இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐயா LEP என்கிற லக்சுமணன் இளையபெருமாள்

படம்
  அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராகவும், அந்த கமிட்டி இளையபெருமாள் கமிட்டி என்றும் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் அறிவிக்கப்பட்டாலும் கட்சி விசுவாசம் பாராமல் இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்ததும், அதை அறிக்கையில் வெளியிட செய்ததும், கீழ்வெண்மனியில் அப்பாவி தலித்துகள் எறிக்கப்பட்ட வழக்கை மீண்டும் நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுதர உறுதுணையாக இருந்ததும் நாம் மறந்து கொண்டிருக்கும் ஐயா LEP என்கிற லக்சுமணன் இளையபெருமாள் தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். மேலும் தகவலுக்கு... https://ta.wikipedia.org/s/1dy8
படம்
தனிமனித ஒழுக்கமில்லாமல் எதையும் சாதித்தல் முடியாது

வருது வருது விலகு விலகு

படம்
உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நுகர்வு கலாச்சாரம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கு தேவையான ஏதோ ஒன்றை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல், ஒவ்வோரு ஆண்டும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த இரண்டுக்குமிடையிலான தொடர்பு என்னவாக இருக்கிறது? ஏன் நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது? வெறுமனே கூடி பேசிவிட்டு கலைந்து செல்வதர்க்காகவா? அல்லது வெற்று வார்த்தையை தூக்கிக்கொண்டு அலைவதர்க்காகவா? சரி யார்தான் நுகர்வோர்? இப்படி ஆயிரம் கேள்விகள் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. நுகர்வு கலாச்சாரம் உருவான பிறகு நம்பிக்கையின் அடிப்படையில் நாட்டை கொடுத்ததும், நெல்மணிகளுக்கு விலைபேசியதும், போர்ப்படைகளுக்கு குதிரையும் யானையும் வாங்கியதும் முடிந்து போன வரலாறு. அப்படிப்பட்ட வரலாற்றை திரித்து வார்த்தைகளில் கட்டி சுருங்க சொன்னால் நுகர்வோர் என்பவர் ஒரு பொருளை பயன்படுத்துபவர். வாடிக்கையாளர் என்பவர், உற்பத்தியாளரிடம் பொருளை வாங்கி, அதை பயன்படுத்தாமல் மற்றொருவருக்கு கொடுப்பவர். அவ்வளவுதான் கதை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷ...

பேரிடர் மேலாண்மை

படம்
இயற்கையின் கொடையாய் பெற்ற வளங்களை கடந்து அதன் முக்கியத்துவம் கருதாத மனிதன்,  எதிர்கொள்ளும் மிக முக்கியமான அபாயங்களில் ஒன்று பேரிடர். எந்த இடம், எந்த நேரம் எந்த நாள் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத ஒரு அடையாளத்தோடு ஒவ்வொரு பொழுதிலும் ஏதேனும் பேரழிவு எங்கேனும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தன்னை மறந்து மனிதன் எப்போது இயற்கையை புறக்கணிக்க ஆரம்பித்தானோ அந்த தருணத்திலிருந்தே இயற்கையும் மனிதர்களை புறந்தள்ளி கொண்டிருகின்றன என்பதற்கு உதாரணம்தான்  பேரிடர் என்பது. -------------------- நாம் நாகரிகமடைந்தபோது, ஏதோ ஒரு புள்ளியில், இயற்கையிடமிருந்து விலகி நாம் தனித்து வளர்ந்துவிட்டோம். பழையனவற்றை மறந்துவிட்டோம். தங்களைச் சுற்றியுள்ள காட்டுயிர்கள் பற்றி நம்முடைய குழந்தைகள் கூட அறியாமல் இருக்கிறார்கள். -------------------- மனிதர்களின், பல்வேறு அடிப்படை தேவைக்காக இயற்கை வளங்கள் இன்று அழிக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணத்தால் மரங்கள், காய்கள் பயிர்கள், வயல்வெளிகள், பூக்களென்று நம்முடைய சுற்றுப்புறம், நம்முடைய கண்களை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருக...

சந்தை...

படம்
இந்த உலகம் பல்வேறு உயிரின சூழல்களால் நிறைந்தது. தொன்மையான மொழிகளையும் நாகரிகங்களையும் தன்னகத்தே கொண்டு  காலம் காலமாய் சர்வ கணங்களிலும் பரிணாமத்தின் புள்ளியில் தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கின்றது. அப்படி, பரிணாமத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்களை எல்லாம் கடந்து உயிகளின் வரலாற்றில் ஓர் அடையாளமாய் இருப்பவன் மனிதன். அவன் மாறுவதற்கும், அவனால்  உலகில் மாற்றங்கள் நிகழ்ந்ததற்கும்  ஒரு வியாபார அமைப்பு முறை மிகப்பெரிய காரணமாயிருந்தது. ஆதிமனித காலம் கடந்த நிலையில், மனித நாகரிகத்தின் தொடக்கத்தில் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும் விற்பதற்கும்  ஆரம்பிக்கப்பட்ட ஒரு வியாபார முறை சந்தை என்பது. நெல்லை கொடுத்து பருப்பு வாங்கியதும், மீனை கொடுத்து தயிர் வாங்கியதும், உப்பு கொடுத்து அரிசி வாங்கியதும் சந்தைப் பாரம்பரியத்தின் ஒரு பகுதி. நம்முடைய கிராமத்து  முடுக்குகளில் எங்கும் சுட்ட கிழங்கும், சோளமும், கள்ளும், கருவாட்டின் மனமும் பரிமாறிக் கொள்ளப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. எல்லா உயிரினங்களையும் போல மனிதர்களுக்கும் பசி ...