புற்றுநோய் என்னும் அரக்கன்

உலகில் உள்ள மனிதர்கள் நோய் நொடியின்றி மன நிறைவோடும் அமைதியான முறையிலும் வாழவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

ஆனால், இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாற்போல பல திடுக்கிடும் நிகழ்வுகளும் செய்திகளும் ஒவ்வொருநாளும் நம்மை வந்தடைந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்படி,  அனுதினமும் மனிதவர்க்கம் சந்திக்கும் கொடிய நோய்களில் ஒன்று கேன்சர் என்றழைக்கப்படும் புற்றுநோய். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.

வருடத்துக்கு மில்லியனுக்கு அதிகமானோர் புற்றுநோயின் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்த அதிர்ச்சி தகவலை சகாதார நிறுவனமே உறுதிபடுத்தியிருக்கிறது.

2020 ஆம் ஆண்டுகளுக்குள்ளாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் உயிரிழப்புகள வருடத்திற்கு 2 மில்லியன் அதிகரிக்கலாம் என்றும் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவிக்கிறார்கள். புற்று நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் 30% புகையிலை பயன்பாட்டினாலேயே ஏற்ப்படுகின்றது என்றும் குறிப்பாக இளைய சமுதாயத்திடம் அதிக எண்ணிக்கையில் பரவியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

4000 க்கும் அதிகமான பக்க விளைவுகளை ஏற்ப்படுத்தும் வேதியியல் பொருட்கள் நிறைந்த புகையிலை பொருட்களைத்தான் நம் இன்றைய சமுதாயம் பெரிதும் விரும்பி சுவைக்கிறது அதன் ஆபத்து அறியாது.

ஆனால், இவற்றால் இவர்களுக்கு கிடைக்கும் பரிசு வாய் புற்று நோய், தோல் புற்று நோய், நுரையீரல் புற்று நோய் போன்ற கொடூரமான மரணத் தூதுவர்களேயாகும்.

இந்த புற்று நோய் கட்டியின் செல்கள் இரத்த ஓட்டத்தை சிதைத்து உடல் முழுவத்ம் பரவி விடுவதால் தான் இந்த நோய் மரபு ரீதியாக பரவும் தன்மையை இயல்பாக பெற்றதோ என்று தோன்றுகிறது.

இப்படி இளைய சமூகமும் ஆடவர் வர்க்கமும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் அதே வேளையில் கருப்பை கட்டி புற்று நோயாலும் மார்பக புற்று நோயாலும் பெண்ணினம் அல்லல் பட்டுகொண்டிருக்கிறது இந்த அரக்கனிடம் மாட்டிகொண்டு.

நமது தாய் தேசமான இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 40000 க்கும் அதிகமான பிஞ்சுகள் புற்று நோயால் தாக்கப்படுகின்றனர் என்னும் அதிர்ச்சிகர தகவலும் நமது இந்திய தேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் நோய் முற்றி இறக்கின்றனர் என்னும் பட்டியல்களையும் கண்டு வருத்தப்படுவதை விட உலகில் இந்தியா போன்ற வளரும் நாடுகளால் இந்த நோயை தடுக்கவும், இதிலிருந்து மக்களை குணப்படுத்தவும் முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் நம்மை சூழ்கிறது.

2012 ஆம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 கோடியை தாண்டிவிட்டது.

இன்றைய நவநாகரிக சமூகம் என்பது அவசரத்தின் அடையாளமாகவும் அழுக்குகளை சேமிக்கும் கூடாரமாகவும் இருப்பதால்தான் இதுபோன்ற கொடிய நோய்களிடமிருந்து நம்மால் மீண்டுவருவது முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல் நம்முடைய சுய விழிப்புணர்வோடு புகை பழக்கம், மது, கதிரியக்கம், அதிகளவில் மாத்திரைகளை உட்கொள்ளுவது போன்றவற்றிலிருந்து விலகியிருந்தால் ஒழிய இந்த அரக்கனிடமிருந்து தப்பிக்க வேறு வழியில்லை என்றே சொல்லலாம்.







































கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்