கிழக்கின் மகள்

காலம் சிலரைத்தான் நமக்கு அடையாளம் காட்டுகிறது. காலம் சிலரைத்தான் வரலாற்றில் பதித்துச் செல்கிறது. அந்த வகையில், பயங்கரவாதத்தின் கோர கரங்களால் சிதைக்கப்பட்ட பாகிஸ்தானில், மரணத்தறுவாயிலும் மக்களுக்கு ஜனநாயகத்தை போதித்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், பெனாசிர் பூட்டோவை நினைவு கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல... அவசியமும் கூட.... பெனாசிர், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் மட்டுமல்ல... சர்வதேச அளவில் ஒரு இசுலாமிய தேசத்தை ஆட்சி செய்த முதல் பெண் தலைவரும் ஆனவர் .... பழமைவாதம் பேசிய தேசத்தில் ஜனநாயக பாடம் எடுத்தவர்களில் ஒருவர்..... ஜனநாயகத்தை மலரச்செய்யும் முயற்சியில் தன் உயிரை துச்சமென கருதியவர் ... சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ராவல்பிண்டியில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்றும் மனிதத்தை நம்பும் யாராலும் அத்தனை எளிதில் மறக்க கூடியதல்ல... தன்னுடைய வாழ்க்கையின் அத்தனை பக்கங்களிலும் துரோகத்தையும், எதிரிகளையும் பார்த்து பார்த்து... பழுக்க காய்ச்சி வடிக்கப்பட்ட வாளாய் மிளிர்ந்தவர் பெனாசிர். மலாலாவை தெரிந்...