சீரழிந்த சுகாதாரம்
கடந்த 2001ம் ஆண்டு முதன் முதலாக பெண்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக தமிழகத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைப்பதற்கான திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பாதுகாப்பான குளியலறைகள், கழிவறைகள் ஒவ்வொரு கிராமத்தில் கட்டப்பட்டு, பெண்களின் சுகாதாரமும், கிராமத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்பது அரசின் அறிவிப்பு
அருமையான இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தால் உண்மையில் பாதுகாப்பும், சுகாதாரமும் உறுதி செய்யப்பட்டிருக்கும் தான். ஆனால் அது நடக்கவில்லை என்பது மிகுந்த வேதனையானது.
பெரும்பாலான கிராமங்களில் இத்திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட கழிவறைகள் செயல்பாட்டில் இல்லை. செயலபாட்டில் இருக்கும் கழிவறைகளை கணக்கில் எடுத்தால் கூட 100 க்கு வெறும் 20 சதவீதம் கழிவறைகளே பயன்பாட்டில் இருப்பதாக அறிந்து கொள்ள முடியும். இதில் கழிவறைகள் கட்டாமல் கட்டியதாக கணக்கு காட்டியதும், கட்டி பாழடைந்து சீரமைக்கப்படாத கழிவறைகளும் அடங்கும்.
இதற்கு நம்மை தவிர வேறு யாரும் பொறுப்பாக முடியாது. ஊராட்சி மன்ற தலைவர் முதல் ஊரக வளர்ச்சி துறை வரை இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான படிநிலைகளாக அரசால் அறிவிக்கப்பட்டனர்.
நம்முடைய அதிகாரத்தை பயன்படுத்தி எவ்வளவு (பணம்) பயன்பெறலாம் என்று மட்டுமே யோசித்தோமே ஒழிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையில் துளியளவும் (அக்கறையின்மை) முன்னேற்றத்தை கொண்டுவராதது நம்முடைய தவறு. அந்தந்த பகுதி பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஓரளவுக்கு செயல்பட்டிருந்தாலே வேலை நடந்திருக்கும்.
உலக கழிவறை தினமான இன்று வீட்டுக்கொரு கழிவறை வேண்டும் என்பதை ஆளாளுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் கழிவறை கட்டுவதாக வீடியோ எடுத்து வெளியிடுகிறார். அதிகாரிகள் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளிக்கிறார்கள். அமைச்சர்கள் இந்த ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை இத்தனை கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக கணக்கு கூறுகிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் மகளிர் சுகாதாரம் காக்க பட்டதாகவும் அதனால் ஆண்கள் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற நகைச்சுவை தகவல்கள் வேறு .
ஆங்காங்கே கையசைத்தபடி நின்று கொண்டிருக்கும் சிலைகள் போலவே நம்முடைய திட்டங்களும் தேங்கி கிடப்பது யாருக்கும் தெரியாமல் இருப்பது மிகுந்த வேதனையை தருவதாகவே உள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக