ராஜீவ்காந்தியை விட பெரிய மனிதர்

தரங்கம்பாடியில் இருந்து பொறையார் செல்லும் சாலையில் ராஜீவ்காந்தி சிலையருகே ஒரு மனிதரை சந்தித்தேன். பெரும்பாலும் அங்கேயே தான் இருக்கிறார். மனிதர் சிறிய பெட்டிக்கடை வைத்திருக்கிறார். இலேசான வெந்நிற தாடியில் வறுமை மறைக்கும் வயோதிகம். பெயர் என்னவென்று தெரியவில்லை என்றாலும், பார்த்த உடனே சிரித்து பேசும் முகம். பற்கள் உள்ளடங்கியிருந்ததால் சிரிக்கும் போது கண்ணத்தில் குழிவிழுந்தது. ரஜினியை நிறைய பிடிக்கும் என்றார். கபாலியை போல் போஸ் போட்டோவுக்கு போஸ் வேறு கொடுத்தார். ஒரு 3 ஆயிரம் ரூபாய்க்கு பெட்டிக்கடை வைத்துவிட்டார் போலும். மரசட்டங்களால் தைக்கப்பட்ட அந்த பெட்டிக்கடையில் ஒரு மனிதனுக்கு தேவையான கடைசி வாழ்க்கையை எளிதாக கடந்துவிடலாம் என்கிற நம்பிக்கையை தந்தது பார்வைக்கு. வெயிலும், மழையும் எப்போதும் கடையின் உள்ளே வந்து செல்லும் உப்பு காற்றி எளிய வாழ்க்கை. வாழ்ந்துதானே ஆகவேண்டும்..... இரண்டு மூன்று பிளாஸ்டிக் போத்தல்களில் முறுக்கு, தேன் மிட்டாய், கமருக்கட்டு இன்னபிற தின்பண்டங்கள்...அப்புறம் அவர். பெரும்பாலும் தொங்கிகொண்டிருக்கும் தின்பண்டங்களோடு அவரும் தொங்கியபடியே இருந்திருப்பதாக...