வித்யா
கட்டுரை: கிரி (செய்தியாளர்)
பெண் சுதந்திரம் பேசும் இந்தியாவில் ஆண் ஆதிக்கம் தனது அடக்குமுறையை இன்னும் செயல்படுத்திக்கு கொண்டு தான் இருகின்றது.
வன்கொடுமை, சித்ரவதை, அடிமைத்தனம் என பல்வேறு பரிமாணங்களில் கொடுமைகள் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்றன.
ஆண்களின் ஆசைக்கு இணங்காத பெண்கள் சிதைக்கப்பட்டு ,தினமும் செத்துமடிவது சாதாரணமாகிப் போனது இந்த தருணம் வரை.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது இரு மனங்கள் இணைவதன் மூலமாக.
ஆனால், காதல் வயப்பட்ட ஆண்கள் அதை ஏற்றுக்கொள்ள,
பெண்கள் மறுக்கும் போது தீராக் கோபம் கொள்கின்றனர்.
வெறிகொண்ட அவர்கள் பெண்களை சித்திரவதை செய்ய சிறிதும் தயங்குவது இல்லை.
இப்படிப்பட்ட கொடுமைகளில் இருந்து வித்யாவும் தப்பவில்லை.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் வித்யா தனியாருக்குச் சொந்தமான கணினி மையத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும் மென்பொறியாளர் விஜயபாஸ்கர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் வித்யா மீது காதல் கொண்ட விஜயபாஸ்கர் அவரை திருணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் காதலை ஏற்க மறுத்த வித்யா மீது கடுங் கோபம் கொண்டார்.
கொரத்தின் உச்சிக்கு சென்ற விஜயபாஸ்கரனின் ஒரு தலை காதல் வித்யாவையே பலி தீர்த்தது.
காதல் என்பதை புரிந்து கொள்ளாமல்,
பொறுமை காக்க தவறிய விஜயபாஸ்கர் கடந்த மாதம்
30-ம் தேதி கணினி மையத்தில் இருந்த வித்யாவை பார்க்கச் சென்றுள்ளார்.
இந்த விவகாரத்தில் வாக்குவாதம் முற்றி பிரச்சினையின் வீரியம் விரிந்தது.
சிறிதும் எதிர்பார்க்காத வித்யாவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
முன்னரே வித்யாவை தாக்குவதற்காக கொண்டு வந்த சக்தி வாய்ந்த அமிலத்தை அவள் மீது ஊற்றினார்.
அமிலம், சதையை கிழிக்கும் கத்தி போல உடலின் பல பகுதிகளில் ஊடுறுவிச் சென்றது.
வலியால் துடித்த அவர் மேலும் சுவற்றில் மீது தள்ளி தாக்கியுள்ளார்.
வித்யாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். உடல் வெந்து,
உயிர் ஊசலாடும் நிலையில்,
22 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வித்தியாவை மரணம் அழைத்துச் சென்றது.
காதல் என்பது கட்டாயத்தாலும்,
கட்டளையாளும் வரக்கூடியது அல்ல.
உணர்வுகள் மூலம் வரக்கூட்டிய இந்த உறவு,
உள்ளம் யாரை தேர்வு செய்கிறதோ அவரை தவிற மற்றவரை நினைப்பதில்லை.
இதை பலரும் புரிந்து கொள்ளதில்லை.
கடினமான பொருட்களை கரைக்க பயன்படுத்தும் அமிலத்தை,
பூ உடல் படைத்த பெண்ணின் மீது ஊற்றினால் அவள் எப்படி துடித்திருப்பால்.
இவ்வாறான கோரச் செயல்களை பெண்கள் எதிர்கொள்ளாத நிலையில் தான் இருக்கின்றனர்.
இதற்கு முன்னதாக அமிலம் வீச்சி்ல் பாதிக்கப்பட்ட வினோதினி இறந்து
2 வாரமே ஆன நிலையில் மற்றோரு ஆணாதிக்க செயல் நிகழந்திருப்பது அனைவரையும் தலைகுனிய வைத்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக