உலகம் ஒரு நாடக மேடை

2013 ல் மட்டும் நினைப்பது நடந்துவிடவா போகிறது. பூக்களுக்கு ஆசைப்பட்டு வேர்களுக்கு விஷம் ஊற்றும் முட்டாள்களின் தேசம் இது. கல்வி கற்ற ஒழுக்கமுள்ள நாகரிக முட்டாள்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் உலகின் முடுக்குகள் எங்கும். உயிர்களின் மதிப்பறியாது வாழும் நவீன கற்கால மனிதர்கள். காதலுக்கும் காமத்துக்கும் அர்த்தம் தெரியாத அரைவேக்காடுகள்... சோற்றுக்கு பதில் எதை தின்றார்களோ சாதியும் மதமும் தான் வேண்டுமென்கிறார்கள். பெரியார்களும் அம்பேத்கார்களும் பிறந்து பிறந்து சலிப்படைந்து இனி பிறக்காத ஒரு அவதாரம்தான் எடுப்பார்கள் போல. யோனியை கிழித்துக்கொண்டு வரும்போது இரத்தத்தோடு சேர்ந்தே வந்ததா சாதி? அசிங்கமான வார்த்தைகளை தேடித் தேடிப் பார்க்கிறேன் என்னை நானே சபித்துகொள்ள. அசதியில் உறங்கிப்போன நினைவுகளை இன்னமும் கேட்டுகொண்டிருகிறேன். கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் தரும் மரியாதையை எந்த பட்டு சட்டையும் எங்களுக்கு தருவதேயில்லையே ஏன்? அரசுக்கும் அரசுக்கும் இடையே ஆண்டாண்டுகால யுத்தம். நீர் கேட்டு நீர் கேட்டு மாய்ந்து நிலமெல்லாம் விவசாயி ரத்தம். எச்...