இடுகைகள்

செப்டம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழங்குடி மக்கள் அகராதி

படம்
ஒரு மொழியை புரிந்துகொள்ள, ஒரு உணர்வை வெளிப்படுத்த, நமக்குள்ள சிக்கல்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நம்முடைய பூர்வீக மக்களின் மொழியை, அழித்துவிடாமல் காக்கும் அதே நேரத்தில், நவீனம் குறித்த புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய அவசியம் நம் எல்லோருக்குமே ஏற்பட்டுள்ளது.  நம்முடைய சமகாலத்தில் தாய் மொழி என பெருமை அடித்துக்கொள்ளும் நம் ஊரில் தான் நமக்கு வெகு அருகில், நம்முடைய் பூர்வீக, ஆதிவாசி, பழங்குடி மக்களும் தங்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு மொழியை காலம் காலமாக, தனித்தன்மையுடன் பேசி வருகிறார்கள். அந்த மொழி குறித்த புரிதல்கள் நமக்கும், நாம் பேசும் தமிழ் அவர்களுக்கும் இன்னும் புரியவேயில்லை. சமூக ஆர்வலர்கள், இயக்கங்கள், அமைப்புகள் என பலரின் போராட்டங்களால் தான் ஆதிவாசி மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து வெளி உலகுக்கு தெரிய வருகிறது. அப்படி எங்கேனும் ஒரு புத்தகத்தில் நாம் படிக்கும் போதுதான் இத்தனை கஷ்டமா என வாய்பிளக்கிறோம். நாம் புறந்தள்ளி வைத்திருக்கிற நமது சகோதரர்களுக்கு மொழியை எளிமை படுத்தும் வகையில், அவர்களின் உரையாடலை பதிவு செய்ய வேண்...

அந்திமல்லி. 3

படம்
அந்திமல்லியுடனான உரையாடல் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஒருபக்கம் அது ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அவள் குறித்த பின்னணியை தெரிந்துகொள்ள தயாராகவே இருந்தேன். ஆகையால் அந்த சம்பவம் குறித்து முகநூல் பதிவிலும் தெரியப்படுத்தியிருந்தேன். சொல்வதென்றால் அந்த ஒரு நாளுக்கு பின்னர் நானே கொஞ்சம் கொஞ்சமாய் மாறி கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை. எப்படியாகிலும் அந்திமல்லி கதையை எழுதவேண்டும் என்கிற ஆசை இருந்ததே ஒழிய, அதனால் வரப்போகும் பின் விளைவுகளை நான் யோசிக்கவேயில்லை. டேய் என்ன பீலா வுடுற....அப்படித்தானே உங்களுக்கு தோன்றுகிறது. ஆனால், கதையோ வேறு. அந்த  ஒரு நாள் நிகழ்வை எழுதிய உடனேயே ஆரம்பித்துவிட்டது எனக்கு சங்கு. அதை பின்னர் சொல்கிறேன். நீங்களும் நானும் மனிதர்களை சந்திப்பதற்கும், அந்திமல்லி சந்திப்பதற்கும் ஆயிரம் வித்தியாசம் இருக்கிறதில்லையா..? கதைக்களம் அமைவது இயற்கையானது. அதை எந்த இடைஞ்சலும் இல்லாமல் எடுத்துக்கொள்வதுதானே முறை. அதைத்தான் செய்ய முயற்சித்தேன். அதற்காகவே அந்திமல்லியை ஆய்வு கட்டுரையாக்கியிருக்கிறேன் ஆய்வகத்தில்....... சொல்லப்போனால், கற்பனைகளை எழுதுவதால் என்...

அந்திமல்லி.2

படம்
சாலையில் மிதமான நெரிசல் இருந்ததால் மெதுவாகவே சென்று கொண்டிருந்தது பேருந்து.  வெப்ப காற்றில் புகையை கக்கியபடி  கோடம்பாக்கம் பாலத்தின் மீது தடதடத்துக் கொண்டிருந்த 26 எண் கொண்ட பச்சைநிற பேருந்தில் அந்திமல்லியுடன்  ரத்தம் கக்கி கொண்டிருந்தது என் நிமிடங்கள். எங்களுக்கு முன்னாலிருந்த சீட்டில் இரண்டு மாமிக்கள் அமர்ந்திருந்தார்கள்... அதில் ஒருவர் என்ன நினைத்தாரோ... என்னை பார்த்து முகம் சுளிக்கும் படியாய் முகத்தை கோனளாக்கி காட்டிவிட்டு வெடுக்கென்று திரும்பி முனுமுனுத்தார் . ”கலிகாலம், இதையெல்லாம் நான் பாக்கனும்னு என் தலையில எழுதியிருக்குன்னு”  அவர் நினைத்திருக்கலாம். தினமும் இந்த வழியாய்தான் வருகிறேன் இதுபோல் ஒருநாளும் நடந்ததில்லையே என தோன்றியது எனக்கு. ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். அந்திமல்லியும் நானும் பேசிக்கொண்டு வந்ததில் நான் பேசியது மட்டும் தான் அந்திமல்லி காதில் விழுந்தது. அப்பறம் என்னன்னனு கேக்கறீங்களா..?  அந்திமல்லி பேசியது அங்கிருந்த அத்தனை பேர் காதுகளிலும் விழுந்தது. அந்த சூழலை கற்பனை செய்ய முடிகிறதா உங்களால்...? தொழில் ரீதியாக பலரிடம் பே...

அந்திமல்லி.1

படம்
வடபழனியில் இருந்து வள்ளுவர் கோட்டம் வருவதற்கே பெரும்பாடு என்பது போல....நீண்ட நேரமாய் நிற்க முடியாமல் கிடைத்த சீட்டில் அமர்ந்து கொண்டேன் நான். அந்த இருக்கை அந்திமல்லியின் இருக்கைக்கு அடுத்த இருக்கை என்பதுதான் கதையின் கதை. அந்த இருக்கையும் பேருந்தின் கடைசி இருக்கை என்பது மையக்கரு.... அந்திமல்லி யார் என்கிறீர்களா...? ஒரு மாலை வேலையில், வியர்த்து ஒழுகும் பயணத்திற்கிடையே எனக்கு அறிமுகமான உடல் விற்கும் தொழிலாளி.  நிமிடத்துக்கு நிமிடம் மனதை விற்றுக்கொண்டிருக்கும் நமக்கு உடல் விற்பது கேவலமானதாகத்தான் தோன்றுகிறது... இங்குதான் எனக்குள் கதை ஆரம்பமானது.  நான் அந்திமல்லியை அப்பொழுதுதான் உற்று கவனித்தேன். பழுப்பு நிறத்தில் ஒரு பட்டுப்புடவை அவ்வபோது காற்றில் அலைந்து கொண்டிருந்தது. காலையில் இருக்கி கட்டிய தலைமயிர் கட்டு தளர்ந்து காற்றில் அவள் கண்களையும் கன்னத்தையும் மறைத்தபடி இருந்தது. இடது கையால் தலைமயிரை ஒதுக்கியபடி யாரிடமோ அலைபேசியில் பேசி முடித்துவிட்டு என் பக்கம் திரும்பி நிதானமாக புன்னகைத்தாள்.  கூடவே என்கையை பிடித்து ஏதோ ஒரு அழுத்தத்தை எனக்குள் திணித்தாள். அவள் கண்கள்...