ச்சீ...என்ன வாழ்க்கை இது?
அழுக்குகள் சிறைபட்டடைந்து
தூய ரத்தம்
தமணியில் பரவுகிறதை போல்...
அனைத்து நிலைகளிலும்
அலைந்து - திரும்பி
நிதானமடைகிறது மனம்.
காகித குப்பைக்கும்
காலத்துக்கும் நடுவே
பற்றுகம்பியில்லாமல்
படபடத்தபடி - பயணிக்கிறது
என் வாழ்க்கை.
இருள் சூழ்ந்த அறையில்
யாருக்காகவோ
தனிமையில் சுற்றிகொண்டிருக்கும்
காற்றாடியாய் நான்.
வெவ்வேறு பாவனைகளோடு
வந்து கடந்துசெல்கின்றன
எங்கெங்கோ பார்த்த
முகங்கள்.
எண்ணிலடங்காத கேள்விகளோடு
பொறுக்கமாட்டாது தகிக்கின்றன
குளிரூட்டப்பட்ட என் அறைகள்.
எங்கேயோ வெறித்தபடி
நிலைகுத்தி நிற்கின்றன
இயற்கைமீது காமுற்ற
என் கண்கள்.
ச்சீ...என்ன வாழ்க்கை இது?
எத்தனை முறை புரண்டும்
விளங்கவேயில்லையே!
பொறுக்கமாட்டாது தகிக்கின்றன
குளிரூட்டப்பட்ட என் அறைகள்.
எங்கேயோ வெறித்தபடி
நிலைகுத்தி நிற்கின்றன
இயற்கைமீது காமுற்ற
என் கண்கள்.
ச்சீ...என்ன வாழ்க்கை இது?
எத்தனை முறை புரண்டும்
விளங்கவேயில்லையே!
கருத்துகள்
கருத்துரையிடுக