இதற்கா மனிதனுக்கு ஆறாம் அறிவு
இருபது வருசமா சோறு போட்டு, பாசங்காட்டி.. பாதுகாத்து, நல்லது கெட்டது செஞ்சி, ஆசப்பட்டத வாங்கி குடுத்து புள்ளைய பெத்தவன் பத்தரமா வளப்பான். எங்கிருந்தோ வாரவன் காதல் பண்ணி தூக்கிட்டு போய்டுவாரா? ஒன் வீட்டுப் பொண்ணு காதலிச்சா ஏத்துக்க முடியுமா? உன்னால முடியுமா? எனக்கு அழுகைதான் உண்மையில் வந்தது. ஆனால், சிரித்தேன் அப்போது... அவர்கள் தொடர்ந்தார்கள். எவ்ளோ திமிரு இருக்கனும். பெத்தவங்கள நெனச்சி பாருங்க. எவ்ளோ கஷ்ட பட்டுருப்பாங்க. அதான், ரோட்ல ஓட ஓட வுட்டு போட்டானுங்க. எங்கள பொருத்த வரைக்கும் கொலை செஞ்சது சரிதான். கட்டுப்பாடு கெளரவம்லாம் என்னாறது? பெத்தவங்கள கஷ்ட படுத்திட்டு திருமணம் செய்யக்கூடாதுங்றதுல ஞாயம் இருக்கு, அதுக்காக கொலை செய்யறது சரியா? ன்னு கேட்டேன். என்னங்க புரியாம பேசிட்ருக்கீங்க. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்டுப்பாடு இருக்கு. சரி நீங்க சொல்றபடியே வச்சுப்போம். எல்லோரும் பொது கம்யூனிட்டிக்கு வாங்க. நீங்க சொல்ற மாதிரி காதல ஏத்துப்போம். அரசாங்க ஒதவி வாங்க ஒங்களுக்கு சாதி வேணும். கல்யாணம்னா கசக்குதா? இப்பவும் சொல்றோம், நாங்க காதல எதுக்குல. அவங்கவுங்க அவங்க சாதிக்குள்ளய...