கருகும் பிஞ்சுகள்

பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வதும், தற்கொலை செய்து கொள்வதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பரவலாக பேசப்படுவதும் வருத்தத்திற்குரியதாகவே உள்ள நிலையில், தற்கொலைக்கு தள்ளப்படும் காரணம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் இருக்கிறது. கோவையில் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை. வேலூரில் அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை. தஞ்சையில் +2 மாணவர்தூக்கிட்டு தற்கொலை. மதுரையில் தனியார் பள்ளி மேல்தளத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை முயற்சி என வரிசையாக தற்கொலைகள் நிகழ்வதும் தற்கொலைக்கு முயல்வதும் நடந்து கொண்டேயிருக்கின்றன. பிள்ளைகள் நன்கு படித்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என விரும்பும் பெற்றோர்களுக்கு இது போன்ற தற்கொலைகள் பேரிடி அல்லாமல் வேறென்ன? தனியார் பள்ளிகள் அதிகரிப்பால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும், குறைந்த ஊதியத்தில் அவசர கல்வியை திணிக்கும் ஆசிரியர்களின் படுபாதக செயல்பாடுகள் தான் தற்கொலைகளுக்கு காரணம் என கூறி ஒதுக்கிவிட முடியவில்லை. அரசு பள்ளிகளிலும் மாணவர்க...