தேசத்தின் அடையாளம்
ஒரு தேசத்தின் அடையாளம் என்றால் அது அந்த தேசத்தின் உயர்வுக்காக பாடுபட்டவர்களைத்தான் நெஞ்சம் பெரும்பாலும் நம் நினைவுக்கு கொண்டு வரும். அப்படி தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர்தான் விக்ரம் சாராபாய்.
1919 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் ஒரு பெரும் செல்வந்தரின் குடும்பத்தில் பிறந்த விக்ரம் சாராபாய் தன்னுடைய பள்ளி கல்வியை தாயார் நடத்திய பள்ளியிலும் இளவயது கல்வியை குஜராத் கல்லூரியிலும் கற்று முடித்தார்.
பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் கௌரவத்துக்காக ஆங்கில பிரதேசங்களை தேடி கல்வி கற்றுகொண்டிருந்த சமயத்தில் இயற்கை அறிவியலின் மீதிருந்த ஆர்வத்தால் 1939 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தன்னை மாணவனாக பதிவு செய்து கொண்டார்.
பொருளாதாரமும் ஆங்கில அறிவும் சாராபாஇக்கு சாதகமாக இருந்தாலும் இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய இன்னல்கள் விக்ரமை இந்தியாவுக்கு கொண்டுவந்து சேர்த்தது.
அறிவியலின் கல்வி முழுமையடையாமல் திரும்புவது இவருக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் எதிர்காலத்தில் இந்தியா இவருடைய தலைமையில்தான் அணுசக்தி துறையையும் விண்வெளி திட்டத்தையும் முன்னெடுக்கப் போகிறது என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது.
உலகபுகழ் பெற்ற இயற்பியல் அறிஞர் சர் சி வி ராமனின் மாணவனாக இந்திய விஞ்ஞான கழக்கத்தில் பயிற்சி மேற்கொண்டார். அங்குதான் உலகரங்கில் இந்தியாவை தலைநிமிர செய்திருந்த இன்னொரு மகா அறிஞரான டாக்டர் ஹோமி ஜெ பாபாவையும் விக்ரம் சந்தித்தார்.
இவர்களின் அறிமுகத்துக்கு பிறகுதான் அறிவியலின் நுணுக்கங்களை தாமும் தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனையே விக்ரமுக்கு வர ஆரம்பித்திருந்தது. விஞ்ஞான கழகத்தில் அகிலகதிர் மேஸான் போன்ற பல்வேறுபட்ட பாடங்களும் ஆராய்ச்சிகளுக்கான நுணுக்கங்களும் பயிற்றுவிக்கபட்டன.
இரண்டாம் உலகப்போர் முடிந்த தருவாயில் மீண்டும் இங்கிலாந்து சென்று தனது ஆய்வை தொடர்ந்தார். அங்குதான் வேனில் வரம்பு மட்டங்களில் அகிலக்கதிர் எனும் கோட்பாடுக்கு டாகடர் பட்டம் பெற்று சிறப்பிக்கபட்டார். இந்தியாவுக்கு திரும்பியவர் நெசவுதொழிலின் வளர்ச்சியிலும் இயற்பியலின் வளர்ச்சியிலும் அதிக ஈடுபாடு ஆராய்ச்சி கூடங்களை தோற்றுவித்தார்.
1942 ஆம் ஆண்டு மிருனாளினி என்னும் அழகிய நடன பெண்மணியை திருமணம் புரிந்துகொண்டார். இவர்களுக்கு கார்த்திகேயா மல்லிகா என்று இரண்டு குழந்தைகள் பிறந்தன. அறிவியலின் சிந்தனை இவரை ஆதிக்கம் செளுத்திகொண்டிருந்த நேரத்திலும் தன் மனைவியோடு இணைந்து சமூக சேவைகளிலும் கலைகளிலும் ஈடுபட்டார்.
1962 ல் அன்றைய பிரதமர் இந்திய விண்வெளித் திட்டத்துக்கான ஆராய்ச்சி பேரவையை தொடங்கிய பொது அதன் அதிபராக விக்ரமைத்தான் நியமித்தார். ஒரு புறம் அணுசக்தி துறையில் ஈடுபாடு காட்டினாலும் விண்வெளி திட்டத்தில் இந்தியாவுக்கான கனவுகளை வழிநெடுகிலும் எழுதிக்கொண்டே போனவர் சாராபாய்.
1966 ஆம் ஆண்டு ஆல்ப்ஸ் மலை சிகரத்தில் விமானம் மோதியதில் அதில் பயம் செய்த அணுசக்தி துரையின் தலைவர் ஹோமி பாபா மரணம் அடைந்த செய்தி இந்தியாவையே உலுக்கி எடுத்தது. அந்த சமயத்தில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி எந்தவித முன் யோசனையும் இல்லாமல் விக்ரம் சாராபாயை இந்திய அணுசக்தி துரையின் தலைவராக்கினார்.
இந்திய தேசத்தின் ஒவ்வொரு தனிமனித சிந்தனையையும் ஒருங்கே பெற்ற சாராபாய் தன்னுடைய தனிப்பெரும் அறிவியல் முதுமையால் 1968 ஆம் ஆண்டு அகில உலக அண்டவெளி ஆய்வுக்கான கூட்டமைப்பின் தலைவருக்கான பதவி இவரை தேடி வந்தது. 1970 உலக அணுசக்தி கூட்டமைப்பின் ஐக்கிய தலைவராகவும் இவரை உலக அணுசக்தி கூட்டமைப்பு விரும்பி ஏற்றுகொண்டது.
1975 ஆம் ஆண்டு இந்தியா தனது முதல் துணைக்கோளான ஆர்யபட்டாவை விண்ணில் செலுத்தி இதோ 2012 ஆம் ஆண்டு தன்னுடைய 100 வது செயற்கை கோளையும் விண்ணில் ஏவி சாதனை படைத்துவிட்டது. நிலாவில் நீர் இருக்கிறதா என ஆராய்ந்து பார்க்கிறோம். அடுத்து செவ்வாய் கிரகம்...
ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து துளி சந்தோஷப்பட அந்த மனிதர்தான் இந்த உலகில் இல்லை. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் நாள் தும்பா ஏவுதளத்தில் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு உறங்க சென்றவர் கடைசி வரை எழுந்திருக்கவேயில்லை. அந்த மகா மனிதனின் நினைவுகளை இன்றாவது நெஞ்சில் சுமந்துகொள்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக