இந்த உலகம் பல்வேறு உயிரின சூழல்களால் நிறைந்தது. தொன்மையான மொழிகளையும் நாகரிகங்களையும் தன்னகத்தே கொண்டு காலம் காலமாய் சர்வ கணங்களிலும் பரிணாமத்தின் புள்ளியில் தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கின்றது. அப்படி, பரிணாமத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்களை எல்லாம் கடந்து உயிகளின் வரலாற்றில் ஓர் அடையாளமாய் இருப்பவன் மனிதன். அவன் மாறுவதற்கும், அவனால் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்ததற்கும் ஒரு வியாபார அமைப்பு முறை மிகப்பெரிய காரணமாயிருந்தது. ஆதிமனித காலம் கடந்த நிலையில், மனித நாகரிகத்தின் தொடக்கத்தில் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வியாபார முறை சந்தை என்பது. நெல்லை கொடுத்து பருப்பு வாங்கியதும், மீனை கொடுத்து தயிர் வாங்கியதும், உப்பு கொடுத்து அரிசி வாங்கியதும் சந்தைப் பாரம்பரியத்தின் ஒரு பகுதி. நம்முடைய கிராமத்து முடுக்குகளில் எங்கும் சுட்ட கிழங்கும், சோளமும், கள்ளும், கருவாட்டின் மனமும் பரிமாறிக் கொள்ளப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. எல்லா உயிரினங்களையும் போல மனிதர்களுக்கும் பசி ...
கருத்துகள்
கருத்துரையிடுக