வீரப்பெண் குயிலி
கட்டுரை: அருள்செல்வி (செய்தியாளர்) புராணங்கள் , இதிகாசங்கள் , மத அடிப்படை சடங்குகள் , ஐதீகங்கள் இவைகள் அனைத்தும் பெண்களை முன்னிலைப்படுத்தி பாதுகாத்து வந்தாலும் , சீதை , கண்ணகி போன்றவர்கள் வரலாற்றில் மிகக் குறுகிய வட்டத்திற்குள்ளேயே கற்புக்கரசிகளாக சித்தரிக்கப்பட்டனர் . பெண்களை பிற்போக்குத் தனமாக சித்தரிக்கின்ற இதுபோன்ற புராணக்கதைகளை நன்கு அறிந்தவர்தான் வேலுநாச்சியார் . இவருடைய நெருங்கிய தோழியாக இருந்தவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரப்பெண் குயிலி . சிவகங்கைச் சீமையின் போராட்ட வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் , குயிலியின் தந்திரமான , தைரியமான வீரச்செயல் நமக்குப் புரியும் . நம்மையும் வீறு கொண்டெழச் செய்யும் . மறக்க முடியாத நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப்பெண் குயிலி அப்படி என்னதான் செய்தார் ?...... 18 ம் சிவகங்கைச் சீமை சீரும் சிறப்புமான சீமையாக இருந்தது . அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல் . ஆற்காடு நவாப் ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை . அப்படி ஆசைப்பட்ட இடங்களில் ஒன்ற...