எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லி



உலகில் யாரும் நோயுடன் பிறக்க நினைப்பதில்லை. ஆனால், உயிரியல் கூறுகளின் அடிப்படையில் நோய் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஒரு செல் உயிரி முதல் ஒப்பற்ற மனித இனம் வரை நோய்க்கான காரணிகள் அளவிட முடியாத விகிதத்தில் பரவியிருக்கின்றன.

யார் நோயாளி,💉 என்ன விதமான நோய் பரவியிருக்கிறது, எவ்வாறு குணப்படுத்த முடியும்💊 என்பதே நவீனத்துவம் பெற்ற பரிணாமம். அந்த வகையில் எலும்புருக்கி என்று ஏதோ கிராமத்து வைத்தியர்களால் கடந்த காலங்களில் சொல்லப்பட்ட #எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லி மனித இனத்தை அழிக்கும் அத்தனை வேலைகளையும் அழகாக செய்து கொண்டிருக்கிறது.

கடந்த 2016 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி📃 உலகில் சுமார் 4 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச மருத்துவ கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2030 க்குள் அனைவருக்கும் அடிப்படை மருத்துவ சேவை💯💊 கிடைப்பதை உறுதி செய்ய அந்த அமைப்பு திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறது.

நாட்டுக்கு நாடு என இருந்த எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் வீதிக்கு வீதி என சுருங்கியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

மருத்துவத்தின்💊 எந்த கூறுகளாலும் குணப்படுத்த முடியாத எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவம் குணப்படுத்துகிறதோ இல்லையோ...  அன்பு காட்டாமல் அவர்களை விலக்கிவைத்து நாம் மனிதமற்றவர்களாக மாறிவிட வேண்டாம்.

 😎❤அன்பு செய்வோம் அவர்களிடம்.👍 #worldHIVday

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்