மாப்ள எப்ப கல்யாணம்?
என்னுடைய
நண்பர்கள் என்னிடம் கேட்க்கிற கேள்விகளில் இப்போதெல்லாம் பெரும்பாலும்
திருமணம் பற்றியதும் இருக்கிறது. மாப்ள எப்ப கல்யாணம்? ஏன்டா,..
நாங்கல்லாம் பண்ணியாச்சு, நீ இன்னும் செஞ்சுக்காம இருக்கியேடா? என்று என்னை கேட்டு வைப்பார்கள்.
எனக்கு இந்த கேள்வியை மட்டும் எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் குழம்புவேன். அந்த சமயத்தில் என்னைவிட வயதில் மூத்தவர்கலெல்லாம் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதுபற்றி நினைப்பேன். பெண் பிள்ளையாயிருந்தால் பரவாயில்லை. இன்னும் அடுத்தடுத்த பிள்ளைகள் இருப்பதால் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும். அல்லது குடும்ப சூழல் பொருட்டு திருமணம் நடந்தேறும். ஆனால், அது அல்லவே எனக்கு. இருந்தாலும் வாய் நடுக்கம் காட்டாது பதிலுரைக்கும் அவர்களுக்கு. பாக்கலாம் இப்ப என்ன அவசரம் என்று?
திருமணம் என்ற வார்த்தையை எடுத்ததும் எனக்கு நண்பன் முரளிதான் உடனே ஞாபகத்துக்கு வந்தான். அவனை உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு அறிமுகம் செய்வதென்றால் இந்த பக்கம் முழுவதும் நீங்கள் படிக்கவேண்டிவரும். முடிந்தால் படித்துப் பாருங்கள். ஒரு முறை நண்பன் முரளியை பார்க்க பக்கத்து கிராமம் வரை சென்று இருந்தேன். என் கிராமத்துக்கு அடுத்த கிராமம்தான் நாட்டார்மங்கலம். அங்குதான் முரளி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தன் தாய் தந்தையரோடும் சகோதர சகோதரிகளோடும் மகிழ்ச்சியோடு வாழ்ந்துவந்தான்.
ஆனால், இப்போது அவன் தனிமனிதன் அவனுக்கென்று ஒரு நல்ல மனைவி அமைந்தது அவன் கொடுப்பினைதான். நான் ஊருக்கு செல்லும் தருவாயில் அவனை பார்த்து விசாரிப்பதுண்டு. ஏனெனில், அவன் பேருந்து நிலையத்துக்கு அருகில்தான் தன்னுடைய ஆட்டோவை நிறுத்தி வைத்திருப்பான். அதனால், அவனை பார்ப்பது எளிது. பயணிகள் வராத சமயங்களில் ஆட்டோவின் உள்ளே காலை நீட்டி படுத்திருப்பான். அவன் கழட்டி போட்ட சட்டை ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியில் தொங்கிக் கொண்டிருக்கும். அதை அருகிருந்து பார்க்கும்போது ஏனோ வருத்தமாயிருக்கும்.
நாங்கள் நடுநிலை கல்வியை ஒன்றாக ஒரே பள்ளியில் கற்றவர்கள். முதுகில் புத்தக பையை தூக்கி சுமந்த அப்போதுதான் எங்கள் நட்பு வளர ஆரம்பித்திருந்தது. அந்த நாட்களில் அவன்தான் எங்கள் நண்பர் கூட்டத்தின் தலைவனாயிருப்பான். அப்போதெல்லாம் நடந்து செல்வது ஒன்றே பரிச்சயம் எனக்கு. முரளி என்னைவிட இரண்டுவயது மூத்தவன் இருந்தாலும், வயது வித்தியாசம் பாராமல் வாடா போடா வென்றுதான் ஆரம்பிக்கும் எங்கள் பேச்சு. தன்னுடைய கவலைகளை ஒரு போதும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டான்.
