யாருக்கும் தெரியாமலா நடக்கிறது கொலை?

எதற்காகவென்றெல்லாம் காரணம் சொல்ல தேவையில்லை சமூகத்துக்கு ....... ஏதேனும் ஒருவகையில் சொட்டிக் கொண்டுதானிருக்கிறது களத்தில் ரத்தம் ....... காதலா, சாதியா, மதமா, கடனா, சொத்து தகராறா என்பதை தேடுவதிலேயே பெரும்பாலும் கழிந்து விடுகிறது காவல் தெய்வங்களின் பணி. கேள்வி எழுப்புகிற போதெல்லாம் கிழிந்த சட்டையை தைத்தே தப்பித்து கொள்கிறது கரிசன அரசு யாருக்கும் தெரியாமலா நடக்கிறது கொலை?