பொங்கல் பண்டிகை அல்ல

பொங்கல் என்பது பண்டிகை அல்ல நண்பர்களே. அது நம்முடைய பாரம்பரியத்தை வெளிப்படுத்த மிச்சமிருக்கும் ஒரே திருவிழா.


உழவின் தலைசிறந்த மக்களாகிய நாம் பொங்கல் விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்கிறோம். அதனை கொண்டாட வேண்டியது நம் கடமை. இந்து இஸ்லாம் கிருத்துவம் பெளத்தம் சீக்கியம் என மதம் கடந்து உலகின் மூத்த மொழியான தமிழின் தொன்மையை, உழவர்களின் மரபை உலகுக்கு வெளிக்காட்டும் ஒரே விழா பொங்கல் மட்டும் தான். இதனை உழவர்களின் வாரிசான நாம் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது? எல்லா ஆண்டுகளும் ஒரே மாதிரி அமைவதில்லை. ஓராண்டில் விவசாயம் தழைக்கலாம். ஓராண்டில் மழையால் அல்லது வெயிலால் பாதிப்படையலாம். ஆனால் விவசாயம் யார் கைகளில் இருக்கிறது? ... நம்முடைய கைகளில் தான் இருக்கிறது. அதை முன்னெடுக்கும் வேலையை செய்வது நம்முடைய கடமை.  உழவு குறித்து பேசாத தமிழ் இலக்கியங்கள் இல்லை. உழவு குறித்து பாடாத புலவர்களும் இல்லை. நம் பிள்ளைகளுக்கும் எதிர்கால சந்ததிக்கும் உழவின் அவசியத்தை உணர்த்த நாம் பொங்கல் விழா எடுக்க வேண்டும் நண்பர்களே. இயற்கையின் உன்னதத்தை அதன் மகத்துவத்தை ஒரு விழா மூலம் நம்முடைய பிள்ளைகளுக்கு கற்றுத்தர பொங்கலை விட்டால் தமிழர்களுக்கு வேறு வழியில்லை.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்