முரளிக்கு அந்த ஊரில் நிறைய நண்பர்கள் இருந்தார்கள். இடையிடையே நான் அவனை பார்க்காமல் கூட இருந்திருக்கிறேன். வாழ்க்கையின் அவசரத்தில் நாங்கள் ஆளுக்கொரு திசையில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும், எங்கள் நட்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதோ, அவனுடைய திருமணத்துக்கு பிறகும்கூட மனது திருப்தி பட்டுக் கொள்கிறது அவனை பார்க்கும் சமயங்களில்.
முரளிக்கு இரண்டு அண்ணன்கள் இரண்டு அக்காக்கள். எல்லோருக்கும் திருமணம் முடிந்து அவரவர் வேலையை கவனித்து கொள்வதே பெரும் பாடாய் கருதுகிற சமயத்தில்...அம்மாவின் மரணம் நிகழ சகோதர பந்தம் திறந்து எல்லோரும் தனித்து வாழ வேண்டிய நிர்பந்தம் முரளிக்கு ஏற்பட்டது. முரளி மட்டும் வெள்ளை முடி படர்ந்த அப்பாவோடு அதே பழைய மண் சுவற்று வீட்டில் வசிக்க நேர்ந்தது.
அம்மா இருந்தவரைக்கும் எதுவும் தெரியாமல்தான் இருந்தது. அம்மாவின் மரணம் நிகழ்ந்த பின்புதான் இவர்கள் இருவருக்கும் இன்னும் கஷ்டம் வந்து சேர்ந்தது. ஒவ்வொரு நாளின் அத்தியாவசிய வேலைகளை செய்வதில் கூட சிறிது தேக்கம் இருந்தது. ஏனென்றால், இவர்கள் மூவரும்தான் அதே பழைய வீட்டில் வசித்து வந்தனர். சில காலங்களில் அம்மாவுக்கு மூலையில் ரத்த கசிவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பலனளிக்காது எல்லோரையும் விட்டு பிரிந்தது போனார். அந்த நிகழ்வுக்கு பிறகு பெரும்பாலும் அப்பா நடைபிணமாய் தான் வாழ்ந்தார்.
அம்மா உயிரோடிருக்கும் போதாவது வண்டிமாடுகளை மேய்ப்பதற்கு ஒட்டி செல்வது, வண்டியை பூட்டி மண் அடிக்கவோ வேறேதேனும் வேலைக்கு செல்வது இன்னும் வைக்கோல் போர் ஏற்றுவது சூளையிலிருந்து கள் ஏற்றி செல்வது போன்று வேறு எதையாவது செய்துகொண்டே இருப்பார். அம்மா இறந்துவிட்டப் பிறகு அவருடைய அனைத்து செயல்பாடுகளும் குறைய ஆரம்பித்துவிட்டன.
அதுவும் கூட சில நாட்கள் இல்லாமல் எங்கேயோ வெறிக்க பார்த்தபடி உட்க்கார்ந்திருப்பார். பார்வையும் தட்டு தடுமாறித்தான் தெரியும். யார் உள்ளே சென்றாலும் யாரது? என்கிற கேள்வி சட்டென தெறித்து விழும் அவரிடமிருந்து, முரளிக்கும் சேர்த்துதான். இப்போதெல்லாம் மூச்சு விடுவதுகூட சற்று சிரமமாகத்தான் இருக்கிறது என்று போன வாரம் தான் அவனிடம் சொல்லியிருந்தார்.
அம்மா இருக்கும்போது ஏதேனும் நாலு வார்த்தைகளையாவது ஒரு நாளைக்கு பேசி வைப்பார். இப்போது அதுவும் குறைவுதான். யாரிடம் பேசுவது? எல்லோரும் முன்பை போலவா இருக்கிறார்கள்? அப்படியே பேசினாலும் அதையெல்லாம் கேட்டுவைக்க யார் நமக்கு இருக்கிறார்கள்? இப்படியாகத்தான் யோசிப்பார். அதனாலேயே பெரும்பாலும் அமைதியே நிலவியது அந்த வீட்டில்.
