளத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை முயற்சி  என வரிசையாக தற்கொலைகள் நிகழ்வதும் தற்கொலைக்கு முயல்வதும் நடந்து  கொண்டேயிருக்கின்றன. பிள்ளைகள் நன்கு படித்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என விரும்பும் பெற்றோர்களுக்கு இது போன்ற தற்கொலைகள் பேரிடி அல்லாமல் வேறென்ன? தனியார் பள்ளிகள் அதிகரிப்பால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும், குறைந்த ஊதியத்தில் அவசர கல்வியை திணிக்கும் ஆசிரியர்களின் படுபாதக செயல்பாடுகள் தான் தற்கொலைகளுக்கு காரணம் என கூறி ஒதுக்கிவிட முடியவில்லை. அரசு பள்ளிகளிலும் மாணவர்க...

சீரழிந்த சுகாதாரம்

படம்
கடந்த 2001ம் ஆண்டு முதன் முதலாக பெண்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக தமிழகத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைப்பதற்கான திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பாதுகாப்பான குளியலறைகள், கழிவறைகள் ஒவ்வொரு கிராமத்தில் கட்டப்பட்டு, பெண்களின் சுகாதாரமும், கிராமத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்பது அரசின் அறிவிப்பு அருமையான இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தால் உண்மையில் பாதுகாப்பும், சுகாதாரமும் உறுதி செய்யப்பட்டிருக்கும் தான். ஆனால் அது நடக்கவில்லை என்பது மிகுந்த வேதனையானது. பெரும்பாலான கிராமங்களில் இத்திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட கழிவறைகள் செயல்பாட்டில் இல்லை. செயலபாட்டில் இருக்கும் கழிவறைகளை கணக்கில் எடுத்தால் கூட 100 க்கு வெறும் 20 சதவீதம் கழிவறைகளே பயன்பாட்டில் இருப்பதாக அறிந்து கொள்ள முடியும். இதில் கழிவறைகள் கட்டாமல் கட்டியதாக கணக்கு காட்டியதும், கட்டி பாழடைந்து சீரமைக்கப்படாத கழிவறைகளும் அடங்கும். இதற்கு நம்மை தவிர வேறு யாரும் பொறுப்பாக முடியாது. ஊராட்சி மன்ற தலைவர் முதல் ஊரக வளர்ச்சி துறை வரை இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பட...