மனிதநேய பண்பாளன் மணிமாறன்
மனிதர்கள்
எல்லோரும் தங்களுக்காக யோசிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தை நகர்த்தி
விடுகிறார்கள். மற்றவர்களை குற்றம் சுமத்துவதிலேயே எல்லா நிமிடங்களையும்
கடத்தி விடுகிறார்கள், பலர் இப்படித்தான் எப்போதும்
இருந்து கொண்டிருக்கிறோம். யாரோ ஒருசிலரை தவிர.
இதற்கெல்லாம்
விலக்காக திருவண்ணாமலையை சேர்ந்த மணிமாறன் என்னும் இளவயது மனிதநேயப்
பண்பாளன் ஒருவர் இருந்து வருகிறார். அவரை அறிமுகபடுத்துவதே நம்முடைய
இந்தவார கட்டுரையின் நோக்கம்.
திருவண்ணாமலையிலிருந்து
10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது தலையம்பாளையம். இதுதான் மணிமாறனின்
சொந்த கிராமம்.ஒரு ஏழை விவசாய குடும்பத்தின் 3 வது மகன் தான் மணிமாறன், சில
காலத்துக்கு முன்பு வரை. ஆனால், இப்போது அவர் ஒரு சமூக சேவகர்.
அப்படித்தான் எல்லோரும் நினைகிறார்கள். ஆனால், அவர் ஒரு சமூக சேவகர்
மட்டுமல்ல. சமூகத்தையும் தாண்டி பொதுவெளியில் பயணித்து கொண்டிருக்கும் மனித
நேய பண்பாளன்.
தொடர்ந்து இந்த கட்டுரையை படிக்க http://sathiyamweekly.com/?p=2204
கருத்துகள்
கருத்துரையிடுக