அப்படியே அவர் பேசினாலும் அதனால் யாருக்கும் தொந்தரவு வந்ததில்லை இதுவரை. சரி போனால் போகிறதென்று பொழுது சாயும் நேரம் வரை முரளிக்காக காத்திருப்பார். அந்த சமயங்களில் மூத்த மகன்களும் அவர்களின் மனைவி குழந்தைகளும் இவரை பார்த்துக் கொள்வர். பள்ளிக்கூடம் முடிந்து வரும் பேரப் பிள்ளைகளோடு அளவளாவுவார், அதில் அவருக்கு ஒரு திருப்தி.
காலையில் குளித்து முடித்துவிட்டு ஆட்டோவை ஓட்டி செல்லுகிறவன், இரவு நேரத்தில்தான் வீடு திரும்புவான். வீட்டில் சாப்பாடு மிச்சமிருந்தால் ஒழிய மதியம் வீடுவந்து சேரமாட்டான். போகிற போக்கில் ஏதேனும் கடையில் 2 பரோட்டா அவ்வளவுதான். கடையில நிம்மதியா சாப்பிட என இருக்கு? வீட்டில் யார் இருக்கிறார்கள் நல்ல உணவு செய்து தர? அதோடு கூட நேரம்காலம் பார்க்காமல் ஆட்டோ ஓட்டுவதால் பசியும் சரியான நேரத்துக்கு எடுக்காது.
முரளி முன்பை விட கொஞ்சம் இளைத்திருப்பதாய் பட்டது எனக்கு. வருத்தமாகத்தான் இருந்தது. அம்மாவின் இறப்புக்கு பிறகு அப்பாவை போல வாழ்க்கையை மயான அமைதியோடு ஏற்றுக் கொண்டுவிட்டானா முரளி? அதனால்தான் தன்னுடைய எதிர்காலம் பற்றி யோசிக்காமல் பயணிக்கிறானா அவன்? என்றெல்லாம் தோன்றும் எனக்கு.
பகல் நேரத்திலேயே இருள் சூழும் தெற்கு முகம் பார்த்த வீட்டுக்குள் மிதமான வெளிச்சம் பரவியிருக்க உத்திரத்துக்கு கீழே கிடந்த கட்டிலில் வழிந்தொழுகும் வியர்வையை ஒரு சிறிய துண்டால் துடைத்தபடி கண்களை லேசாக மூடி அப்பா ஒருக்களித்துப் படுத்திருந்தார். கவனிப்பாரற்று உடல் தளர்ந்து காணப்பட்டார். வெளியில் வெய்யில் காய்ந்துகொண்டிருந்தது. கண்களை எத்தனை காலத்துக்கு தான் அந்த இருட்டுக்குள்ளேயே வைத்திருப்பது என்று நினைத்திருப்பார் போல.
திடீரென எழுந்து யாருமில்லாத சமயத்தில் வெளித் திண்ணையில் வந்தமர்ந்து கொண்டு சுவற்றில் முதுகை சாய்த்து முன் பக்கம் இரண்டு காலகளையும் நீட்டி வைத்துகொள்வார். வெள்ளை தலை முடியையும், தாடியையும் தடவி தடவி பார்த்தபடி யாரையேனும் எதிர்பார்த்தபடி உட்க்கார்ந்திருப்பார்.
பல நேரங்களில் அண்ணன்களும் சகோதரிகளும் அவ்வபோது வந்து மருந்து மாத்திரை கொடுப்பதும் அவருக்கு பிடித்தமான உணவு வகைகளை செய்து தருவதும் நடக்கத்தான் செய்யும். அப்படி ஒருநாள் எல்லோரும் வந்திருந்த பொழுது தன்னுடைய மூத்த மகனோடும் மற்றொரு மகனோடும் முரளியை பற்றி பேசிக் கொண்டிருந்தார். எப்பா...எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருப்பது அவனுக்கும் ஒரு நல்ல பெண்ணா பாத்து முடிசிடலாம்பா என்றார். அவரின் யோசனை எல்லோருக்கும் சரியாகத்தான் பட்டது.

