உலக நீர் நாள்







ஐக்கிய நாடுகள் அவையின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலக நீர் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. உலகின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத நீர்  மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றது.  


நீர் அடிப்படை மனித தேவை, எனினும் நீர் பற்றாக்குறையால்     சமீப காலமாக நீர் வணிக மயமாக்கப்பட்டு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. 3% மட்டுமே குடிநீராக இருக்கின்றது.  அதிலும் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிது அதிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனிகளில் மிஞ்சியுள்ள உறையாத சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. 

உலகின் நீர் ஆதாரம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது. உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க, நீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.  உலக மக்கள் தொகையில் 40 விழுக்காடு நாடுகளிலும்  பிரதேசங்களிலும் நீர் பற்றாக் குறை கடுமையாகியுள்ளது. 

ஐ.நா வெளியிட்ட புள்ளிவிபரத்தின் படி, உலகில் 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறைப் பிரதேசத்தில் வாழ்கின்றனர். 260 கோடி மக்களுக்கு அடிப்படை நலவாழ்வு வசதி கிடையாது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.

1992 ஆம் ஆண்டில் பிரேசில் நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐக்கிய நாட்டு பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21 ஆம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993 ஜனவரி மாதம் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது.  
                                                                                                                    
அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22 ஆம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறை வேற்றப்பட்டதன் நோக்கமாகும்.

அண்மைக் காலத்தில், அதிகரித்து வரும் நீர்ச் செலவுகள் காரணமாக நீரை மீள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. மனிதர்கள் நீர் வளத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இல்லை என்றால் மனித குலம் ஒரு நாள் கூட பூமியில் வாழ முடியாது.



வேகசுகுமாரன்  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்