போராடும் நரிக்குறவர்கள்
ஏதோ உலகத்தையே ஆண்டுவிட்ட திருப்தியில் திரிந்துக் கொண்டிருக்கும் முட்டாள் மனிதர்களின் மத்தியில், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்களின், ஒவ்வொரு நாள் வாழ்வியல் போராட்டங்களையும், அவலங்களையும் ஓரளவுக்காவது வெளி உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என போராடிகொண்டிருக்கும் வெகு சாதாரன மனிதர், மகேந்திரன்.
திருச்சிராப்பள்ளியை அடுத்த திருவெரும்பூர் அருகேயுள்ள தேவராயனேரிப் பகுதியில்தான் தன்னுடைய குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருடைய மனைவி சீதா, மகள் ஸ்வேதா, மகன் அருண்குமார் என இவருடைய குடும்பம் மிகவும் சிறியது. ஆனால் இதற்கு நேர்மாறாக இவருடைய கொள்கைகள் விசாலமானவை.
கடந்த 25 ஆண்டுகாலமாய் நரிக்குறவ மக்களின் முன்னேற்றத்துக்காய் போராடும் மகேந்திரன், தமிழ் நாடு நரிக்குறவர் பழங்குடியினர் இயக்க தலைவர் பொறுப்பையும் திறம்பட ஏற்று அந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்த முயற்சித்து வருகிறார்.
தொடர்ந்து இந்த கட்டுரையை படிக்க http://sathiyamweekly.com/?p=5294
கருத்துகள்
கருத்துரையிடுக