இவனுக்கு அழுகை கண்ணை அடைத்தது. ஆனால், வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை. அக்காவை பார்க்காமலேயே நன்றாக இருப்பதாக தலையசைத்தான். வடிந்த கண்ணீரை முகத்திலடித்த நீரோடு சேர்த்து துடைத்தெடுத்தான். அக்கா கண்ணில் ஏதோ தூசு விழுந்துவிட்டதாக கருதி ஊதி விட்டாள்.
அப்போதுதான் அப்பா வாய் திறந்தார். நல்ல பெண்ணாயிருக்குப்பா,..என்றார். முரளி ஒன்றும் புரியாமல் அண்ணனை பார்த்தான். அண்ணன் ஆமாண்டா முரளி உனக்கு ஒரு பெண் பாத்துருக்கோம். நீ பாத்துட்டு சரின்னு சொன்னா முடிசிடலாம்டா என்றார். இன்னும் எத்தன காலத்துக்குத்தான் கல்யாணம் பண்ணாம இருக்கறது. அவருக்கும் வயசாயிருசில்ல. அப்பா மேலும் ஏதோ முனு முனுத்துகொண்டே சுவரிலிருந்த அம்மாவின் படத்தை பார்த்தார். அது அவனை ஏதோ செய்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனாலேயே அப்போது திருமணத்துக்கு சம்மதித்தான் முரளி.
அதோடுகூட, எல்லோரிடமும் சிரித்து பேசி வாழ்கையை சந்தோஷமாக நகர்த்திக்
கொண்டிருந்தவனுக்கு அம்மாவின் இறப்புக்கு பிறகான அமைதி ஒருவித வெறுப்பை
வாழ்க்கை மீது ஏற்ப்படுத்தி இருந்தது. அதன் காரணத்தாலும் கூட அப்பா இந்த திருமணத்தை நடத்த விரும்பியபோது அவன் ஒத்துகொண்டான் எனலாம்.
அவன்
திருமணத்துக்கு அவனோடு சேர்ந்து எல்லோருக்கும் சொல்லிவிட்டு வந்த பங்கு
எனக்கும் கொஞ்சம் உண்டு. ஆனால், திருமணத்தில் மட்டும் என்னால் கலந்துகொள்ள
முடியவில்லை. அவன் மனைவியோடு அவன் நடந்து செல்கையில் பார்க்குமிடமெல்லாம் திட்டினான். நான் கேட்ட மன்னிப்பை நிராகரித்தான்.
சில
மாதங்களுக்கு முன்பு ஊர் நண்பர்களிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.
என்னவென்று விசாரித்தேன்..."முரளியோட அப்பா இறந்துட்டருடா" முடிஞ்சா
வந்துட்டு போ என்றனர் நண்பர்கள்.
எனக்கு அவரைப் பற்றி
நினைக்கும்போதெல்லாம் கட்டைவண்டியில் வைக்கோல் போர் ஏற்றி செல்கிறபோது
சிரித்துக்கொண்டே என்னை பார்த்து கையசைக்கிற காட்சிதான் ஞாபகத்துக்கு
வரும். அவர் வண்டியில் செல்லும்போது என்னை பார்த்தால் நிச்சயம் அவரை எனக்கு
நலம் விசாரிக்க தோணும். அவருடைய உயிர் பிரியும் பொது எந்த வண்டியில்
சென்றது என்று மட்டும் தெரியவில்லை எனக்கு.ஒரு வேலை தெரிந்திருந்தால் அப்போதும்கூட அவரிடம் நலம் விசாரித்திருப்பேன் நான்.
அன்று நானும் சிவாவும் முரளியை பார்க்க போன போது எதிர்பாராத தருணத்தில் நாங்கள் வந்தது கண்டு
அவன் மகிழ்ந்துதான் போனான். அவன் சிரித்த முகத்தோடு தண்ணீர் கண்டு வந்து
தந்தது அந்த சூழலை திருப்தி படுத்தியது. அந்த பெண்ணிடம் எங்களை அறிமுகம்
செய்வித்தான். அப்போது வாசலில் அடுப்பில் புளிக்குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது காற்றில் கலந்து எங்கள் மூக்கை துளைத்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக