உலக நீர் நாள்

ஐக்கிய நாடுகள் அவையின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலக நீர் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது . உலகின் உய ிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத நீர் மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றது. நீர் அடிப்படை மனித தேவை , எனினும் நீர் பற்றாக்குறையால் சமீப காலமாக நீர் வணிக மயமாக்கப்பட்டு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. 3% மட்டுமே குடிநீராக இருக்கின்றது . அதிலும் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறி து அதிகமாக பனிப ் பாறைகளில் மற்றும் துருவப்பனி களில் மிஞ்சியுள்ள உறையாத சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. உலகின் நீர் ஆதார ம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது. உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க , நீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது . உலக மக்கள் தொகையில் 40 விழுக்காடு நாடுகளிலும் பிரதேசங்களிலும் நீர் பற்றாக் குறை கடுமையாகியுள்ளது. ஐ.நா வெளியிட்ட புள்ளிவ...